Sunday, December 29, 2013

மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி? how to escape from wife

ஹரி பத்த வச்ச அடுப்புல ஆவி, சீனு, வச்ச சுடுதண்ணியையும், பிரகாஷ் அவிச்ச முட்டையையும் கணேஷ் அண்ணா சாப்பிட்டு கழுவப் போட்ட பாத்திரத்தை ராஜா கழுவி காய வச்சதை எடுத்து உருப்படியா பிளாக்குல எழுதாம மொக்கைப் போட்டு கொல்லும் பதிவர்கள் மேல் அவர்கள் வீட்டம்மாக்கள் பாத்திரம் எறிவது எப்படின்னுதான் இன்னைய பதிவுல பார்க்கப் போறோம் என்று சொல்லி நமது சகோ ராஜி அவர்கள் போட்ட பதிவை ( சுடுதண்ணி,டீபோட்டு சாப்பிட்டு கழுவியபாத்திரத்தைக் கொண்டு அடிப்பதுஎப்படி!?) இன்றுதான் பார்த்தேன். இப்படி எல்லோரும் மொக்கை பதிவை போட்ட பின் நானும் மொக்கை பதிவை போடவில்லையென்றால் இந்த பதிவுலகம் மதுரைத்தமிழனை ஒதுக்கி வைத்து விடும் என்பதால் இந்த பதிவு...

இந்த் ஆண்டு முடியப்போவதால் மக்கள் கொஞ்சாமாவது சந்தோஷமாக இருக்கட்டுமே என்று ஒதுங்கி இருந்த என்னை இந்த பதிவு தட்டி எழுப்பியதால் இதை வெளியிடுகிறேன்.


மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?


இதற்கு தேவையானவைகள் ;
மனைவி,
கைகள்,
தைரியம்,
எதையும் தாங்கும் இதயம்
ஹெல்மேட்

1. மனைவி அடிக்க வரும் போது அவர்கள் வரும் வேகத்தைவிட நாம் அவர்களை நோக்கி வேகமாக சென்று அவர்களை அணைத்து கண்ணா பின்னா என்று அவர்கள் முகத்தில் முத்தம் இட வேண்டும் முத்தம் என்றால் ரொமண்டிக்கா முத்தமிடுவதை சொல்ல வில்லை..முத்தமிட்ட பின் அவர்களின் முகத்தில் நாம் எச்சில் துப்பியதை போல நமது ஜொள்ளு அவர்கள் முகத்தில் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் அவர்கள் உடனே அந்த இடத்தில் இருந்து முகத்தை அழம்ப வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். இப்படி நாம் இடும் முத்தத்திற்கு பயந்து அவர்கள் நெக்ஸ்ட் டைம் நம்மை அடிக்க வர பயப்பட வேண்டும்.

2. அடுத்ததாக அவர்கள் நம்மை அடிக்க வரும் போது அவர்களை விட பாஸ்ட்டாக நமக்கு ஒடத் தெரிந்து இருக்க வேண்டும். இதற்காக தினசரி காலையில் அவர்களுக்கு தெரியாமல் ஒடும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

3. வீட்டில் அடிக்க உதவும் கருவிகளான பூரிக்கட்டை போன்ற ஆயுதங்களை மிக அதிக எடை உள்ளதாக வாங்கி வைத்து விட வேண்டும் அப்படி செய்வதால் அதை அவர்களால் எளிதில் தூக்கி அடிக்க முடியாது.

4. முடிந்தால் மனைவிக்கு ஒழுங்காக சமைத்து போடக் கூடாது அப்படி செய்வதால் அவர்கள் உடல் வீக்காக இருக்கும் அதனால் அவர்களால் நம்மை வலிக்கும் அளவிற்கு அடிக்க முடியாது அல்லது நன்றாக அவர்கள் ருசித்து சாப்பிடும் அளவிற்கு சமைத்து போட்டு நிறைய சாப்பிட வைத்துவிட வேண்டும் இப்படி செய்வதால் அவர்கள் மிக குண்டாகி மிக வேகமாக வந்து நம்மை அட்டாக் செய்ய முடியாது. நல்லா கவனிச்சுக்குங்க ஒன்று குண்டாக இருக்க வேண்டும் அல்லது ஒல்லியாக இருக்க வேண்டும் ஆனால் நம்ம சகோ ராஜி மாதிரி இருந்தால் கடவுளைதான் வேண்டிக் கொள்ள வேண்டும் )

5. அடுத்தாக அவர்கள் நம்மை அடிக்கும் போது நாம் முகத்தில் எந்த வித உணர்ச்சியை காண்பிக்காமல் ( நமக்கு வலித்தால் கூட) எருமை மாடு மாதிரி இருக்க வேண்டும் அப்படி செய்வதால் இந்த எருமை மாட்டை அடித்தாலும் ஒன்றுதான் அடிக்கவில்லை என்றாலும் ஒன்றுதான் என்று அவர்கள் முடிவுக்கு வர வேண்டும்.

6. அதுவும் இல்லையென்றால் அவர்கள் அடிக்க வரும் போது வீட்டை விட்டு ஒடிப் போய்விட வேண்டும் இல்லையென்றால் வீட்டில் உள்ள பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்து ஒழிந்து கொள்ள வேண்டும்.

7. அதுவும் இல்லையென்றால் நம் தமிழ் கதாநாயர்களிடம் சென்று வில்லன்கள் பெரிய உருட்டுகட்டைகளால் அடிக்கும் போது அந்த உருட்டுகட்டை சுக்கு நூறாகி போவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொள்ள வேண்டும்.

8.அதுவும் இல்லையென்றால் அடிக்க வரும் போது மாமனார் போல உடனடியாக மாறு வேஷம் போட்டுக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் அடிக்க வரும் உங்கள் மனைவிக்கு குழப்பம் ஏற்பட்டுவிடும்.

9. அதுவும் இல்லையென்றால் உடம்பு முழுவது கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

10. அதுவும் இல்லையென்றால் அடிக்க வரும் போது சாமி படத்திற்கு முன் நின்று மிகவும் பக்தியாக சாமி கும்பிட ஆரம்பித்து விட அப்படி செய்தால் பக்தனை கடவுள் காப்பாற்றும்.

11. அல்லது ராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும்

இந்த அறிவுரைகள் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவ வில்லையென்றால் பேசாமல் சந்நியாசம் வாங்கி இமயமலை அடிவாரத்திற்கு சென்று விட வேண்டும்..

இதெல்லாம் அனுபவ உண்மைகள்.

இந்த அனுபவ உண்மைகளை பயன்படுத்தி உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் எப்படி தப்பித்தீர்கள் என்பதை பின்னுட்டமாக போடவும்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

15 comments:

  1. பூரிக்கட்டை சாத்தலுக்கு எல்லாம் பயப் [[அவ்வ்வ்வ்]] படுற ஆளுங்க நாங்க இல்லே.

    ReplyDelete
  2. இதெல்லாம் ஜுஜுபி....! ஹா... ஹா...

    ReplyDelete
  3. தேவையான பொருட்களில் ஹெல்மேட் உள்ளது.
    ஆனால் செய்முறையில் அது பயன் படுத்திய மாதிரி தெரியலையே
    நானும் கண்ட்ரோல் +எ ஃ ப் கூட போட்டு தேடிப் பார்த்தேன் .

    ReplyDelete
    Replies
    1. ஹெல்மேட் கவச உடையில் அடங்கி இருக்கு... பாயிண்ட் நம்பர் 9

      Delete
  4. இவ்வளவு பாய்ண்ட்ஸ் இருந்துமா டெய்லி பூரிக்கட்டையால அடி வாங்குறீங்க?

    ReplyDelete
  5. நான் திருப்பதில இருக்கேன். வந்து பதில் சொல்றேன்

    ReplyDelete
    Replies
    1. சகோ, இதுக்கு பதில் வேறயா!!! சரியான போட்டியா இல்ல இருக்கும் போல.

      Delete
  6. கட்டி வைச்சு அடிக்கணும்....

    ReplyDelete
  7. சொல் பேச்சை கேட்கலைன்னாதான இவ்வளவும்... ?என்ன சொன்னாலும் பேசாம மண்டைய ஆட்டினா போனா போவுதுன்னு விட்டுடறோம்........... !

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஹா செம தமாஸ்பா....சகோ ராஜி அவர்களின் இடுகையைப் படித்த உடனேயே உங்கள் பதில் வரும் என்று தெரிந்ததுதான்......

    அதெல்லாம் சரி,,,"இதெல்லாம் அனுபவ உண்மைகள்!!!" அப்படியென்றால் உங்களுக்கு இந்த 11 லும் எதுங்க உதவிச்சு?!!!! 11 க்கு அப்புறமா கடைசியாகச் சொன்னதை யோசிட்டு இருக்கீங்களா?!!!!!!

    ReplyDelete
  9. என்னா பயனுள்ள அனுபவ்க குறிப்புகள்! ஒரு சிலது நான் பயன்படுத்திப் பார்த்தவையாக்கும்...! ஆனா.... 3வது ஐடியா விபரீதமாப் படுது எனக்கு. கொஞ்சம் பல்லைக் கடிச்சுட்டு, ஆவேசத்துல தூக்கி வீசிட்டா.... அப்றம் நம்ம கதி? மாட்டி விடுறியேப்பா மதுரைத் தமிழா! அவ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  11. வாங்க, வாங்க இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனா. இந்த முதல் ஐடியாவில ஆபத்து இன்னும் கூடும். அவுங்க முகத்தை கழுவிட்டு, என் முகத்தை எச்சில் பண்ணிட்டீயேன்னு இன்னும் 4 சாத்து சாத்துனா என்ன பண்றது தலைவரே!!

    ReplyDelete
  12. நினைத்தது போலவே நல்ல ஐடியாக்களோடு களத்தில் குதித்து விட்டார் மதுரைத் தமிழன்.

    எல்லாரும் குறிச்சு வைச்சுக்கோங்கப்பா!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.