உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 11, 2013

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்


அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்

1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்

2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் முழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்.

3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம் தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்

4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம்

7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு  சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்

8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருந்தால் அது உலக அதிசயம்

9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

11.  செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்

12 . விகடன் குழும பத்திரிக்கைகளில் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருந்தால் அது உலக அதிசயம்

13.  ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருந்தால் அதிசயம்

14.  கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருந்தால் அது உலக அதிசயம்

15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ் மக்கள் நலனுக்காக ஆரோக்கியமாக விவாவதித்தால் அது உலக மகா அதிசயம்.16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுத்தால் இருந்தால் அது உலக அதிசயம்

17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருந்தால் அது உலக அதிசயம்

18.  தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருந்தால் அது உலக அதிசயம்

19. தன் பொண்டாட்டியை விட அடுத்தவன் பொண்டாட்டி நல்லவளாக இருப்பாள் என்று நினைக்காத ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்.

20. இறுதியாக இப்படி ஒரு மொக்கை பதிவுகள் போடாமல் இந்த மதுரைத்தமிழன் பதிவுகள் எழுதினால் அது உலகமாக அதிசயம்


எனக்கு இதெல்லாம் உலக அதிசயமாக இருக்கிறது அப்ப உங்களுக்கு ?

என்னங்க நான் இப்படி அதிசயங்களை சொல்லி உங்களை அசத்திருக்கிறேன், உங்களால் முடிந்தால் இது மாதிரி உங்கள் மனதில் தோன்றும் அதிசங்களை பின்னுட்டத்தில் சொல்லி நீங்களும் அசத்தலாமே

அன்புடன்
மதுரைத்தமிழன்


9 comments :

 1. உலக அதிசயங்களை ரசித்தேன்

  ReplyDelete
 2. எல்லாவற்றையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள் , நாங்கள் யோசிக்கிறோம்

  ReplyDelete
 3. மிக அருமை
  வித்தியாசமாக அருமையாக யோசிக்கிறீர்கள்
  சுவார்ஸ்யமாகத் தருகிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஹா... ஹா... எப்படீங்க இப்படி...?

  ரசிக்க வைக்கும் ரகசியங்கள்...

  ReplyDelete
 5. மாஸ்டர் என்ன கேள்வியா கேட்டுபாடம் பதிவுகள் ம்ம் 1234 எல்லாம் அதிசயமல்ல மீதியெல்லாம் அதிசயத்தில் வருதோ இல்லையோ 20 ரொம்பவே சரி கூடவே கலாய்க்காமல் எனும் வார்த்தையும் சேர்த்துகோங்க

  ReplyDelete
 6. ஆக மொத்ததுல நீங்க பெண்களை குறை சொல்லிட்டே தான் இருப்பீங்க.

  நீங்க குறை சொல்லாமலிருந்தால் அதுவே உலக மகா அதிசயம் நண்பரே.

  வித்தியாசமான சிந்தனை . அருமை.
  பிடித்தவை 1,2,5,8 அடுத்து இடையிடையே ஒரு 3 பாயிண்ட்ஸ், இறுதியாய் 20.

  ReplyDelete
 7. உங்க வலை உலகமே ஒரு அதிசயமா இருக்கு நண்பா. அசத்திட்டீங்க :-)

  என் மனதில் தோன்றும் அதிசியங்களை பற்றி கேட்டிங்கன்னா நான் ஒன்னே ஒன்னு தாங்க சொல்லுவேன்.

  நம்ம ஊர்ல ஒரு நாளாவது இருப்பத்து நாலுமணி நேரமும் மின்சாரம் தடை இல்லாம இருந்துச்சின்னா அது தாங்க உலக அதிசயம் :-)


  ReplyDelete
  Replies
  1. excellent ! keep it up ! vazhka valamudan !

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog