உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, May 20, 2012

காபி வித் அனுவுடன் அல்ல காபி வித்த ஆயாவுடன் மதுரை தமிழன்


காபி வித் அனுவுடன் அல்ல காபி வித்த ஆயாவுடன் மதுரை தமிழன்
 
ஆயா படத்தை போட்டால் கண் திருஷ்டி ஆகிவிடும் என்பதால் அனு படத்தை மட்டும் இங்கு வெளியிட்டு உள்ளேன்


பாட்டியம்மா : எழுத்தாளர் சோ மூச்சைடைப்பு வந்து ஹாஸ்பிடலில் இருக்காராமே அவருக்கு என்னப்பா ஆச்சு?
மதுரைத்தமிழன் : பாட்டியம்மா அது ஒன்னும் இல்லையம்மா ஜெயலலிதா அவர்கள் ஒராண்டில் செய்த சாதனைகள் என்ற புத்தகததை பார்த்ததும் சோவுக்கு மூச்சைடைப்பு வந்து விட்டதாம். அப்புறம் ஜெயலிதா அவர்கள் போய் பார்த்து உண்மை நிலைமையை எடுத்து சொன்னதுதான் அவர் மூச்சுநிலமை ஒரளவுக்கு சீராச்சாம்.


பாட்டியம்மா : ஜெயலலிதா அவர்கள் ஒராண்டில் செய்த சாதனைகள்தான் என்ன மதுரைத்தமிழா?
மதுரைத்தமிழன் : பாட்டியம்மா அவர் ஒராண்டில் செய்த சாதனைகள்தான் என்ற புக்கை போட்டதை தவிர வேற ஏதும் சாதனை செய்யலை பாட்டியம்மா


பாட்டியம்மா : நம்முடைய பாவங்களை கடவுள் மன்னிக்கணும்னா நாம என்ன செய்யணுமடா?
மதுரைத்தமிழன் : பாட்டியம்மா நாம அரசியல் வாதிகளாகி அதிக பாவங்களை செய்ய வேண்டும் அப்பதான் கடவுளால் நம்மை மன்னிக்க முடியம். அதனாலதான் கடவுள் ஏமாற்றம் அடையக் கூடாதுன்னு இந்த அரசியல்வாதிகள் இப்படி பாவம் செய்கிறார்கள்.

பாட்டியம்மா :நடிகர்கள் நாட்டுக்கு தலைவர்களாகி  நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்களே .அதை பற்றி என்ன சொல்லுகிறாய் மதுரை தமிழா?

மதுரைத்தமிழன் : நடிகர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதில் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை .ஏமாறுபவர்களைப்பற்றிதான் நாம் ஆச்சிரியப்பட வேண்டும். ஒரு பொய்யை உண்மைபோல தோன்ற செய்வதுதான் நடிப்பு. அதைத்தான் நடிகர்கள் செய்கிறார்கள் பாட்டியம்மா.

பாட்டியம்மா : மனைவியின் மனசை அறிய முடியாமல் பல ஆண்கள் அவதிப்படுகிறார்களே? நீ எப்படி சாமாளிக்கிறாய்? அதற்கு நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?

மதுரைத்தமிழன் : மனைவியின் மனசை அறிந்தாலும் அல்லது அறியாவிட்டாலும் அவதிதான். அதற்குதான் நித்தி மாதிரி சாமியாராக இருந்துவிட வேண்டும்.


மதுரைத்தமிழன் :பாட்டியம்மா நீங்களே என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் இப்பபோ நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். சில பெண்கள் வீட்டில் தனிமையில்  இருக்கும்போது தங்கள் கணவனைப் படாதபாடு படுத்துகிறார்கள். ஆனால் அதே பெண்கள் வெளியில் வரும் போது அடுத்தவர்  முன்னிலையில் கணவருக்கு பயந்தவர்கள் போல அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள். அப்படி பட்ட பெண்களை பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?(ஹலோ யாரது உங்கள் வீட்டிலும் இப்படியா என்று சத்தம் போடுவது.. உஷ்ஷ்......)

பாட்டியம்மா :வீட்டு சத்தம் நாலு பேருக்குத் தெரிய வேண்டாமே என்று நினைக்கிற அவர்களின் நல்ல மனசையும்ம், பெருந்தன்மையையும் பாராட்டாமல் இப்படி பெண்களே குறை கூறுவதே உங்களை போன்ற ஆண்களுக்கு வேலையாக போச்சு

மதுரைத்தமிழன் : எனக்கு நல்லா வேணும் .நல்லா வேணும் .பாட்டியம்மா இனிமேல் உங்கிட்ட நான் கேள்வியே கேட்கமாட்டேன். நீங்களே கேளுங்கள்

பாட்டியம்மா : டேய் மதுரைத்தமிழா நான் இப்போ இங்கிலிஷ் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன் எனக்கு ரெண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியலை நீ எனக்கு கொஞ்சம் புரியும்படியா சொல்லித்தாயேன்.


மதுரைத்தமிழன் : சரி பாட்டியம்மா அந்த ரெண்டு வார்த்தைகள் என்னனு சொல்லிறீங்களா?

பாட்டியம்மா : 1. Confident 2. Confidential
மதுரைத்தமிழன் : ...இதுதானா பாட்டியம்மா நான் பெரிசா எதாவது கேட்டுருவையோ என்று கொஞ்சம் பயந்துட்டேன் இப்ப சொல்லுறேன் கவனம்மா கேட்டுகுங்க.... பாட்டியம்மா இந்த சின்ன பொண்ணு யாரு?

பாட்டியம்மா அது உன் செல்ல குழந்தையடா ...

மதுரைத்தமிழன் : பாத்தியா நீ எவ்வளவு தைரியமா அடிச்சு சொல்லுற அதைத்தான் இங்கிலிஷில் Confident என்று சொல்லுவார்கள். சரி இப்ப இதுக்கு பதில் சொல்லு அந்த எதுத்த வீட்டு சின்ன பொண்ணு யாரு?

பாட்டியம்மா அதுவா அது சரவணனோட சொந்த செல்ல குழந்தையடா?

மதுரைத்தமிழன் பாட்டி அதுதான் இல்ல அதுவும் என் சொந்த குழந்தைதான் அது யாருக்கும் தெரியாது அதைத்தான் நாம் Confidential என்று சொல்லுவோம்

பாட்டியம்மா: ச்சீசீய்ய்ய்ய்ய்ய் தூஊஊஊஊஊ.

பாட்டியம்மா: இப்படி நீயெல்லாம் வலைப்பதிவு எழுதலன்னு யாரு அழுதா?
மதுரைத்தமிழன் : பாட்டியம்மா என்னைப்போல ஆட்கள் எதுவும் எழுதலேன்னா... படிக்க ஒன்றும் இல்லாததினால், வேறு ஏதாவவது படித்து   மனசு கெட்டு போகிறது .அதனால் நீங்கள் விடாமல் தொடர்ந்து எழுதுங்கள் என்று எல்லோரும் கேட்டு கொண்டதால் நான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

என்ன மாக்காஸ் நான் சொன்னது உண்மைதானே??????/

பாட்டியம்மா கம்பை எடுத்து துரத்துவதால் இந்த பதிவை மேலே தொடர முடியவில்லை ...மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
--------


15 comments :

 1. Excellent! I Love this Aayaah who is posing for us!

  ReplyDelete
 2. I am Nambalki! Sorry I forgot to add...she is not an ordinary Aayah! She is an ultimate அல்ட்டிகூஸ் ஆயா!

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா ஹா செம காமடி போங்க.

  ReplyDelete
 4. காஃபி விக்குற பாட்டியம்மா அழகா இருப்பாங்களா? இப்படி கடலை போட்டிருக்கீங்க!

  ReplyDelete
 5. மதுரைத்தமிழன் பாட்டி அதுதான் இல்ல அதுவும் என் சொந்த குழந்தைதான்
  >>>
  இது என் நாத்தனாருக்கு தெரியுமா சகோ? தெரிஞ்சா உங்க கதி?

  ReplyDelete
 6. அனு இன்னுமா காபி குடிக்கறாங்கன்னுதான் கேட்க வந்தேன்.ஆனால்.....

  மதுர!சும்மா கலக்குறீங்க:)

  ReplyDelete
 7. என்ன இளிப்புன்னு இப்பத்தான் எங்க வீட்டுல நான் வாங்கி கட்டிகிட்டேன்.இது தேவையா எனக்கு:)

  ReplyDelete
 8. @.நம்பள்கி said...

  //Excellent! I Love this Aayaah who is posing for us!//


  உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.


  போட்டிக்கு வந்துருவிங்களே!!!!!!

  ReplyDelete
 9. @Seeni said...

  ///ada ithu verayaa?///


  உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

  ReplyDelete
 10. @ மனசாட்சி™ said...

  //ஹா ஹா ஹா ஹா செம காமடி போங்க.//

  உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

  ReplyDelete
 11. @ ராஜி said...

  //காஃபி விக்குற பாட்டியம்மா அழகா இருப்பாங்களா? இப்படி கடலை போட்டிருக்கீங்க!///


  சகோ நானும் அழகு நீங்களும் அழகு அப்ப நம்ம பாட்டியும் அழகாகத்தானே இருப்பார்.
  அப்பாடி உங்களையும் போனா போவுதுன்னு அழகு லிஸ்ட்ல சேர்த்துட்டேன்

  ReplyDelete
 12. @ ராஜி

  //மதுரைத்தமிழன் பாட்டி அதுதான் இல்ல அதுவும் என் சொந்த குழந்தைதான்
  >>>
  இது என் நாத்தனாருக்கு தெரியுமா சகோ? தெரிஞ்சா உங்க கதி?

  என்ன அவளுக்கு தெரியலைன்னாலும் நீங்க போட்டு கொடுத்துட்டுதான் தூங்க போவீங்க போல இருக்கே

  ReplyDelete
 13. @ராஜ நடராஜன் said...

  அனு இன்னுமா காபி குடிக்கறாங்கன்னுதான் கேட்க வந்தேன்.ஆனால்.....

  மதுர!சும்மா கலக்குறீங்க:)

  பாட்டி ஆனாலும் காபி குடிக்கலாம் நண்பரே

  ReplyDelete
 14. @ராஜ நடராஜன் said...

  அனு இன்னுமா காபி குடிக்கறாங்கன்னுதான் கேட்க வந்தேன்.ஆனால்.....

  மதுர!சும்மா கலக்குறீங்க:)

  பாட்டி ஆனாலும் காபி குடிக்கலாம் நண்பரே

  @ ராஜ நடராஜன்

  என்ன இளிப்புன்னு இப்பத்தான் எங்க வீட்டுல நான் வாங்கி கட்டிகிட்டேன்.இது தேவையா எனக்கு:)

  பாட்டிய பாத்து இளிச்சாக்கூட இந்த வீட்டு காரம்மாக்களுக்கும் எங்க இருந்துதான் பொறாமை வருகிறதோ?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog