உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 19, 2012

தமிழக ஊர்களின் தனித்தன்மை ( பதிவாளர்களே உங்கள் ஊரின் தனித்தனமையை அறிந்து கொள்ளுங்கள் )தமிழக ஊர்களின் தனித்தன்மை ( பதிவாளர்களே உங்கள் ஊரின் தனித்தனமையை அறிந்து கொள்ளுங்கள் )

தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு தனித்தன்மை உள்ளதோ அது போல தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களும் ஏதாவது ஒரு விஷயத்தில் தனித்தன்மை பெற்றுள்ளது. அதில் என் நினைவுக்குள் வருவதை நான் இங்கே பகிர்கிறேன். அது போல நான் சொல்லவிட்டு போய் அது உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை நீங்கள் இங்கே கூறலாம்.

முதலில் வருவது நான் வளர்ந்த மதுரை( நான் பிறந்த ஊர் அல்ல)

மதுரை : மல்லிகை என்றாலே உலகெங்கும் பேசப்படுவது மதுரை மல்லிகைதான் (மதுரை பெண்கள் தலைநிறைய மல்லிகையை வைத்து ஆண்களை கவுத்துவிடுவது இப்படிதான் . ஆனால் வெளியூர் ஆண்கள் இந்த மல்லிகையை பெண்களுக்கு வாங்கி கொடுத்து எளிதாக கவுத்துவிட்டு பெண்கள் மனம் கவர்வது மற்றும் கோவித்து கொண்டிருக்கும் மனைவியை கொஞ்சும் மனைவியாக மாற்றுவது இதை வைத்துதான்.) அடுத்தாக மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மிழுக்கு சங்கம் அமைத்தது மற்றும் கொத்துபுரோட்டாதான்.

நெல்லை :அல்வா என்றாலே உலகெங்கும் பேசப்படுவது திருநெல்வேலி அல்வாதான்.(அதனால் மக்காஸ் நெல்லைகாரர்களிடம் பேசும் போது ஜாக்கிரைதை உலகுக்கே அல்வா கொடுப்பவர்கள் அவர்கள்) அல்வா மட்டும்மல்ல அருவாவுக்கும் பெயர் பெற்றது

சிவகாசி : பட்டாசு என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். அது மட்டுமல்லாமல் ப்ரிண்டிங் என்றாலும் நினைவுக்கு வருவது நமது குட்டி ஜப்பான் என்று அழைக்கபடும் சிவகாசிதான்.(இங்கு பிரிண்டிங் தொழிலில் வேலைபார்க்கும் படிக்காதவர்களின் திறமையை நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும் எந்த வித கலர் ப்ரிண்டிங்க் பேப்பரை அவர்கள் கையில் கொடுத்து அதை போல எனக்கு பிரிண்ட் செய்து தாருங்கள் என்று சொல்லி பாருங்கள் அவர்கள் எந்த வித கேள்வியும் கேட்காமல் செய்து தருவார்கள். இதையே அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் ப்ரிண்ட் தொழிலில் ஈடுபட்டவரை கேட்டால் நாங்கள் முயற்சி செய்கிறோம் ஆனால் 100% மேட்சாக வராது என்று சொல்லிதான் வேலையை ஆரம்பிப்பார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் : பால்கோவா என்றால் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிபுத்தூர்தான். மல்லிகை பூபோல வெண்மையாகவும் மிகமிக ருசியாகவும் இருக்கும்.

இராஜபாளையம் : கொய்யப்பழத்திற்கும், நாய்க்கும் பெயர் பெற்றது.

மணப்பாறை : முருக்கு மிக அருமையாக இருக்கும் ( நாங்கள் சிறுவயதில் மணப்பாறை முருக்கு மாமியாரை நொருக்கு என்று பாடி வருவோம்)
சங்கரநயினார் கோவில் : பிரியாணிக்கும் பெயர் போனது. அந்தகாலத்தில் அந்த ஊரை ரயில் மற்றும் பஸ்ஸில் செல்பவர்கள் கண்டிப்பாக மறக்காமல் வாங்கி செல்வது இந்த பிரியாணியைத்தான்.
ப்ரானூர் பார்டர் : இது செங்கோட்டைக்கும் குற்றாலத்திற்கும் அருகில் உள்ள சிறு ஊர். இங்கு செய்யபடும் சிக்கன் மிகப் பிரபலம். இது குற்றால சீசன் சமயத்தில் கிடைக்கும். நான் வெஜ் சாப்பிடுபவர்கள் குற்றாலம் சென்றால் இங்கு சென்று சாப்பிடாமல் திரும்ப மாட்டார்கள்.
கன்னியாகுமரி : இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான்
தூத்துகுடி : முத்துகளுக்கும் சங்குகளுக்கும் பெயர் பெற்றது. இங்கு இருந்துதான் தரம்மான முத்துக்கள் எடுக்கபடுகின்றன.
காஞ்சிபுரம் : பட்டுபுடவை என்றாலே உலகெங்கும் பேசப்படுவது காஞ்சிபுரம் பட்டுபுடவைகள்தான். இது இல்லாமல் கல்யாணம் நடப்பது இல்லை.

திருவையாறு : கர்நாடக மியூசிக் என்றால் நினைவுக்கு வருவது இந்த ஊர்தான்.

தஞ்சாவூர் : தலையாட்டி பொம்மை, தவலைபாத்திரம், கலை போன்றவற்றிற்கு பெயர் பெற்றது தஞ்சாவூர்.(இங்குள்ள பொம்மைகள்தான் தலையாட்டி கொண்டிருக்கும் பெண்கள் தலையாட்டி கொண்டிருப்பார்களா என்று தெரியாது)

நாமக்கல் : முட்டைக்கும், லாரி பஸ் போன்ற வாகன பாடி பில்டிங்குக்கு பெயர் பெற்றது.

ஈரோடு : ஜமுக்காளத்திற்கு(பெட்சீட்) பெயர் பெற்றது.

பழனி : பஞ்சாமிர்தம்

கோயம்புத்தூர் : மரியாதை மிக்க பேச்சுக்கு பெயர் பெற்றது. கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்றுள்ளது.

திருப்பூர் : பின்னல் ஆடைகளுக்கு பெயர் பெற்ற நகரம் இது.

சென்னை : இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் இதுவும் ஓன்று என்ற பெருமையைதவிர எனக்கு இந்த சென்னையை பற்றி பெருமையாக சொல்லுவதற்கு ஏதுமில்லை. வாய்சவுடால் அடவாடிதனம் மற்றும் மரியாதை அற்ற பேச்சுக்கு பெயர் பெற்றது.மெயின் நகரத்திற்குள் மணம்மணக்கும் கூவம் ஒடுவது. அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள் அதானால்தான் என்னவோ அந்த அரசியல் தலைவர்கள் கூடம் இடத்தை சிம்பாலிக்காக உணர்த்த இந்த கூவத்தை சென்னையின் நடுவில் மாற்ற முயற்சிக்காமல் வைத்திருகிறார்களோ??? என்னவோ

நான் மறந்து போன ஊர்களை ஞாபக படுத்திய ஏஞ்சலின் , தீப்ஸ் வாசனுக்கு எனது நன்றிகள்

திருவாரூர் ...தேர்
திருச்சி ....மலைக்கோட்டை
ஏற்காட் ..ஏழைகளின் ஊட்டி
நன்றி : ஏஞ்சலின்

சேலம் --- மாம்பழம்
ஊத்துகுளி --- வெண்ணெய்
ராசிபுரம் --- நெய்

நன்றி தீப்ஸ் வாசன் 

திண்டுக்கல் : பூட்டு . தலைப்பாகட்டு பிரியாணி
பொள்ளாச்சி : இளநீர்

நன்றி ஸ்ரவாணி 

பத்தமடை : பாய்
கள்ளக்குறிச்சி :அப்பளம்

நன்றி : அபுபக்கர்.கே.எம்
இந்த காலி இடம் நான் அறியாத மற்ற ஊர் தனித்தன்மைகளுக்காக

_________________________
___________________________
_________________________________
______________________________________


இதுவரை எனக்கு தெரிந்தவற்றை நான் இங்கு கூறியுள்ளேன். உங்கள் ஊர் இதில் இல்லையென்றால் அந்த ஊரையும் அதன் பெருமையையும் எழுதி அனுப்புங்கள் அதை நான் இங்கு சேர்த்து கொள்கிறேன்.

12 comments :

 1. திருச்சி பற்றி அறிய:
  http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html

  ReplyDelete
 2. தருமபுரி ...மார்பிள் கற்களுக்கு புகழ் பெற்றது
  உங்களுக்கு ...அந்த அவர் படம்... நினைவு வந்தா நான் பொறுப்பில்லை

  ReplyDelete
 3. திருவாரூர் ...தேர்த்திருவிழா
  திருக்குவளை ........no comments
  திருச்சி ....மலைக்கோட்டை
  ஏற்காட் ..ஏழைகளின் ஊட்டி

  ReplyDelete
 4. சேலம்--- மாம்பழம்

  ReplyDelete
 5. சேலம் --- மாம்பழம்
  ஊத்துகுளி --- வெண்ணெய்
  ராசிபுரம் --- நெய்

  ReplyDelete
 6. நான் சிவகாசிகாரன்.என் ஊரின் பெருமை சொன்னமைக்கு நன்றி.அருமையான பதிவு.

  ReplyDelete
 7. ஆஹா MTG ,
  வம்பு இழுத்து விட்டீர்களே ....சும்மா இருக்க முடியுமா ?? ம்ம்ம்...
  எங்கள் சென்னப்பட்டினத்தில் நீங்கள் சொன்ன அத்தனை ஊர்களின்
  தனித்தன்மையும் கிடைக்கும். [திருச்சி மலைக்கோட்டை செட் கூட
  கண்காட்சியில் போடுவோம் ] . உங்கள் ஊரில் சென்னையின் அழகான
  மரினா கடற்கரை , கந்தகோட்டம் , ஸிந்காரதமிழ் , MGM போன்ற பொழுதுபோக்கிடங்கள் ,
  மால்கள் எல்லாம் இருக்கும் போல ? ஆங் ??!!!
  பிறகு , உங்கள் fill up the blank கிற்கு ...... என் பங்கு ...
  திண்டுக்கல் ______________...... மீதியை நீங்கள்
  பூoorதி செய்து போடவும் பார்க்கலாம்.
  பிகு : நானும் சென்னை வாசி மட்டுமே. விட்டுக் கொடுப்போமா ?

  ReplyDelete
 8. then ,

  pollachi - ilaneer .

  [thagaval ubayam - tamil cine songs ]

  ootti - veggies , tea , varkki & homemade-chocs ....

  ReplyDelete
 9. ENGKA PAKKATHTHU UUR > PATTHAMADAI > PAAI

  ReplyDelete
 10. புதுக்கோட்டை முந்திரிப் பருப்புக்கு மவுசு அதிகம். அதைப் பதிவு செய்வதில் பெருமைப் படுகிறேன்.
  =தனலட்சுமி, திருச்சி.

  ReplyDelete
 11. புதுக்கோட்டை - கந்தர்வக்கோட்டை - தஞ்சைச் சாலையில் இருக்கும் ஆதனக்கோட்டை முந்திரிப் பருப்புக்குப் பேர் போனது. புதுக்கோட்டையில் முட்டை மாஸ். வேறெங்கும் கிடைக்காது. மற்ற ஊர்க்காரர் எல்லாம் “அப்படின்னா?” என்பார்கள்... ஆனால் ஊர்ஊராக உணவு ருசியறிந்தவர்களுக்கு இது தெரிந்த ரகசியம்தான். பார்க்க -http://pudugaithendral.blogspot.in/2013/09/blog-post_17.html

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog