உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, January 9, 2012

இப்படிக்கு பாவப்பட்ட கணவன்மார்கள்!!!!!இப்படிக்கு பாவப்பட்ட கணவன்மார்கள்!!!!!

கல்யாணத்திற்கு முன்பு ஒரு ஆண் ஒரு பெண்ணின் கையை பிடித்து சென்றால் அது அவனுக்கு அவள் மேல் உள்ள காதலால்( before marriage, it is love;) ஆனால் கல்யாணத்திற்கு அப்புறம் அதே போல் அவன் கையை பிடித்து சென்றால் அது அவள் மீது உள்ள காதலால் அல்ல அவனுடைய தற்காப்பிற்காகதான்(after marriage it is self-defense)( ரொம்ப லேட்டா நான் இந்த தற்காப்பு கலையை கற்றுக்கொண்டேன் ஹூம்ம்ம்ம்ம்ம்.....)

கடவுளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அழகாக பெண்களை படைக்கும் இறைவன் இறுதியில் கோபபட்டு அவர்களை மனைவியாக மாற்றி பழிவாங்குகிறான்!#!??!#???


கணவனும் மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீண்ட நேரமாக நீடித்தது. இறுதியாக மனைவி சொன்னாள். இந்தா பாருங்க....வாக்குவாதத்தில் நீங்கள் வெற்றி பெறனுமா இல்லை வருகிற நாட்களில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா என்று முடிவு செய்யுங்கள் என்றாள். உடனேவாக்கு வாதம் முடிவுக்கு வந்தது.( எப்படி எல்லாம் நம்மை மிரட்டி வழிக்கு கொண்டுவராங்க)இராணுவத்தில் புதிதாக சேர்ந்த இரு வீரர்கள் பேசிக்கொண்ட போது ஒருத்தன் மற்றொருவனிடம் நீ ராணுவத்தில் சேர எது உன்னை தூண்டியது என்று கேட்டான். அதற்கு அடுத்தவன் சொன்னான் எனக்கு கல்யாணம் ஆகவில்லை & எனக்கு சண்டை போடுவதென்றால் ரொம்ப பிடிக்கும் அதனால்தான் நான் சேர்ந்தேன். ஆமாம் நீ சேர என்ன காரணம் என்று பதிலுக்கு கேட்டான். அதற்கு மற்றோருவன் சொன்னான் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது & தினமும் சண்டை போட பிடிக்காததால் ராணுவத்தில் சேர்ந்தால் அமைதி கிடைக்கும் என்று கருதியாதால் சேர்ந்துள்ளேன் என்றான்.

நான் மதுரைக்கு சென்ற போது ஒரு பெரியவர்(பதிவாளர்) என்னை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார், நானும் அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அவர் மனைவி விருந்து பரிமாறினார்கள் அப்போது அந்த பதிவாளர் ஒவ்வொரு முறையும் தன் மனைவியை அழைக்கும் போது தங்கம் இதை எடுத்துவா செல்லம் அதை போடு கண்ணம்மா கொஞ்சம் தண்ணி கொடு என்று பல வித செல்ல வார்த்தைகளால் கூப்பிட்டு கொண்டிருந்தார். அவருக்கோ கல்யாணம் ஆகி 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவ்வளவு வருடம் ஆகியும் இப்படி அன்பாக இருக்கிறாறே என்று எண்ணி அவர் மனைவி கிச்சனுக்குள் போயிருந்த போது சார் உங்களை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது கல்யாணம் ஆகி 30 வருடங்களுக்கு மேல் ஆகியும் எப்படி சார் நீங்கள் இப்படி அன்பாக உங்கள் மனைவியை கூப்பிடுகிறிர்கள் என்று கேட்டேன்.


அதற்கு அவர் என்னிடம் மிக ரகசியமாக சொன்னார்....தம்பி கல்யாணம் ஆன 10 வருடத்திற்குள் அவள் பெயரை உண்மையிலே நான் மறந்துவிட்டேன் அது அவளுக்கு இன்னும் தெரியாது எனக்கும் இன்னும் அவள் பெயர் ஞாபகத்திற்கு வர வில்லை அதனால் தான் ஒவ்வொரு தடவையும் வேறு வேறு பெயர் சொல்லி கூப்பிடுகிறேன் இதுதான் உண்மை நீ நினைக்கிறமாதிரி அன்பெல்லாம் இல்லை என்று ரகசியத்தை போட்டு உடைத்த அந்த பெரியவர் இதை நீ யாரிடமும் சொல்லிவிடாதே இது என் மனைவிக்கு தெரியவந்தால் என் சாப்பாட்டுக்கு அதோகதிதான் என்று சொல்லி சிரித்தார்

First guy (proudly): "My wife's an angel"
Second guy: "You're lucky, mine's still alive."

இப்படிக்கு,
பாவப்பட்ட கணவன்மார்கள்!!!!!

15 comments :

 1. ha,ha,ha,ha.... I would like to hear your wife's side of story too...... ha,ha,ha,ha,ha....

  ReplyDelete
 2. ஆகா செல்லமே தஙகமே என அழைப்பதற்கெல்லாம்
  இதுதான் காரணமா
  பிரம்ம ரகசியத்தை போட்டு உடைத்ததற்கு
  நன்றி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @சித்ரா மேடம் நல்ல வேளை உங்களிடம் என் மனைவியை அறிமுகப்படுத்தவில்லை. கடவுளுக்கு நன்றி என் மானம் காப்பாற்ற பட்டது.

  ReplyDelete
 4. @ரமணி சார் நான் விஷயத்தைதான் போட்டு உடைத்தேன். மதுரைக்காரர் ஆகிய உங்களுக்கு யார் அந்த பதிவாளர் (சீனா சாரா , தருமிசாரா, வைகோ சாரா அல்லது நீங்களா) என்று தெரிந்து இருக்கலாம். அதை மட்டும் போட்டு உடைத்துவீடாதீர்கள். அடைப்புகுறியில் இட்ட பெயர்களை வேறு யாருக்கும் சொல்லிவிட வேண்டாம் அது உங்களுக்கும் எனக்கு மட்டும் உள்ள ரகசியம் ஹீ..ஹீ..ஹீ

  ReplyDelete
 5. நான் அந்த மதுரைப் பதிவாளர் ரமணி சார் தான் என்றல்லவா
  எண்ணி இருந்தேன் . அவர் தன்னிலை விளக்கம் அளித்து
  தப்பித்து விட்டார். வேறு யார் ?
  இருந்தாலும் மனைவிகள் இப்படி எல்லாமா நடந்து கொ'ல்'கின்றனர் ?
  கத்துக்கனம் ப்பா. ம்ம்.. சவாலே சமாளி !

  ReplyDelete
 6. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. அனுபவம் பேசுது போல ஹிஹி

  ReplyDelete
 8. @ஜலீலா கமல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் அனுபவம்தான் பேசுகிறது. ஆனால் என் வீட்டு அனுபவம் அல்ல எல்லாம் பக்கத்துவீடுகளில் இருந்து பெறப்பட்ட அனுபவம். நம்மா பார்வை ரொம்ப விரிந்த பார்வை ஹீஹீயீய்

  ReplyDelete
 9. @வைகோ சார் & தீபக் கார்த்திக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

  ReplyDelete
 10. @ஸ்ரவாணி இதுவரை நீங்கள் கற்று கொள்ளவில்லை எனில் இனிமேல் அதைகற்று கொல்லவேண்டாம்

  ReplyDelete
 11. @கபிலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

  ReplyDelete
 12. சிரிக்க வைத்த பதிவு...கையை பிடிப்பதற்கு உள்ள காரணம் இப்பதான் புரிந்தது. ஹா..ஹாஆஆஆ

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog