உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 30, 2011

அமெரிக்காவை ஆள்வது கலைஞரா அல்லது சோனியாவா?


அமெரிக்காவை ஆள்வது கலைஞரா அல்லது சோனியாவா?

இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்கள் சரிவர இந்திய நிர்வாகத்தை நடத்துவதில்லை என்பது நாம் வைக்கும் குற்றசாட்டு. அதனால் இந்தியாவின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்றும் சராசரி குடிமகனின் கடன் தொகையும் அதிகரித்து வருகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவின் கடன் நிலவரம் ;

இந்தியாவின் கடன் 34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடி.இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச்  மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் நிறுவன கணக்குப்படி, ஒரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38 ஆயிரம் மட்டுமே. எனவே, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது 10 மாத சம்பளத்தொகை, கடனாக உள்ளது.

இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழை நாடல்ல என்று ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார் .இந்த தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய நம் இந்திய சமுதாயம் தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.





அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.மேலை நாட்டை எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பார்த்து வரும் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் வசிக்கும் அமெரிக்காவின் ஆட்சியாளர்களின் நிர்வாகத்தினால் ஓவ்வொரு அமெரிக்காவின் குடிமக்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ரொம்ப அதிகமல்ல இவ்வளவுதான் 46,169.30 டாலர் = 2,060,074.29 ரூபாய்தான் ( 1 USD = 44.6200 INR ) .

பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடுப்பா என கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது. இதன் பல மாநிலங்கள் அரசாங்க சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.

The estimated population of the United States is 310,848,879  so each citizen's share of this debt is $46,169.30. The National Debt has continued to increase an average of $3.90 billion per day since September 28, 2007



அமெரிக்காவின் நேஷனல் கடன் கடிகாரம். இதை நீங்கள் பார்த்து கொண்டிடுருக்கும் போதே அப்போதைய கடன் நிலவரத்தை துல்லியமாக காண்பிக்கும் (The U.S.Debt Clock  is literally changing as you read this. If you can stand it, here are some staggering statistics: )


·         Total interest due: $3.54 trillion ($11,396 per citizen).

     ·         Biggest budget item (Medicare/Medicaid): $799.6 billion and rising.

     ·         Number of people unemployed: 24,622,719 (actual), or 13,771,261 (official).

     ·         Home foreclosures so far in 2011: 1,048,700

     ·         Credit card debt: $803.9 billion and rising.

The U.S. Debt Clock is run by a non-partisan, non-profit, non-governmental organization using government data.

மக்களே இனிமேல் நீங்கள் இந்திய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்ல மாட்டீர்களே( இந்த செய்தியை கலைஞர் ஆட்சி செய்த போது பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷபட்டிருப்பார். எதெற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்களை ஒப்பீட்டு பேசிவந்த அவர் அமெரிக்காவை ஒப்ப்பிட்டு பேசியிருப்பார். பாவம். முடிந்தால் காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும் அவர்களாவது பெருமை அடையட்டும் அவர்களது ஆட்சி அமெரிக்காவை விட நல்ல படியாக செல்கிறது என்று






உலக நாடுகள் பொறாமைப்படும் நாடு நமது அண்டையா நாடான சீனா தான் . உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது. இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.

உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...


8 comments :

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள் .
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

    ReplyDelete
  3. As per Latest Biz. News , China in Big Financial debt problem.

    Behind the Screen, not much impressive.

    India has to use this opportunity to catch atleat some markets.

    ReplyDelete
  4. http://www.msnbc.msn.com/id/43600432/ns/business-eye_on_the_economy/

    As per latest Biz. news, china in Big Dept problem...

    let us see...

    ReplyDelete
  5. பதிவின் ஒரு பகுதி PKP அவர்களின் பதிவில் இருந்து வார்த்தை மாறமல் உள்ளதே சகோ? மற்றபடி இது ஒரு நல்ல பதிவு.

    ReplyDelete
  6. நண்பர் Charles உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் இந்த பதிவை போட்ட பிறகு பிகேபி பதிவை பார்க்க நேர்ந்தது. அதில் இருந்த சிலவரிகள் என்னுடைய பதிவிற்கு உபயோகமா இருப்பதாக நான் நினைத்ததால் அதில் இருந்த சில வரிகளை( ///கவனிக்க : சிலவரிகள் மட்டும்///*) மட்டும் எடுத்து அதில் சிறிது மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளேன். நான் அவருடைய பதிவில் ஒரு பகுதியை அப்படியே COPY & Paste செய்யவில்லை. நாம் எப்போது கட்டுரைகள் எழுதும் போது சில சமயங்களில் சுவையூட்டுவதற்க்காக சில நல்ல கருத்துக்களை திருக்குறள் அல்லது பாடல்களில் இருந்து வரிகளை மேற்கோள் காட்டி எழுதுவது போலத்தான் நான் அதை பயன்படுத்தியுள்ளேன் அவ்வளவுதான். எனது பதில் உங்களை இப்போது திருப்தி படுத்திருக்கும் என நினைக்கிறேன். மீண்டும் உங்களக்கு எனது நன்றிகள். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாருங்கள். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  7. நண்பர் Seshadri உங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி.மிக சந்தோஷம்

    ReplyDelete
  8. As an Indian I am happy to note that there are so many countries who are equally under huge debt

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog