உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 1, 2011

கனி...மொழியே.. நீ இன்னும் என்ன செய்ய போகிறாய்?

பெண்மையே  நீ   இன்னும் எவ்வளவு  நாள் மென்மையாக இருக்க போகிறாய்?

பெண்மையே நீ
மென்மை என்று
சில கயவர் கூட்டம்
கவிதை பாடி
உன் கற்பை பார்வையால்
கற்பழிக்கும் இந்த கூட்டம்
உன் மெளனத்தால்
இன்று துளிர் விட்டு
உன்னை உடல் ரிதியாகபலாத்காரம்
செய்ய தொடங்கிவிட்டார்கள்
.இன்னும் நீ வாய்மூடி மெளனமாக
(மென்மையாக) இருக்க போகிறாயா?
பெண்ணே
நீ காயப் படுவதற்காக பிறந்தவள் அல்ல
உன்னை காயப்படுத்துபவர்களை
காயப்படுத்துவதற்ககாக பிறந்தவள்

 பெண்மை மென்மை என்று பெருமைபட்டுக் கொண்டது போதும் உன்னை காக்கும் சில சமயங்களில்  உன்னிடம் ஆண்மைதனம் வர வேண்டும். அப்படி வந்தால் இந்த கயவர்களை ஆண்மைதனத்திலிருந்து  பெண்மைகளாக அல்ல பேடிகளாக உன்னால் மாற்ற முடியும்.

சிவனின் ஒரு பாதி பார்வதி என்று இதிகாசங்களை படித்து வளர்ந்த பெண்ணே உன்னில் பாதியாக இருக்கும் அந்த ஆண்மையை வெளி கொணர்ந்து வாழும் காலம் இது.

பெண்ணே உனக்காக  இன்று நான் படித்த செய்தியை உன்னிடம் பகிர்கிறேன். இந்த செய்தியில் உள்ள பெண்னை போல நீ மாற வேண்டும்.

பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.

அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.

காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்

கேரளாவில் எஸ்.பி. அலுவலக ஊழியையை கற்பழிக்க முயற்சி: பஸ் டிரைவர், கண்டக்டர் கைது

ஊத்துக்கோட்டை அருகே நர்சை ஆட்டோவில் கடத்தி கற்பழிக்க முயற்சி; அண்ணன்-தம்பி கைது
ஓட்டேரியில் இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி; துப்பாக்கிமுனையில் ரவுடி கைது
கள்ளக்காதலர் முன் கள்ளக்காதலியை கற்பழிக்க முயற்சி செய்த போலீஸ்காரர்

 கற்பழிப்பு முயற்சியில் மாணவி கொலை - உடலை தூக்கில் தொங்கவிட்டு வாலிபர் ஓட்டம்.

http://thatstamil.oneindia.in/news/2010/12/19/tirunelveli-school-girl.html டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 பேர் கைது
http://thatstamil.oneindia.in/news/2010/06/15/chennai-railway-station-youth-murder-lover.html சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்

எவ்வளவு செய்திகள், எத்தனை வகையான கொடுமைகள், குரூரமான கொலைகள்! இவைகள் உதாரண உண்மைக்காக இங்கே தந்துள்ளேன். இது போன்ற பல செய்திகளை நீங்கள் தினம் காணலாம். இவைகள்   பத்திரிகைகளுக்குத் தெரிய வந்த செய்திகள். ஊர்க்காதில் விழுந்து பத்திரிக்கையில் வராத செய்திகள் பல நூறு. தெருவில் தெரிந்த, ஊருக்கு வராத செய்திகள் எண்ணிக்கை பல்லாயிரம். வீட்டினுள் அனைவருக்கும் தெரிந்து வீட்டுக்கு வெளியே வராத செய்திகள் எண்ணிக்கை பல லட்சம். தொல்லைக்குள்ளாக்கப்பட்ட பெண் தன் பாதிப்பை வெளியே சொல்லாமல் அதை விழுங்கித் தன்னுள் அடக்கிக் கொண்ட செய்திகள் எண்ணிலடங்காப் பல கோடி.

பெண்ணே கூனி கூறுகாதே......பொறுத்தது போதும் பொங்கி எழு.....

டிஸ்கி : மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளிடம் வலுகட்டாயமாக உறவு கொள்வதும் ஒரு வகையான கற்பழிப்புதான். அதனையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த பகிர்வு உங்களை பாதித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...

அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...

4 comments :

 1. நீ காயப் படுவதற்காக பிறந்தவள் அல்ல
  உன்னை காயப்படுத்துபவர்களை
  காயப்படுத்துவதற்ககாக பிறந்தவள்//

  அழகா சொல்லிட்டீங்க..

  பெண்ணின் வாழ்க்கை போராட்டம்தான்..வெளி உலகுக்கு வந்துவிட்டால்..

  ReplyDelete
 2. "பெண்ணுக்கான துணிவை வழங்கும் பதிவர் " என பாராட்டு சான்றிதழ் வழங்குகின்றேன்..

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  கணவனே ஆயினும் eve -teasing , eve -teasing தான் ....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog