Friday, May 27, 2011

கலைஞர் மறந்த , ஜெயலலிதா மறக்க கூடாத  பதிவு
நான் படித்த கதை நமது தமிழக தலைவர்களுக்கு மிகப் பொருத்த அனுபவபாடமாக இருப்பதால் அதை நான் என் வழியில் தருகின்றேன்.நமது தமிழக அனைத்து கட்சி தலைவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் இதை படிக்க நேர்ந்தால் இதை அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

எளிமையாகவே வாழும் அப்துல்கலாம்  ஒரு நாள் அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.அப்துல்கலாம் அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.அப்போது  அவர் மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த  வேலைக்காரர்கள் அவரை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப்படுத்தினர்.

குளித்து முடித்து விட்டு வெளியே வந்த அப்துல்கலாம் வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு 5000 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார்.அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய பணக்காரை என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே.இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய பணம் கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து அப்துல்கலாம் மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார்.வேலைக்காரர்கள் அப்துல்கலாமை அடையாளம் கண்ட கொண்டனர்.உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அப்துல்கலாமுக்கு ராஜ உபசாரம் செய்தனர்.உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணமிக்க சோப்பையும், விலை உயர்ந்த ஷாம்புவையும் கொடுத்தனர்.

அவர்கள் அப்துல்கலாமை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து குளிக்க உதவி செய்தனர்.உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர்.பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களையும் கொடுத்து உதவினர்.அன்று அப்துல்கலாம் தங்களுக்கு ஆளுக்கு குறைந்தது 10,000 க்கும் மேலாக  அன்பளிப்பாக கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்துல்கலாம் ஆளுக்கு 50 ரூபாய் மட்டுமே கொடுத்தார். வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு 50 ரூபாய்தானா பரிசு ? என்று கேட்டனர்.

அதற்கு அப்துல்கலாம் உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பரிசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு.

இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே  வெளியே நடந்தார்
.

-----

டிஸ்கி :செல்வந்தர்களாகிய தமிழ் வாக்காளர்கள் , நாட்டுக்காக வேலை செய்ய வந்த முதலமைசர்களுக்கு தேர்தலில் கொடுத்த பரிசுதான் தேர்தலில் கிடைத்த வெற்றியும் தோல்வியும்.

என்னுடைய எந்த பதிவின் நோக்கமும் யாரையும் எப்போதும் காயப்படுத்துவது என்பதல்ல.அப்படி ஏதாவது உங்களை நான் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.


இந்த பகிர்வு உங்களை கவர்ந்திருந்தாலும் இல்லையென்றாலும் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...

அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...

6 comments:

  1. பொட்டுல அடிச்சாப்போல இருக்கு பதிவு நண்பா!

    ReplyDelete
  2. பட்டாபட்டி.... said...

    ரைட்டு..:-)
    ///

    Template comment? y Boss?

    ReplyDelete
  3. நான் படிச்சிட்டேன். படிக்க வேண்டியவங்க படிக்கணுமே.

    ReplyDelete
  4. இந்த பதிவை பார்க்கவேண்டிய ’சிலர்’ பார்க்’கலாம்’...படிக்’கலாம்’.........அவர்களுக்கு இது ஒரு நெத்தியடியாக இருக்’கலாம்’.

    ReplyDelete
  5. நல்ல பதிவு .கலாமில் ஆரம்பித்து இன்றைய தேர்தல் முடிவுகளை இணைத்த உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.