தமிழன் மிக பெரிய புத்திசாலி ஆனால் ஏன் இன்னும் அவன் மட்டும் சந்திர மண்டலத்திற்கு போகவில்லை என்று நான் மண்டையை உடைத்து( இப்ப புரியுதா நான் ஏன் இப்படிபட்ட பதிவுகள் எல்லாம் போடுகின்றேன் என்று) யோசித்து கொண்டிருந்தேன். யோசிப்பின் முடிவில்தான் புரிந்தது ஒரு தமிழன் போக முயற்சித்தால் அவன் போகுமுன் அவன் மனைவி இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டால் அவனுக்கு எப்படியப்பா சந்திர மண்டலத்திற்கு போக தோணும். ஒரு தமிழ் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்பால் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இது.
ஏங்க எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்ப போறீங்க?
அப்படி என்னதான் கண்டுபிடிக்க போறீங்க?
நீங்க மட்டும்தான் போறீங்களா?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்ணுவேன்?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
என்ன சாப்பிடுவீங்க?
அப்படி போனா எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எவ்வளவு நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
இது உங்க அம்மா கொடுத்த ஐடியாவா?
லைஃப் இன்சுரென்ஸ் எடுத்து இருக்கீரிங்களா?
போயிட்டு வந்த நிறைய போனஸ் கிடைக்குமா?
அப்படி நிறைய பணம் கிடைச்சா எங்க அம்மா அப்பாவிற்கு வீடு வாங்கி தருவிங்களா?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் வைச்சிருங்கிங்க?
நான் கேட்டுகிட்டே இருக்கேன் எனக்கு பதில் சொல்லுங்க ?
நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
நானா போனா இனி திரும்ப வரவே மாட்டேன்.
ஏன் பேசமா இருக்கீங்க?
என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இதுக்கு அப்புறமும் அவரு சந்திர மண்டலத்திற்கு போகியிருப்பாருன்னா நினைக்கிறீங்க???
இதை படிக்கும் பெண்கள் கேட்கலாம் அப்ப கல்யாணம் ஆகாத ஆண்கள் போயிட்டு வரலாமே அவங்களை இந்த மாதிரி கேள்வி கேட்க ஆள் கிடையாதே என்று.?
கல்யாணம் ஆகாத ஆண் எதுக்கு அங்க போகிறான் அங்கதான் அவனுக்கு தண்ணி கிடைக்காது ,ஜொள்ளு விட பிகர்கள் கிடையாதே.
அருமை அருமை
ReplyDeleteமிகச் சரியாகச் சொல்லிப் போகிறீர்கள்
இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி மீண்டு
நாம் போவதற்குப் பதில் பேசாமல்
போய்வந்த வெளி நாட்டுக்காரனைப் பார்த்து
கேள்வி கேட்டு நம் சந்தேகங்களை
எளிதாக தீர்த்துக்கொள்ளலாம்
தெளிவூட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தொடர்ந்து எனது பதிவுகளை படித்து வருவது மட்டுமல்லாமல் பொருத்தமான கருத்துகளை எனது பதிவிற்கு தந்து என்னை ஊக்க படுத்தி வரும் ரமணி சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஹா..ஹா.ஹா. சூப்பரப்பு. ஆனாலும், தமிழனை அறிவாளின்னு சொல்லிட்டீங்களே... அதை நினிச்சத்தான் எனக்கு புளகாங்கிதமா இருக்கு...
ReplyDeleteஇந்த மாதிரி கேள்விகளுக்கு பயந்து பயந்துதான் சாதனைகளைப் படைக்க முடியாமல் வேதனையில் வெந்து சாகிறான் தமிழன் என்பதை வெளிச்சத்திற்கு(என்னங்க...அங்க என்ன பண்றீங்க?-மனைவியின் குரல்)கொண்டு வந்த உங்களுக்கு நன்றி!
ReplyDeleteதமிழனுக்கு பதிலாக தமிழச்சிதான் போகவேண்டுமாம். கேள்வி எழும் முன்னே பதில் கொட்டி தீர்த்துவிடமாட்டோமா என்ன?
ReplyDeleteதமிழன் புத்திசாலி என்பதில் சந்தேகம் இல்லை ஜெயதேவ் தாஸ் ஆனால் எல்லா தமிழனுமே புத்திசாலிகள் பிரச்சனையே அங்கேதான் ஆரம்பிக்கிறது.
ReplyDeleteஎன்ன Ellen நீங்களும் என்ன மாதிரி மனைவிக்கு பயந்தவாரா? அப்ப நீங்களும் என் கட்சிதான். நான் தலைவர் நீங்க செயல்லார் ஒகே வா?
ReplyDeleteசாகம்பரி மேடம்....கருத்துக்கு நன்றி..தமிழச்சியும் சந்திர மண்டலம் போக முடியாது ஏனென்றால் அங்கு மல்லிகை பூ வைத்து சேலை கட்டி அங்கு போக முடியாது மேலும் அங்கு தமிழ் தொலைகாட்சி சீரியல்கள் அங்கு தெரியாது. குறிப்பாக வம்பு அளக்க அங்கு ஆள் இருக்காது. இப்ப ஒத்துகிறிங்களா அங்கு தமிழச்சியும் போக முடியாதுன்னு. இப்ப என்ன சொல்லப்போறிங்க
ReplyDelete