Friday, May 13, 2011





புதிய வயாகரா ஆணுறை( Innovative product ) : ஆண்களுக்கான மருத்துவ செய்தி

வலுவான, நீடித்த, பாதுகாப்பான உறவுக்காகவே புதிதாக வயாகரா ஆணுறை (Viagra Condoms called CSD500 ) மார்க்கெட்டுக்கு வரப் போகிறது.

பெரும்பாலான ஆண்களுக்கு நீடித்த உறவு வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நடைமுறையில் அது கை கூடாததாகவே உள்ளது. நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்பதை ஆண்களில் பெரும்பாலானோர் விரும்பினாலும் கூட அது பெரும்பாலானோருக்கு அமைவதில்லை.அதை விட முக்கியமாக ஆணுறை அணிந்து கொள்ளும் பலருக்கும் அது செளகரியத்தை விட அசெளவுகரியத்தையே அதிகம் கொடுக்கிறது.எனவே உறவு திருப்திகரமாக இல்லை என்பதே ஆணுறைகளை உபயோகபடுத்துபவர்களின் கருத்தாக உள்ளது.





இப்படிப்பட்ட ஆண்களுக்காகவே இந்த வயாகரா ஆணுறை. இதை இங்கிலாந்தில் உள்ள பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது (This innovative product is developed by UK biotechnology firm Futura Medical PLC and is licensed to Durex's owner, SSL International. Reckitt Benckiser has signed a deal with Futura Medical for launching the Viagra condoms ) . இது திருப்திகரமான, பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு மட்டுமல்லாமல், ஆண்மைக் குறைவு உள்ளோருக்கும் கூட பெரிதும் உதவக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதை டூ இன் ஒன் ஆணுறை என்கிறது அந்த நிறுவனம்.மேலும் வழக்கமான ஆணுறைகளை பயன்படுத்தும்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள் இதில் இருக்காது என்கிறார்கள் அந்த நிறுவனத்தினர்.


இதயத்திற்கு ரத்தம் போகாமல் இருக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு மருந்தைத்தான் இந்த வயாகரா ஆணுறையில் ஜெல் வடிவில் தடவியிருக்கிறார்கள். அதாவது ரத்தம் ஆணுறுப்புக்கு அதிக அளவில் பாய்வதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் உறவின்போது உறுப்பு எழுச்சி சிறப்பாக இருக்கும். நீடித்த உறவுக்கும் இது வழி செய்கிறது.

இந்த ஆணுறையை சோதனை முறையில் சில ஆண்களிடம் கொடுத்து ஆய்வு மேற்கொண்டபோது அவர்கள் வழக்கமான நாட்களை விட மிகச் சிறப்பான உறுப்பு எழுச்சியையும், உறவையும் மேற்கொண்டதாக தெரிவித்தனர். மேலும் வழக்கமான ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் உராய்வுத்தன்மை குறைவுப் பிரச்சினையை தாங்கள் இந்த ஆணுறையைப் பயன்படுத்தியபோது சந்திக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் ஆணுறை நழுவிப் போய் விடுமோ என்ற அச்சமும் இதை அணிந்தபோது அவர்களுக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு பொருத்தமானதாக, திருப்திகரமானதாக இது இருந்ததாம்.

இது இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து மார்க்கெட்டிலும் மற்றைய நாடுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று அந்த நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். ஆனால் இது அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்குமா என்று எந்த வித அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் இது வரை வெளியாக வில்லை.

ஆண்களுக்கு இது நிச்சயம் சந்தோஷமான செய்திதான்!


நான்  ஆண்களுக்கான பதிவே போடுவதில்லை என்ற சிலர் எழுதியதின் பயனே இந்த ஆணகளுக்கான மருத்துவ செய்தி

5 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

    அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

    ReplyDelete
  2. ஆகா ஆகா - இப்படியும் ஒன்றா - பலே பலே

    ReplyDelete
  3. கருன் அவர்களுக்கு, என்னை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  4. சீனா சார் அவசரப்பாடாதிங்க. இது இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடம் தான் வெளியிடப்படும். வேணா தமிழ்னாட்டுக்கு டீலர் ஷிப்புக்கு முயற்சி பண்ணுங்கோ செம லாபம் பார்க்கலாம். ஹீ...ஹீ

    ReplyDelete
  5. அடேயப்பா..ம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.