இன்றைய இளைய தமிழர்கள் நினைப்பதும்... நடப்பதும்
படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று கஷ்டப்பட்டு படித்துபட்டம் பெற்று இறுதியில் வேலையின்றி அலைகின்றனர்.
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் என்பதற்காக இராப்பகலாக கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு வாங்கி நிம்மதி இன்றி இருக்கின்றனர்.
நல்ல உறக்கம் வருமென்று பட்டுமெத்தையை தேடி வாங்கி அந்த பட்டுமெத்தையில் படுத்து உறக்கத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்
அழகாக இருக்க வாங்கிய ஆபரணங்களை வங்கி லாக்கரில் வைத்து விட்டு அலங்கோலமாக அலைந்து திரிகின்றனர்
அவசர தேவைக்கு என வாங்கிய வாகனத்தில் அவசியமற்ற தேவைக்கு பயணம் செய்கின்றனர்.
முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும் முடியவிடாமல் செய்ய செய்கின்றனர்.
இவர்கள் தான் இன்றைய இளைய தமிழர்கள்..இதில் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர்கள்
எனது நண்பர் அனுப்பிய மெயிலை படித்து அதை என் வழியில் மாற்றம் செய்து நீங்கள் படித்து ரசித்து சிந்திக்க இங்கே தந்துள்ளேன்.
இன்றய காலத்தில் மனிதரடகள் இயந்திரமாகிவிட்டனர்... அதிகம் வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிலை இது வெ..
ReplyDeleteநீங்கள் எழுதியது உண்மைதான்.. இன்றைய இளைஞர்கள் ஒரு மாதிரியான உப்புசப்பற்ற ‘சவசவ’ வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்.
ReplyDeleteதோழி பிரஷா & Ellen வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் இருவரின் கருத்துக்களையும் நான் முழுமையாக் ஒத்து கொள்கிறேன்
ReplyDelete