Wednesday, May 25, 2011

நல்லவர்கள் இருக்கும் இடம்தான் ஜெயிலா?





இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் குற்றங்கள் மட்டுமில்லாமல் குற்றாவாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. இந்த புதிய உலகில் நியாங்கள் தர்மங்கள் எல்லாம் காற்றாட போய்விட்டன. மத போதனை செய்யும் சாமியார்களும் அரசியல் வாதிகளும் ,ஆண்களும் பெண்களும் ஒழுக்கங்களை இழந்து பண்பாட்டை இழந்து குற்றங்களை செய்து வருகின்றனர். மக்கள் தொகையை போல குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மாநிலமான கலிபோர்னியாவில் உள்ள சிறைக்கூடங்களில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென அந்த மாநிலத்தில் உள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த செய்தி எனக்கு மிகவும் ஆச்சிரியத்தையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் தந்தது. தவறு செய்யும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் அவர்கள் செய்யும் தவறை உணர்ந்து திருந்தி வரவும் அடைக்கப்படும் இடம்தான் சிறைச்சாலை. ஆனால் அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்க தவறு செய்பவர்களை வெளிவிட்டால் தவறுகள் செய்வது குறைந்து விடுமா என்ன?

அதற்கான காரணத்தை பார்த்த போது கலிபோர்னியாவில் உள்ள 33 மாநில சிறைச்சாலைகளில் 80,000 கைதிகள் இருக்ககூடிய வசதிகள் மட்டுமே உள்ளன என்றும் ஆனால் இந்த வார திங்கள்கிழமை நிலவரப்படி அதில் 143,435 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இது 180 சதவிகிதம் அதிகம் என்றும் இந்த கூட்டத்தினால் வாரம் ஒருவர் பாதுகாப்பு குறைவினால் இறக்க நேரிடுகிறது என்று அங்குள்ள கோர்ட் அறிவித்து இதன் காரணமாக இங்குள்ள கூட்டத்தை137.5 சதவிகிதம் 2013 ஆம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோர்ட் கண்டிப்பு உத்தரவை இட்டுள்ளது.

புதிய சிறைச்சாலைகளை கட்டுமாறும், வேறு மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்கு அனுப்புமாறும் 33,000 கைதிகளை அவர்கள் செய்த தவறுக்கு ஏற்றபடி தண்டனைகாலம் முடியும் முன்னரே ரலீஸ் செய்து அனுப்புமாறும் ஆலோசனைக் கூறியுள்ளது கோர்ட்.

யாரெல்லாம் குற்றாவளிகளாக சிறைச்சாலையில் இருக்கிறார்கள் என்பதற்கான படம் கிழே.



 
இந்தியாவிலும் இது போலத்தான் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை நினைக்கும் போது எனக்கு தோன்றியது என்னவென்றால் குற்றவாளிகளை சிறையில் அடைப்பதினால் அதிக செலவு அரசாங்கத்திற்கு ஏற்படுவதால் குற்றவாளிகளை சிறைச்சாலையில் அடைப்பதற்கு பதிலாக நல்லவர்களை சிறையில் வைத்தால் அதற்கு ஏற்படும் செலவு வருங்காலத்தில் குறைவாக இருக்கும் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்பதை இதை படிப்பவர்கள் தெரியப்படுத்தவும்.

இப்படி நடந்தால் கனிமொழி வெளியில் இருப்பதை பார்த்து செல்லும் கலைஞர் கண்ணிர் வடிப்பார்தானே?

4 comments:

  1. வித்தியாசமான சிந்தனையை
    எப்போதும் எல்லோரும் பாராட்டுவோம்
    இந்த சிந்தனை
    கொஞ்சம் ஓவரான வித்தியாசமான சிந்தனை
    பாராட்டாமல் இருக்க முடியுமா?
    பாராட்டி ஓட்டும் பதிவு செய்துள்ளேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //குற்றவாளிகளை சிறைச்சாலையில் அடைப்பதற்கு பதிலாக நல்லவர்களை சிறையில் வைத்தால் அதற்கு ஏற்படும் செலவு வருங்காலத்தில் குறைவாக இருக்கும்//

    சரியா சொண்ணீங்க....

    ReplyDelete
  3. நன்றி ரமணி சார் & அருண்

    ReplyDelete
  4. //குற்றவாளிகளை சிறையில் அடைப்பதினால் அதிக செலவு அரசாங்கத்திற்கு ஏற்படுவதால் குற்றவாளிகளை சிறைச்சாலையில் அடைப்பதற்கு பதிலாக நல்லவர்களை சிறையில் வைத்தால் அதற்கு ஏற்படும் செலவு வருங்காலத்தில் குறைவாக இருக்கும்//

    அப்படி போடுங்க அருவாள.... இதுவல்லவோ மணியான யோஜனை!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.