Sunday, May 15, 2011

புதிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு அவசர அறிவுப்பு :கலைஞர் ஆட்சி போனதற்கு ஊழலோ,குடும்ப அரசியலோ காரணம் அல்ல
 
நான் என்னவோ தமிழ் நாட்டு மக்களுக்குதான் நல்ல புத்திவந்து வாக்களித்து புதிய ஆட்சியை செலக்ட் செய்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டேன். ஆனால் காரணம் அது வல்ல என்று இப்பதான் எனக்கு புரிந்தது. அப்பாடி இப்பதான் பெரிய நிம்மதி.
திமுக         
கட்சியின் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்று ஆராயப்பட்டதில் ஊழலோ,குடும்ப அரசியலோ, அடவாடித்தனமோ காரணம் அல்ல கலைஞர் அவர்கள் தஞ்சை கோயில் விசிட்தான் என்று காரணம் அறியப்பட்டது. அதனால் புதியமுதல்வர் திமுக ஆட்சியைவிட அதிக அளவு ஊழல் அடவாடித்தனம், பாராட்டுவிழா போன்றவைகளை செய்து கின்னஸ் ரிகார்ட்டில் பெயர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழ் நாட்டு மக்களை பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கொஞ்சம் இலவசங்களையும், ரஜினியை வைத்து மற்றும் ஒரு படத்தையும் , மாதம் ஒரு புகழ் பெற்ற சினிமா கலைஞர்களை வைத்து ஒரு பாராட்டு விழாவும், போனால் போகட்டும் என்று இலங்கை தமிழ்ர்களூக்கு என்று ஏதாவது பிரச்சனை வந்தால் காலை 10 ல் இருந்து மதியம் 1 மணி வரை ஒரு உண்ணாவிரதம் மட்டும் இருங்கள் ஆனால் மறந்தும் தஞ்சை கோயில் பக்கமே தலைவைத்து படுக்க வேண்டாம். முடிந்தால் தஞ்சாவுரை கேரளாவின் அல்லது இலங்கையின் ஒரு பகுதி என்று அறிவித்து தமிழ் நாட்டில் இருந்து கை கழுவிவிடலாம்.
 
நான் இன்று தினமலரில் படித்த செய்தியின் பாதிப்புதான் இந்த பதிவு. தி.மு.., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=241413
 
தஞ்சாவூர்
: தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
"
தஞ்சை பெரிய கோவிலுக்கு வி..பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி..பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.
கடந்த செப்
., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர்.அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசி சென்றார்.
கடந்த நவம்பரில்
, "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.
தேர்தல் துவங்கியது முதல்
, தி.மு.., - .தி.மு.., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு..,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு..,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளத
நன்றி : தினமலர்

9 comments:

  1. உண்மையாகவே இருக்குமோ !!!!

    ReplyDelete
  2. பகுத்தறிவு கட்சிக்கே செண்டிமெண்ட் பாடமா?..

    ஒருவேளை சட்டமன்ற கட்டிடத்தின் வாஸ்துதான் சரியில்லையோன்னு நான் நினைச்சேன்..

    மற்றபடி ஸ்பெக்ட்ரம் , குடும்ப ஆட்சி , மின்வெட்டு , விலைவாசி, திறைத்துரை ஆதிக்கம்லாம் பெரிசா என்ன?..

    நல்ல ஒரு ஜோசியர் தேவை திமுக வுக்கு..

    சாய்பாபா மறைவும் ஒரு காரணியோ?..

    ReplyDelete
  3. ராசா வீட்டு கண்ணுகுட்டிங்க தேர்தல் நேர களப்பணிக்கு வராததையெல்லாம் கூட சேர்க்கக்கூடாதுதான்

    ReplyDelete
  4. சீனா சார் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அம்மையார் கண்ணகி சிலையை எடுத்து மாதிரி இந்த கோயிலை எடுத்து இலங்கைக்கு மாற்றினாலும் அதிசயப்படுவதில் அர்த்தம்மில்லை

    ReplyDelete
  5. ///பகுத்தறிவு கட்சிக்கே செண்டிமெண்ட் பாடமா?..///
    சாந்தி மேடம் கட்சிதான் பகுத்தறிவு கட்சி ஆனால் கட்சியில் உள்ளவர்கள் பகுத்தறிவு வாதிகள் அல்ல

    ReplyDelete
  6. //ஒருவேளை சட்டமன்ற கட்டிடத்தின் வாஸ்துதான் சரியில்லையோன்னு நான் நினைச்சேன்//.
    யாரு கண்டா அதுகூட உண்மையாக இருக்கலாம் அது தெரிஞ்சுதான் அம்மையார் பழைய இடத்துக்கே போராங்களோ என்னவோ.

    ReplyDelete
  7. ///மற்றபடி ஸ்பெக்ட்ரம் , குடும்ப ஆட்சி , மின்வெட்டு , விலைவாசி, திறைத்துரை ஆதிக்கம்லாம் பெரிசா என்ன?..//
    இதெல்லாம் சுசூப்பி....பாருங்க அம்மையார் பண்ண போரதை

    ReplyDelete
  8. //நல்ல ஒரு ஜோசியர் தேவை திமுக வுக்கு..//
    நிறைய ஜோசியர் பதிவாளர்கள் இருக்கிறார்களே அவர்களை நாம சிபாரிசு பண்ணூவோமே..ஹா...ஹாஆஆஆஆஅ

    ReplyDelete
  9. இது ஒரு காரணமாக இருக்கலாம்தான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.