உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 26, 2011

ப்ளாக் எழுதும் பதிவாளர்களுக்கு ஆப்பு வைக்க இந்திய அரசாங்கம் முடிவு.

ப்ளாக் எழுதும் பதிவாளர்களுக்கு ஆப்பு வைக்க இந்திய அரசாங்கம் முடிவு.
சிலகாலத்துக்கு முன்னால், இணைய பயன்பாட்டின் மேல் இந்திய அரசு விதிக்க உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் குறித்து, ஒரு எச்சரிக்கைக் குரல் சில வலைதளங்களிலும் வலைக்குழுமங்களிலும் ஒலித்தது. வழக்கம் போலவே, யாராலும் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாமலேயே செவிடன் காதில் சங்குதியது போல பத்தோடு பதினொன்றாகக் காணாமலும் போய்விட்டது.
இந்த புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வருவதற்கான காரணம் பண்பாடுற்ற முறையிலும், ஆரோக்கியமற்ற முறையிலும் மேலும் தவறான கருத்துகளை எழுதுவதுமாகும். இன்றைய காலத்தில் இணையம் என்பது நாம் வாழ்வில் ஒரு முக்கியதுவத்தை பெற்றுள்ளது. இது வீட்டின் உள்ளே நுழைந்தது மட்டும்மல்லாமல் வருங்கால இளைஞர்களின்  வாழ்வில் இன்றியமையாதாக போய்விட்டது..அதனால் அதை கட்டுபடுத்த சட்டம் தேவையாக உள்ளது.
இந்த புதிய சட்டங்கள் வந்த பிறகாவது இணையப் பயன்பாட்டுக் கலாச்சாரம்ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம், அல்லது விவாதம் நிகழ்கிற களமாக, எழுதுகிறவருக்கும் வாசிக்கிறவருக்கும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் நிகழ்கிற களமாக உயரும் நேரம் வரும் என கருதுகின்றேன்.
அந்தவகையில்,  தினமணி செய்திதாளில்  கடந்த இரு தினங்களுக்கு முன்னால வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை இரண்டு முக்கியமான விஷயங்களைக் சொல்லி இருக்கின்றது. ஓன்று, ஆரம்ப வரிகளில் சொன்ன இணையப் பயன்பாட்டின் மீது அரசு உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தானது. இரண்டாவது, நம்மிடம் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்பு, தேசியஉணர்வு  குடிமைப்பண்பு  ஜனநாயகம் என்பது இந்த இரண்டு அடிப்படைகளின் மீது கட்டப்படுவதாக இருந்தால், நீடித்து நிலைக்கும்.
டிஸ்கி : இந்திய அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் இந்த Madurai Tamil Guy-யை பாதிக்காது..காரணம் பேச்சு உரிமை உள்ள நாட்டில் வசிக்கிறோமல.. அமெரிக்க நாட்டில் அந்த அளவு பேச்சு எழுத்து உரிமை இருக்க என்று கேட்டக கூடாது. அடுத்த நாட்டைப்ற்றி குறிப்பாக இந்திய நாட்டை பற்றி என்ன எழுதினாலும் அமெரிக்க அரசாங்கம் எங்களை கட்டுபடுத்தாது ஹீ...ஹீ...ஹீ
நமக்கும் தேவை அக்கறை 
 இணையதளப் பயன்பாடு தொடர்பாக அரசு விதித்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எதிர்பார்த்ததே. ஆனால், இந்த விஷயத்தில் தவறு முழுக்க முழுக்க அரசின் தரப்பில் மட்டும் அல்ல என்பது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகரின் விளக்கத்திலிருந்து தெரிகிறது. மக்களாகிய நாம் உரிய காலத்தில் அரசின் உத்தேச யோசனைகளைப் படித்துப்பார்த்து கருத்துத் தெரிவிக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உயர்ந்து வருவதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளைக் கண்காணிப்பதும், பொது நலனுக்கும் சில வேளைகளில் தனி நபர்களுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளைப் படித்துப் பார்த்து உடனுக்குடன் அகற்ற வேண்டியதும் சமுதாயக் கடமையாகும். ஆபாசமான, அருவருக்கத்தக்க வர்ணனைகள், உரையாடல்கள், கருத்துகள் போன்றவற்றையும் அழிக்க வேண்டியது அவசியம்.
எனவே இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துவிட்டதாக அரசைக் குற்றம்சாட்டுவது ஒருதலைப்பட்சமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் அரசின் சில கட்டுப்பாடுகள் தேவைக்கு அதிகமாகவோ, அதன் உள்நோக்கத்தைச் சந்தேகிப்பதாகவோ இருப்பதை மறுக்க முடியாது. ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு எப்படிக் கையாள்கிறது என்று பார்த்து எதிர்காலத்தில் அவற்றைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் சாத்தியமே. எனவே, ஒரேயடியாக இதை எதிர்ப்பதும் கண்டிப்பதும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
அதற்கும் முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ள சில கருத்துகள் அனைவரும் கவனிக்கத்தக்கவை.
இணையதளப் பயன்பாட்டாளர்களைக் கண்காணிக்கவும், சட்டவிரோதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துகிறவர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியமானவை என்பதால் இதைச் சட்டத்தின் மூலமாகவே அமல்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அரசின் ஒப்புதலுடனோ அல்லது நீதிமன்றங்களிடம் தெரிவித்து அவற்றின் ஆணைப்படியோதான் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இணையதளத்தைத் தவறான செயல்களுக்கு அல்லது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் யார், அவர்களுடைய பாஸ்வேர்டு, பாலினம், கல்வி, வயது, தொழில், முகவரி போன்ற தகவல்களைத் திரட்டவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுடைய செய்கை தேச விரோதமாகவோ சமூகத்தில் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் விதத்திலோ இருந்தால் உரிய போலீஸ் அமைப்புகள் மூலம் விசாரிக்கவும் இந்த விதிகளும் வழிகாட்டு நெறிகளும் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
புதிய விதிகளை அமல் செய்வதற்கு முன்னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறியவும், அதைப்பற்றி விவாதிக்கவும், உரிய திருத்தங்களைக் கூறவும், ஆட்சேபங்கள் இருந்தால் உரிய வகையில் தெரிவிக்கவும் வரைவு வாசகங்களை வெளியிட்டிருந்ததாகவும், 2 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் சந்திரசேகர்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் நம் நாட்டில் படித்தவர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டவர்களும் பொது விஷயத்தில் அக்கறையோடு செயல்படுவது இல்லை என்பதில் உண்மை இருக்கிறது என்பதுதான். எல்லோருமே சுயநலவாதிகளாக இல்லை என்றாலும் பொதுநலன் பேசுகிறவர்களும் செயல்பாடு என்று வரும்போது சோம்பல் மிகுந்தவர்களாகவோ, அதிகாரிகளிடம் பேச அச்சமோ, கூச்சமோ உள்ளவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இப்படி ""திண்ணைப் பேச்சு வீரர்களாகவே'' பெரும்பாலானவர்கள் இருப்பதால் மக்களைப் பாதிக்கும் பல சட்டங்கள் போதுமான விவாதம் இல்லாமல் - மாற்றுக்கருத்துகள் கூறப்படாமல் - அரசின் நோக்கத்துக்கேற்பவே தயாராகின்றன.
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள ஆய்வுக்குழுக்கள் அல்லது ஆலோசனைக் குழுக்கள் இந்தச் சட்டங்களை உரிய வகையில் ஆய்வு செய்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் நடைபெறும் விவாதங்களைக் கவனிக்கும்போது முக்கியமான அம்சங்கள் குறித்து ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஆழ்ந்த கவனத்துடன் விவாதிப்பது இல்லை என்பதை நேரிலேயே பார்க்கிறோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் விவாதமே இல்லாமல் ""கில்லட்டின்'' என்ற முறையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 40 அல்லது 50 மசோதாக்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம்.
அவ்வளவு ஏன், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி போன்ற நாள்களில் எல்லா ஊர்களிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அரசியல் கட்சி அதிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்பதையும், அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்மானங்களை வாசித்து, உரிய விவாதம் இன்றி ஏற்பதையும் பெரும்பாலான ஊர்களில் பார்க்கிறோம்.
இதெல்லாம் அரசியல்வாதிகளின் வேலை என்று விட்டுவிடாமல் நமக்குள் ஓர் அமைப்பை உருவாக்கி விவாதித்து, அரசுக்கு ஆலோசனை கூறி, கண்காணிப்பதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். தவறான சட்டங்கள் அமலுக்கு வராமல் தடுப்பதில் நமக்கல்லவோ அக்கறை தேவை? அதற்குப் பெயர்தானே மக்களாட்சி?

8 comments :

 1. பாஸ்,
  உண்மையிலயே ரெண்டு பக்கமும் ரோசிச்சு எழுதி இருக்கிங்க.

  அரசாங்கம் எப்படியும் கேட்டுக்காது. நம்மாளுங்களாச்சும் கேட்டுக்கறாய்ங்களா பார்ப்போம்

  ReplyDelete
 2. இணையத்தில் எழுதுவோ கண்டதையும் எழுதாமல் இருக்கவும், தேச நலன்களுக்கு எதிராக, சமூக நலன்களுக்கு எதிராக, குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்கவும் - ஒரு கண்காணிப்பு மிகவும் அவசியம் .. அமெரிக்க - கனடாவில் கூட இணையப் பாவணைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஏன் மின்னஞ்சலே கண்காணிக்கப்பட்டு வருவது தான் அதிர்ச்சித் தகவல்..

  ஆனால் அதே சமயம் எழுதுவோரின் குரல்வளையை நசுக்காமல் இருக்கவும் வேண்டும், எழுதுவோரின் எழுத்துரிமைக்கு பூரண அங்கீகாரமும், சுதந்திரமும் தேவை ...

  இந்திய அரசின் இணையக் கட்டுப்பாட்டு சட்டம் வரவேற்கத் தக்கது ஆனால் அது குறித்து போதிய அளவு விவாதிக்கவும், எடுத்துரைக்கவும் அவகாசம் தரவும் வேண்டும் .. என்பது எனது விருப்பம் ..

  ReplyDelete
 3. சட்டம் செய்வதை விட நம்முடைய தார்மீக ரீதியான பொறுப்புகள்தான் இதனை செயல்படுத்த முடியும். இணையத்தில் டிஜிட்டல் அலைகளாக உள்ள கோடிக்கணக்கான பதிவுகள் அனைத்தும் சாகா வரம் பெற்று, மூன்று தலைமுறை தாண்டியும் படிக்கப் பெறும். வருங்கால சந்ததியினருக்கான செய்திகளாக்வும் இவை இருக்கக்கூடும். எனவே ,பொறுப்பு அவசியம்.

  ReplyDelete
 4. இந்த புதிய சட்டங்கள் வந்த பிறகாவது இணையப் பயன்பாட்டுக் கலாச்சாரம்ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம், அல்லது விவாதம் நிகழ்கிற களமாக, எழுதுகிறவருக்கும் வாசிக்கிறவருக்கும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் நிகழ்கிற களமாக உயரும் நேரம் வரும் என கருதுகின்றேன்.//

  அதே..

  நிறைய தரமற்ற படைப்புகளும் கூட்டமும்..

  அதை நீக்கணும்னா அதிகமான தரமான படைப்புகள் வரணும்..

  பின்னூட்டத்துக்காக எழுதுவது குறையணும்..

  ReplyDelete
 5. சரியான தகவல்களையும் அவைபற்றிய கருத்துக்களையும் சரியான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். அரசின் கட்டுப்பாடுகள் எப்படியிருக்கும் என்பது தெரிந்த கதைதான். நமக்கு நாமே என்ற கட்டுப்பாடுதான் சரியானதாக இருந்திருக்கும். ஆனால் அதனை மிகச்சில பேர்தான் கடைப்பிடிக்கிறோம் என்பதுதான் பிரச்சினை. பின்னூட்டம் என்ற பெயரில் என்னதான் எழுதுவது என்ற வரையறையே இல்லாமல் போய்விட்டது. தங்களுக்குப் பிடிக்காத பிரபலங்கள் அவர்கள் எத்தனைப் பெரியவர்களாக இருந்தாலும் மிகமிக கேவலமாக எழுதுவது தங்கள் உரிமை என்றே நிறையப்பேர் நினைப்பதும் ஒரு அவலம்தான்.

  ReplyDelete
 6. முருகேசன், இக்பால் செல்வன், சாகாம்பரி, சாந்தி, அமுதன் நீங்கள் அனைவரும் நல்ல பதில் கருத்துகளை வழங்கி இருக்கிறிர்கள். நன்றி

  நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல பதிவுகளை படிப்பதுண்டு அப்போது அதில் வரும் பின்னுட்ட கருத்துகள் பதிவுகளுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது. சாட்டு ரூம்களில் பேசுவதையெல்லாம் கருதுக்களாக பதிவிடுகிறாரகள்.

  என்னுடைய பதிவின் நோக்கமே தமிழில் படிக்க வருபவர்களுக்கும் வருங்கால நம் சந்ததியனர் இங்கு படிக்க வந்தால் நல்ல விஷயங்களும் கருத்துக்களும் நகைச்சுவைகளும், அனுபவங்களும் எளிமையான தமிழில் கிடைக்க வேண்டும் எனபதுதான்.அதற்க்காக முடிந்த வரையில் நாம் அனைவரும் நல்ல தகவல்களை வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்வோம்.

  நான் ஒரு புதிய பதிவர் அதனால் நான் தவறு ஏதும் செய்தால் அது உங்கள் கண்ணில் பட்டால் சுட்டிக் காட்டுங்கள். அது தவறாக எனது மனதிற்கு பட்டால் நான் என்னை திருத்தி கொள்கிறேன். மாறுபட்ட கருத்தாக இருந்தாலும் தைரியமாக கூறுங்கள்.

  உங்கள் விலை மதிப்பு மிக்க நேரத்தை செலவீட்டு என் பதிவை படித்து கருத்து இட்ட அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் மீண்டும்

  ReplyDelete
 7. தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பூங்கோதை மூலம் வாய்ப்பூட்டு போட நினைத்தார்கள்.அவர்கள் உள்குத்து வேலைகளுக்கே நேரமில்லாமல் போனதால் செயல்படுத்த இயலாமல் போய் விட்டது.

  பரந்து கிடக்கும் இணையத்தை சட்டம் தன் கைப்பிடியில் கொண்டு வந்து விடுமென எதிர்பார்க்க முடியாது.சுய கட்டுப்பாடும்,நாகரீகமும் தனி மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

  குறைகள் இருந்தாலும் தொலைக்காட்சி,பத்திரிகைகள் செய்யத் தவறியவைகள் சுதந்திரமாக இணையத்தில் அலசப்படுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 8. ஐயா,
  ஒரு உண்மை சம்பவத்தை பத்தி படியுங்கள் ப்ளீஸ்.

  சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்:
  தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.

  பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?

  இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு

  உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.

  தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.

  சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.

  ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.

  நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.

  நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?

  பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?

  ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.

  இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?

  இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.

  இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.

  சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?

  ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.

  இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.

  http://www.ayyerthegreat.blogspot.com/

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog