உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 11, 2011

டம்மி புருஷன் தானா?

டம்மி புருஷன் தானா?
அத்தான் கவலைப்படாதீங்க. சமையல் எனக்குப் பிரமாதமா வரும். துணி துவைக்கிறது, வீட்டு வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!"
"
என்ன சொல்றே அப்ப நான் டம்மி புருஷன் தானா?"
(இப்படி ஒரு மனைவி கனவில்தான் வருவா..)

"நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''
''
யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''
 (சந்தோஷ செய்தியை தரும் டாக்டர்களும் இருக்கிறார்கள்)

"என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக் கடிதம் வருது ஸார்!"
"
உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா?"
"
நேர்ல திட்ட பயந்து என் புருசனே எழுதறார்னு சந்தேகப்படறேன், சார்!"
 (பதிவாளர்களுக்கு திட்டி கமெண்ட் ஏதும் வந்தா ஒரு வேளை அவர்களின் மனைவி அல்லது கணவன் அனுப்பிய கமெண்டாக இருக்குமோ?)

"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!"
"
அப்படியா?"
"
ஆமாம்...நேத்துகூட துணிமணி துவைக்கும் போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப் போட்டுட்டேன்... அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல...ஹி... ஹி...!"
 (மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா மக்காஸ் இதை யாரும் ஏன் என் கிட்ட இதுவரை சொல்லலை)

"பயங்கரவாதம் எந்த உருவத்துலே வந்தாலும் எதிர்க்கணுங்க.."
"
சரி.. அதுக்காக என் அம்மாவை எதிர்த்து தினமும் நீ சண்டை போடுறது சரியில்லை.."
(மனசுக்குள்ள ....நல்லவேளை நாம தப்பிச்சோம்)
மாப்பிள்ளை ரொம்ப சமர்த்துன்னு எப்படி ஒரே ராத்திரியில் கண்டுபிடிச்சே!"
"
முதலிரவில் பாலை குடிச்சிட்டு செம்பை உடனே கழுவணுமா இல்லை காலையில் கழுவலாமான்னு கேட்கிறாரே!"
(யாரம்மா அது பெட் ரூம் ரகசியத்தை வெளியில சொல்லுரது)
என் சொந்தக்காரங்களை கண்டால் உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கிறதேயில்லை!"
"
அப்படி சொல்லாதே... உன் தங்கச்சியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"
(ஹீ...ஹீ....ஹீ........)
என் மனைவி கூட படுத்தாதான் டாக்டர் எனக்கு தூக்கமே வருது..."
"
இதுல தப்பு இல்லையே படுத்துக்க வேண்டியதுதான்..."
"
இதைத்தான் டாக்டர் நானும் சொன்னேன். ஆனா ஆபீஸ்ல யாருமே ஒத்துக்க மாட்டேங்குறாங்க"
(தூங்கும் போது யாரும் தொந்தரவு பண்ணவரமாட்டாங்க..ஏன்னா நாம தூங்குரது ராட்ச்சி கூடத்தான)
மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?''
''
அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!
(இந்த ஆண்களே இப்படிதான் குடும்ப விவகாரத்த வெளியே சொல்லிடுவாங்க)

கடைசி நேரத்தில உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க!"
"
கடைசி நேரத்தல இப்படி சொன்னா எப்படி டாக்டர்! நாங்க எல்லா ஏற்பாடும்
செஞ்சுட்டோமே...!"
(ஙே.......}
என் மனைவி பக்கத்து வீட்டுக்காரியோடு எல்லா விஷயத்துலேயும் போட்டி போடுவாள்... அதான் பயமா இருக்கு!"
"
இதுக்கு ஏன் பயப்படறீங்க?"
"
பக்கத்து வீட்டுக்காரார் இன்னிக்கு அவர் பொண்டாட்டி கையால நாலு அடி வாங்கினாரு..!"
(
எங்க பக்கத்து வீட்டுகாரி சாது அதுனால நான் தப்பிச்சேன்)
இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?"
"
நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."
(இதுக்குதான் மனைவியை ஷாப்பிங் தனியே பண்ண அனுப்ப கூடாது ...)
உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?"
"
அந்த ஆளையே பிடிக்காது!"
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!"
"
என் மனைவி 'பாத்திர' காளியாயிருவா!"
(
இதுக்குதான் பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்.. அதுல நான் ரொம்ப சமத்து)
என்னது புதிய முயற்சிகளை உன் கணவர் ஊக்குவிப்பதில்லையா?"
"
ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு சாம்பார் ஊத்திக்கவே மாட்டேனுட்டார்!"
(மனைவி சமைக்கிறாங்கரது புதுமையான முயற்சிதானே இந்த காலத்தில்)
ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள். திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால், அது அவள் கணவன்தான்.... ஆச்சரியம் தாங்காமல் கண்வனிடம் கேட்டாள்...

மனைவி : "என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க?"
கணவன் : "20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில் கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்"
மனைவி : "சரி, அதுக்கென்ன இப்போ?"
கணவன் : (அழுதுகொண்டே) "இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்...."


 
வோட்டை போட்டுவிட்டு தேர்தல் முடிவுக்காக காத்து கிடக்கும் ஏமாளி தமிழக மக்களுக்காக நான் படித்து ரசித்த ஜோக்குகளை இங்கே வழங்குகிறேன். வந்தமா படித்தோமா சிரித்தோமா ஏதோ கமெண்ட் போட்டோமானு இருக்கனும். ஏற்கனவே படித்த ஜோக்குதானு ஏடா கூடாமா ஏதாவது கேட்டிங்க தொலைச்சு புடுவேன் தொலைச்சு....ரொம்ப பேசினா உங்களையும் 2ஜி வழக்குல பங்கு இருக்குனு திகார் ஜெயிலில் உள்ள தள்ளிடுவேன். தமிழ்மட்டும்தான் தெரியும்முனு தப்பிக்க முடியாது. ஒரு மாதம் உள்ள வைச்சா ஆட்டோமெட்டிக்கா ஹிந்தி பேச வந்துரும்.. ஜாக்கிரதை

7 comments :

 1. மிக்க அருமை.....

  ReplyDelete
 2. விவிசி..:))))

  //கடைசி நேரத்தில உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க!" //

  பொறுப்பில்லாத டாக்டருக்கு கண்டனங்கள்..

  ReplyDelete
 3. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஜோக்ஸ் விட, பதிவில் கடைசியில் போட்டு இருக்கிற டிஸ்கி ரொம்ப நல்லா இருக்குது. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 4. காலையில் செம டானிக்!வாழ்த்துக்கள்!(சுட்டதாக இருந்தாலும்!)

  ReplyDelete
 5. சரியான காமடி, ஹி ஹி டிஸ்கியும் தான்

  ReplyDelete
 6. தேடித்தேடி 'மகிழம்பூச்சரத்திற்கு' எதிரான ஜோக்குகளா போட்டு சிரிக்க வைக்கிறது தப்பில்லையா?

  ReplyDelete
 7. அருண்,யோகா, சாந்தி மேடம், சித்ரா மேடம், ஜலீலா மேடம் அனைவரின் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றிகள் பல

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog