உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 28, 2011

வேடிக்கை பார்க்கும் கையாலாகாத இந்திய அரசு

வேடிக்கை பார்க்கும் கையாலாகாத இந்திய அரசு


இலங்கை கடற்படை அட்டகாசம் இந்தியதமிழக மீனவர் படுகொலை' என்ற செய்தியை,அடிக்கடி நாம் நாளிதழில் படிக்கின்றோம். சம்பவ தேதியும், இறந்தவர்களின் பெயரும் தான் மாறிக் கொண்டிருகிறதே தவிர, சுடப்படும் சம்பவ்ங்கள் நின்றபாடில்லை. வழக்கமாக ஒரு லட்சம் ரூபாயும், மத்திய அரசுக்கு ஒரு கடிதமும், இறந்த நபரின் குடும்பத்திற்கு ஒரு அனுதாப செய்தியும் அனுப்பி, தன் கடமையை முடித்துக்கொள்ளும் தமிழக அரசு, எலக்சன் வருவதால் இந்த முறை ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது.

மத்திய அரசும் எலக்சன் வருவதால் தன் பங்குக்கு கடுமை காட்டி,இலங்கைத் தூதரிடம் விசாரித்தும்; இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் விசாரித்தும் அறிக்கை தரச் சொல்லியுள்ளது. (சாதனைதானடா??????)அத்துமீறி அல்லது வழி தவறி நம் இந்திய கடல் எல்லைக்குள் வரும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை மீனவர்களை நாம் ஒரு முறையேனும் சுடப்பட்டதாக வரலாறு உண்டா என்று பார்த்தால் இல்லையென்ற முடிவுதான் பதிலாக கிடைக்கும்.மேலும் நமது பரம்பரை எதிரி நாடான பாகிஸ்தான் கூட நம் மீனவர்கள் எல்லை தாண்டி அவர்களின் கடல் எல்லைக்குள் போகும்போது, அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தோ அல்லது கைதிகள் பறிமாற்ற முறையில் விடுதலை செய்கிறதே தவிர, நம் மீனவர்களைச் சுட்டுக் கொன்றதில்லை. அவர்களுக்கு இருக்கும் இரக்கம் கூட இலங்கைக்கு இல்லாமல் போனது ஏன்?

மத்திய அரசும் தமிழக அரசும் நடிகர் வடிவேலு படத்தில் வாய்சவால் விடுவது மாதிரி வாய்ச்சவடால் விட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கும் ,மத்திய அரசு இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஒரு கடிதம் எழுதியும் வாயை மூடிக்கொண்டிருக்கிறது.இது மட்டிமில்லாமல் 2020 ல் நாம் உலகத்தின் வல்லரசு நாடாக ஆகிவிடுவோம் என்ற ஒரு வீராப்பு பேச்சு வேறு.அதேசமயம் இந்திய அரசு கடிதம் எழுதினாலும் சரி அல்லது உறுதியான மிரட்டல் உருட்டல் விடுத்தாலும் அஞ்சும் நிலையில் இன்றைய இலங்கை அரசு இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை .

இதற்கு காரணம் இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவோ, இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ எந்த ஓரு உறுதியான முடிவு எடுக்காமல் மதில் மேல் பூனையாக இருந்ததே ஆகும்,அதன் விளைவு நமது எதிரி நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் நேரடியாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்தது மட்டுமில்லாமல் இப்போது அதன் வளர்ச்சிகளுக்கும் துணை நிற்கின்றன. வேடிக்கை பார்க்கும் கையாலாகத அரசாக நமது இந்திய அரசாங்கம் இருக்கிறது.இலங்கை அரசுக்கு நமது இந்திய அரசாங்கத்தின் உதவி தேவையில்லை. நமது அரசாங்கத்திற்குதான் இலங்கையின் உதவி தேவைப்படுகிறது அதனால்தான் என்னவோ இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வந்தால் சிறப்பு வரவேற்பு தரப்படுகிறது.

நமது எதிர்கட்சிகளூம் தேவையில்லாமல் பத்து லட்சம், 20 லட்சம் என்று மக்களை கூட்டி தம் பலத்தை நிறுவிப்பவர்கள். இந்த மீனவர்களுக்காக ஒரு 20 லட்சம் மக்களை கூட்டி மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் கண்டணம் தெரிவிக்காதது ஏனோ???

நமது அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் பழக்கமான சாதாரண விஷயம்தான். ஆளும் கட்சியை பொறுத்தவரை, மீனவர் படுகொலை என்பது உயிரிழப்பு இல்லை ஒட்டு இழப்பு ஆனால் எதிர்கட்சிகளுக்கோ கிடைக்கும் ஆதரவு ஒட்டு அவ்வளவுதான்.மீனவர்கள் படு கொலையில் இருந்து தடுப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது . அது கச்சதீவை இலங்கையிடம் கொடுத்தது போல தமிழகத்தையும் இந்திய அரசு தாரை வார்த்து கொடுத்து தமிழக மக்களை இலங்கையின் இரண்டாந்தர குடி மக்களாக ஆக்குவதன் முலமே தடுக்க முடியும்.நம் சகோதரன் இலங்கையில் உயிருக்காக போராடிய போது சினிமாக்களை பார்த்து சினிமாவே வாழ்க்கையாக நினைத்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு கிடைக்கும் நல்ல பரிசு இதுதான்.

--

5 comments :

 1. அதே தான்...அதே தான்...நேத்து தமிழக அரசு கலைமாமணி விருது அறிவிச்சிருக்காங்க...தமன்னா,அனுஷ்கா கு எல்லாம்...இது தான் அரசு...இது தான் தலைமை...இது தான் விதி...

  ReplyDelete
 2. மிகதெளிவான விளக்கம்..

  Frustrated and Angered about repeated deaths , We still have it & will continue until solution. If we all clap TOGETHER just once,SL will die to that sound. strong condemnation against SL navy :(

  ReplyDelete
 3. நம் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து கைதட்டுவது ரஜினி மாதிரி சினிமாக்காரர்களை பார்க்கும் போதும் அசத்த போவது யாரு என்ற டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் போதுமட்டும்தான். இதற்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை சாந்தி மேடம்.

  ReplyDelete
 4. ஆனந்தி மேடம் தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருது லிஸ்டில் இலங்கை அதிபர் பெயர் விட்டு போனாதாக செய்தி ஓன்று வெளிவந்துள்ளதாக ஒருதகவல் கசிந்துள்ளது. தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறந்த "தளபதிக்கான விருது" வழங்கப்படுமென்றும் ஆனால் அது எலக்சனுக்கு அப்புறம் தான் அவரை தனியாக அழைத்து சிறப்பு விழாவாக கொண்டாடப்படும் என்று செய்தி...

  ReplyDelete
 5. இப்படி பட்ட கேவலமான நாடு வேறு எதுவும் கிடையாது. மீனவத்தமிழன் இறப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இவர்களே கொன்று விடுகிறார்கள். தேர்தலில் புகட்டுவோம் பாடம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog