உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 6, 2011

யார் சொன்னது பறவைகளுக்கு உணர்வுகள் இல்லையென்று? ( பெண்கள் இதைப் பார்வையிட வேண்டாம்

யார் சொன்னது பறவைகளுக்கு உணர்வுகள் இல்லையென்று? ( பலவீனமான இதயமுள்ள பெண்கள் இதைப் பார்வையிட வேண்டாம்


மனிதர்களால் அடிப்பட்டு தெரு ஒரமாக கிடக்கும் ஒரு பெண் பறவை தன் துணையான ஆண் பறவையை எதிர் நோக்கி இருக்கிறது.துடித்துக் கொண்டிருக்கும் தனது துணைக்கு இறுதி நேரத்தில் வாஞ்சையோடும் காதலுடனும் உணவை ஊட்டிக்கொண்ட்டிருக்கிறது.மீண்டும் அது உணவை தேடிக் கொண்ட வந்த போதுதான் தெரிந்தது. தான் உயிருக்கு உயிராக நேசித்த தன் வாழ்க்கை துணை தன்னை தன்னம் தனியாக விட்டு விட்டு சென்றுவிட்டது என்று.....

அதை உணர்ந்த பின் இனிமேல் தன் துணை மீண்டும் வரமுடியாது என்று நினைத்த போது அது கதறி அழுகிறது.

நான் தூங்கும் போதும் கூட என் கனவில் வருபவள் அவள் ஆனால் அவள் தூங்கும் போதோ நான் வந்தது அவளின் கல்லறையில் என்று துயரத்துடன் நெஞ்சம் பதபதைக்க நான் தரவும் நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது என்று பித்து பிடித்து அருகில் வந்து நிற்கிறது.. ஆறுதல் சொல்லத்தான் அருகில் யாருமில்லை நம் இலங்கை தமிழர்களைப் போல........

நீ என்னை விட்டு சென்று விட்டாயே.......காதல் வானில் சிறகடித்து யாருக்கும் எந்த தொந்தரவில்லாமல் பாடித் திரிந்த நம்மை இந்த மானிடர்கள் அழித்து விட்டனரே.....இது நியாமா.......உயிரினங்கள் அனைவரும் சமம் என்று படைத்த அந்த இறைவன் தான் இந்த மனித மிருகங்களுக்கு உணர்த்தவேண்டும்.

மனக்கதறலுடன்

13 comments :

 1. உணர்வு பூர்வமானது.
  மிருகங்களிடமும், பறவைகளிடமும்
  அன்பும்,காதலும் மிகுதியாக உண்டு.

  ReplyDelete
 2. சரி சரி.. ஒரே ஃபீலிங்க்ஸு

  ReplyDelete
 3. very touching......nice one

  ReplyDelete
 4. அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 17-வது இடம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ///****அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 17-வது இடம். வாழ்த்துக்கள்.

  நன்றி ரஹீம் கஸாலி . நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு..... உங்களுக்கு நேரம் இருந்தால் அதை எப்படி தமிழ்மணத்தில் சென்று பார்ப்பது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி... வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க பாஸ்
  http://tamilmanam.net/top/blogs/2

  ReplyDelete
 7. ம்ச்... துக்கம் தொண்டையை அடைத்து விட்டது...

  //அதை எப்படி தமிழ்மணத்தில் சென்று பார்ப்பது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். //

  Try this link

  http://www.tamilmanam.net/top/blogs/2010/

  ReplyDelete
 8. Uyiraga ninaitha thunaiyai ilandhu ini eppadi vaalven endru kadharugiradhu!!!! ...

  paavam paravai... naanumdhan..


  Anubudan..
  Tamil.....

  ReplyDelete
 9. இந்த விஷய்ம் நான் இட்ட பதிவை பார்க்க, http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 10. டோண்டு ராகவன் சார் அவர்களுக்கு நீங்க அனுப்பிய லிங்கை பார்த்தேன் . உங்கள் பதிவில் இருந்த போட்டோவும் எனது பதிவில் இருந்த போட்டோவும் ஒரே போட்டோகிராபரால் எடுக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். நாம் இருவரும் ஒரே விஷயத்தை நமது அனுபவத்திற்கு ஏற்றவாறு பதிவு இட்டு இருக்கிறோம். நீங்கள் உங்கள் பதிவிற்க்கான விஷயத்தை உங்கள் நண்பரின் இமெயில் மூலம் கிடைக்க பெற்றதாக அறிந்தேன். அதே விஷயத்தை நான் கிழ்கண்ட ஆங்கில வலைத்தளத்தில் இருந்து பெற்று எனது வழியில் நான் வழங்கியுள்ளேன். அந்த வலைதளத்திற்கான முகவரி இதோ http://www.theearthconnection.org/blog/2009/06/a-sad-story/


  எனது வலைத்தளதிற்கு வருகை தந்தற்கு மிகவும் நன்றி.

  வாழ்க வளமுடன்.
  அன்புடன்,
  மதுரைத்தமிழன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog