Tuesday, January 24, 2023

  

@avargalunmaigal


அமெரிக்காவில் வேலை இழப்பும், இந்தியர்களின் நிலையும்


தி வாஷிங்டன் போஸ்ட் படி, கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் உட்பட, கடந்த ஆண்டு நவம்பர் முதல் கிட்டத்தட்ட 200,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இப்படிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில்  30 முதல் 40 சதவீதம் பேர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், அவர்களில் கணிசமானோர் H-1B மற்றும் L1 விசாவில் உள்ளனர். இப்படி வேலை இழந்தவர்கள் இங்கே தங்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலத்திற்குள்  (60 நாட்களுக்குள் )புதிய வேலைவாய்ப்பைக் கண்டுபிடித்து பணியில் அமர வேண்டும் அல்லது  இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.


தற்போதைய சூழ்நிலையில், அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட் குறைப்பு  நடவடிக்கைகளில் இருக்கும்போது, ​​அந்த குறுகிய காலத்திற்குள் வேலை கிடைப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது


இந்த 60 நாட்களுக்குள்  அவர்கள் வேலையைத் தேட வேண்டும் .அதே சமயத்தில்  இங்குள்ள வீடு கார் போன்றவைகளை விற்றும் குழந்தைகளின் படிப்பைப் பாதியில் நிறுத்தியும் செல்ல வேண்டும்  இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் ஆனால் அது மிகவும் எளிதல்ல கடினமான காரியம்தான்,

இது எப்படி என்றால் இயற்கையால்(சுனாமி ) பாதிக்கப்படும் போது சிலர் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மூழ்கிவிடுவார்கள், சில தப்பித்துக் கரை சேருவார்கள் ,சிலர் இந்த இயற்கை  அழிவால்  அதிகம் பாதிக்கப்படாமலே இருப்பார்கள் .அது போலத்தான் இதுவும்

இது போன்ற வேலை இழப்பு பிரச்சனைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல .பல கால கட்டங்களில்  ஏற்பட்டு இருக்கிறது அதையெல்லாம் கடந்துதான்  பல இந்தியக் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர் . அதில் என் குடும்பமும் விதிவிலக்கல்ல  இது போன்ற பிரச்சனைகள் சந்தித்துதான் பலரும் இன்று வறை வாழ்ந்தும் இருந்தும் வருகிறார்கள் (  நாங்கள் 26 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறோம் )


இப்படி பிரச்சனைகள் ஏற்படும் போது மாற்று வழி என்னென்ன என்று யோசித்துச் செயல்பட வேண்டும். தாய் நாட்டை விட்டு வெளியேறும் போது இப்படிப்பட நிலமைகள் வராலம் என்பதை யோசித்தே நாம் செயல்படவேண்டும்.


இந்த வேலை இழப்பு என்பது ஏதோ இந்தியர்களுக்கு மட்டுமே என்று நினைக்க வேண்டாம், இது இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும்தான் பாதிப்பு.   குறைந்தபட்சம் இந்தியர்கள் தங்களது வருவாயிலிருந்து  சேமித்து வைத்து இருப்பார்கள் அடுத்து அவர்களை வரவேற்க இந்தியாவும், இந்தியாவில் உள்ள குடும்பங்களும்,  நட்புகளும் உறவுகலும் உண்டு, ஆனால் அமெரிக்கர்களின் நிலையைப் பாருங்கள். பலர் இந்தியர்களைப் போலச் சேமிப்பு இல்லாமல்தான் இருப்பார்கள்.  பலர் ஐடியில் வேலை பார்த்தாலும் அந்தந்த மாத சம்பளத்தை மட்டும் எதிர்பார்த்து குடுமப்ங்களை நடத்துவார்கள் .அவர்கள் வேலை இழப்பதால் பலரும் தெருவிற்கு வந்துவிடும் நிலைமையும் இங்கு இருக்கிறது ,ஆனால் என்ன அவர்கள் அமெரிக்கத் தெருவில் இருக்க முடியும்  இந்தியர்கள் இந்தியா சென்றுவிட வேண்டும் அவ்வளவுதான் வித்தியாசம் இப்ப யோசிச்சு பாருங்க யார் நிலை மிக மோசம என்று..


மீண்டும் சொல்கின்றேன் இந்தியர்கள்  வேலையைத்தான் இழக்கிறார்கள் வாழ்க்கையை இழக்கவில்லை தொலைக்கவில்லை அவர்கள் வேலையை இழந்தாலும் இதுவரை சேர்த்து வைத்த சேமிப்பு இருக்கிறது அனைத்து அரவணைக்க நாடு மற்றும் குடும்ப  உறவுகள் நட்புகள் இருக்கிறது . இந்தியாவிற்கு வந்து ஏதாவது ஒரு  சிறுதொழிலாவது செய்து இவர்கள் வாழ்ந்து விட முடியும் . ஆனால் அமெரிக்கர்களின் நிலை அப்படி இல்லை அதனால் இந்தியா திரும்பும் இவர்களுக்காக இந்தியர்கள் யாரும் பரிதாபப்படத் தேவையில்லை.  காரணம் இவர்களின் அமெரிக்கக் கனவுகள் மட்டுமே பாதிக்கப்படுகிறது.. இந்தியக் கனவுகளுக்கு இவர்களுக்கு ஒரு போதும் தடையில்லை

குறிப்பு: இங்கு வேலை இழந்த அமெரிக்கர்களை விட வேலை இழந்த அமெரிக்க  வாழ் இந்தியர்கள் அதாவது  அமெரிக்க சிடிஷன் ஷிப் பெற்ற இந்தியர்களுக்கு ஐடி வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. (NRI இந்தியர்கள் அல்ல ) .காரணம் நம்மவர்களிடையே உள்ள நெட்வொர்க்தான்.. காரணம் நல்ல பதிவியில் இருப்பவர்கல் நம் இந்தியர்கள் அவர்கள் ஒரு வெள்ளைக்காரனை வேலைக்க் அமர்த்துவதை விட ஒரு இந்தியனைத்தான் வேலைக்கு அமர்த்துவார்கள் அமர்த்துகிறார்கள்


டிஸ்கி :

இப்படிப்பட்ட பிரச்சனிகள் ஏற்படும் போது நாம் என்ன செய்யலாம்?

பல் வாட்ஸப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக் கொள்கிறார்கள் அப்படிப்பட்ட வாட்ஸப் குருப்புகளை கண்டறிந்து சேரலாம்

Global Indian Technology Professionals Association (GITPRO) and Foundation for India and Indian Diaspora Studies (FIIDS) on Sunday launched a community-wide effort to try and help these IT professionals by connecting job seekers to job referrers and informers.

உலகளாவிய இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (ஜிஐடிபிஆர்ஓ) மற்றும் இந்தியா மற்றும் இந்தியப் புலம்பெயர் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை (எஃப்ஐஐடிஎஸ்) ஞாயிற்றுக்கிழமை சமூகம் தழுவிய முயற்சியில் இந்த ஐடி நிபுணர்களுக்கு வேலை தேடுபவர்களை வேலை பரிந்துரைப்பவர்கள் மற்றும் தகவல் தருபவர்களுடன் இணைப்பதன் மூலம் உதவ முயல்கிறது.  

இந்த அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளலாம்..


அடுத்தாக அருகில் உள்ள அண்டைய நாடுகளுக்குச்  செல்ல முயலலாம் உதாரணமாகக் கனடா அங்கு ஐடி வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆனால் வேறு வேலைதேடிப் பெறலாம் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெறலாம் அதன் பின் சூழ்நிலை மாறும் போது மீண்டும் நமது பழைய வேலையைத்தேடலாம் அல்லது ஜப்பான் செல்லலாம். இதெல்லாம் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டாம் என்பவர்களுக்காக மட்டுமே


தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தபோது பொங்கல் வைத்தவர்கள் குடிநீரில் மலம் கலந்த போது பொங்கல் வைக்க மறந்தது ஏன்?



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல் வருமா"
    என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரு சொர்க்கமா ? நாசமா போச்சு
      பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாத தெலுங்கன் ஆளும் மாநிலம் சீக்கிரமே வட இந்தியர்களால் கபளீகரப்பட்டு தமிழர்கள் விரட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை . சென்னை ஜன நெரிசலை பார்த்தாலே மயக்கமாக இருக்கு

      Delete
    2. உங்களது கருத்தை நான் மறுக்கவேயில்லை, நானும் உங்கள் ஜாதியே...

      இதற்கு நாம் தானே காரணம் ? ஓட்டுப் போடும் உரிமை இருந்தும் பயன் ?

      Delete
  2. மதுரை, பதிவின் கருத்துகள் அனைத்தும் டிட்டோ செய்கிறேன். நல்லா சொல்லியிருக்கீங்க. நம்மூருக்கு வரும் இவர்கள் இங்குள்ள சம்பளத்திற்கு இறங்கி வர வேண்டும். இங்கும் இப்போது சம்பளம் மிகவும் குறைவாகத்தான் பல கம்பெனிகளில்... மற்றும் வேலை கிடைப்பதும் அத்தனை எளிதல்ல. வருபவர்கள் நல்ல திறமைசாலிகள் என்றால் வாய்ப்பு உண்டு.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.