உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 18, 2015

கலைஞர் ஆட்சியில் செய்ததை அவர் ஆட்சியில் இல்லாத போது தொடரும் விஜய் டிவிகலைஞர் ஆட்சியில் செய்ததை  அவர் ஆட்சியில் இல்லாத போது தொடரும் விஜய் டிவி

கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் அடிக்கடி திரைப்பட துறையினறை அழைத்து விழா நடத்தி தானும் மகிழ்ந்து மக்களையும் மகிழ்வித்து கொண்டிருப்பார். ஆனால் ஜெயலலிதா அவர்கள் அப்படி செய்வதில்லை. ஆனால் அந்த குறையை விஜய் டிவியினர் நிவர்த்தி செய்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இப்படி செய்வில்லை என்றால் தமிழக மக்கள் இந்திய விவசாயிகள் போல தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.அதனால் மக்களை காப்பாற்றி வரும் விஜய்டிவிக்கு நாம் நன்றி சொல்வோம்

சின்ன சின்ன ஸ்டேடஸ்  :


தமிழக முதலமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் இப்படி இருக்கிற முக்கியமான அமைச்சர்கள் எல்லாம் வெறும் டம்மி பீஸ்தான்

குமாரசாமி கணக்கில் தவறு செய்ததற்க்கு காரணம் அவர் சிறுவயதில் வெண்டைக்காய் சாப்பிடாததுதான்

மங்கோலியாவுக்கு 6000ஆயிரம் கோடி கொடுத்த மோடி இந்திய விவசாயிகளுக்கு தூக்கு கயிறு வாங்குவதற்காவது மானியம் கொடுத்தா நல்லா இருக்கும்..

வெளிநாடு வாழ் இந்தியர்கள் என் ஆட்சியை பார்த்து தாய்நாடு திரும்ப விரும்புகிறார்கள்- மோடி#

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவை நல்ல கொள்ளை அடித்து சுரண்டலாம் என்று வழி காட்டி இருப்பார் மோடி. அதனால்தான் அவர்கள் இந்தியா வர விரும்புகிறார்கள். காரணம் வெளி நாட்டில் உழைத்துதான் சம்பாதிக்க முடியும் ஏமாற்றி சம்பாதிக்க முடியாது


ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு வார்னிங்க்

உங்கள் தொகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் அவர்கள் உங்கள் வீட்டில் இருப்பதை திருட வரமாட்டார்கள் உங்களிடம் இருக்கும் வோட்டை மட்டும் பணம் கொடுத்து பறிக்க முயல்வார்கள். அடுத்த சில மாதங்களுக்கு உங்கள் தொகுதியில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் மின்சாரம் தண்ணிர் போன்றவைகளுக்கு தட்டுப்பாடு இருக்காது .


மனைவி : என்னங்க உங்க பிள்ளை பள்ளிகூடம் போகாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான் அவனை கண்டியுங்கள் இல்லை என்றால் உருப்படாமல் போகப் போகிறான்.

கணவன் : அடியே நம்ம புள்ளையை கரிச்சு கொட்டாதடி.. அவன் வருங்காலத்தில் இந்திய பிரதமராக வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது.. கால நடப்பு தெரியாமா ஒளராதேடி

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையக் காரணம் என்ன?
அழகான டீச்சர் இல்லாததுதான் இதை சரி செய்யுமா அரசாங்கம்


கலைஞருக்கு நிறைய பேரன் பேத்திகள் இருப்பது மிக வசதியாக இருக்கிறது அதனால்தான் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல கூட்டணிக்கு அச்சாரம் போட உதவியாக இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன் ( டிஜே துரை )

4 comments :

 1. கலக்குங்க..
  தம +

  ReplyDelete
 2. வெண்டிக்காய் சாப்பிட்டிருந்தால்
  மூளை நன்றாக வேலை செய்திருக்கும்
  உண்மை தான்
  ஒரு வெண்டிக்காய்
  ஒரு முட்டைச் சக்தி

  ReplyDelete
 3. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. விடுபட்ட சிலவற்றை இங்கே படிக்க முடிந்தது.

  ReplyDelete
 4. //கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் அடிக்கடி திரைப்பட துறையினறை அழைத்து விழா நடத்தி தானும் மகிழ்ந்து மக்களையும் மகிழ்வித்து கொண்டிருப்பார். ஆனால் ஜெயலலிதா அவர்கள் அப்படி செய்வதில்லை. ஆனால் அந்த குறையை விஜய் டிவியினர் நிவர்த்தி செய்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இப்படி செய்வில்லை என்றால் தமிழக மக்கள் இந்திய விவசாயிகள் போல தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.அதனால் மக்களை காப்பாற்றி வரும் விஜய்டிவிக்கு நாம் நன்றி சொல்வோம்//

  கலைஞர் செய்தது பிழையென்று கூறுவது நியாயமாகும்!! ஒரு தொலைக்காட்சி விழா எடுப்பதை ஏன் இவ்வாறு கூற வேண்டும் ? ஒரு தொலைக்காட்சி விழா நடத்தாமல் அரசியலா பேசவேண்டும் ?

  விஜய் டீவிக்கும் தற்கொலைக்குமான தொடர்பை விளக்க முடியுமா?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog