Wednesday, May 6, 2015



letter arasiyal
ஸ்டாலின் மற்றும் அன்பு மணிக்கு மதுரைத்தமிழன் எழுதிய திறந்த கடிதம்

தளபதி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழக மக்களின் நலனிற்காக பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் அது போல மருத்துவர் அன்புமணி அவர்களே நீங்களும் தமிழக மக்கள் நலனிற்காக் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். அப்படி எழுதுவது தப்பில்லை. ஆனால் இரண்டு நாளாக நெட்டிற்கு நான் வராததால் நீங்கள்  என்ன எழுதினீர்கள் என்று தெரியவில்லை. அதனால் உங்கள் இரண்டு பேருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் நீங்கள் கடிதம் எழுதினால் CC போட்டு எனக்கும் ஒன்று அனுப்பிவிடுங்கள். அப்படி அனுப்பினால்தான் அதைப் படித்துவிட்டு என்னால் கலாய்க்க முடியும். இப்ப பாருங்கள் நான் கலாயத்து எழுதாதால் இணையமே மிக சோகமாக இருக்கிறதாம். உங்களுக்கு எப்படி தமிழக மக்கள் முக்கியமோ அது போல எனக்கும் இணைய தள மக்கள் முக்கியம்.



உலகின் ஒப்பற்ற தலைவாரன மோடி தங்கள் நாட்டிற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மக்கள் முன் வைத்துள்ளனராம். அதற்கு மதிப்பு அளித்து மோடி இந்தியா வரக் கூடும் என்று தகவலறிந்த வட்டாரம் சொல்லுகிறது/




வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி எந்த கட்சியோட கூட்டணி வைக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோருக்க்கும் கண்டிப்பாக ஒன்றுமட்டும் நல்லாவே தெரியும் பிஜேபி கூட மட்டும் யாரும் கூட்டணி வைச்சுக்க மாட்டாங்க என்பதும் மட்டுமே.


கலைஞரும், ஸ்டாலினும், விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்பது தேர்தல் பிரச்சாரத்தின் போது வடிவேல் இல்லாத குறையை நிறைவேற்ற மட்டுமே என்று நினைப்பதால்தானாமே?


முதல்வர் இயங்காமல் ஒரு மாநிலம் செயல்படும் என்று நிருபிப்பதற்காவே முதல்வராக பன்னீர் செல்வம்  இருக்கிறராம்.


தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே டாஸ்மாக் கடைகளும் , மணற் கொள்ளைகளும், கிரானைட் கொள்ளைகளும், மரங்களை வெட்டித்தள்ளுவதும் நடை பெறுகிறது என்று தலைவர்கள் சொன்னால் அதை அமைதியாக கேட்டு அவர்களை மீண்டும் தலைவர்களாக தேர்ந்தெடுப்பது தமிழக மக்களே... ஏலேய் தமிழன் உலகிலேயே மிக புத்தி சாலிடே.

அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. மதுரைத் தமிழன் எங்க ஊரு பேச்சு எப்படிப் பேசலாம்? (ஏலேய்.... புத்திசாலிடே).

    நான் நீங்கள் இரண்டு கடிதத்தையும் படித்துவிட்டு நீண்ட பதில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அப்புறம் அவர்கள் உங்களுக்குப் பதில் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார்களென்றால், எங்களுக்கு எப்படி பொழுது போகும்? அதனால்தான் நீங்கள் பதிலெழுதவில்லை என்று நினைக்கிறேன்.

    ஸ்டாலின் நினைத்தது, அதிமுகவுக்கு புழுதி வாறித் தூற்ற. அதுக்கு இடஞ்சலா அன்புமணி கடிதம் எழுதி திமுக அதிமுக இரண்டின்மீதும் புழுதிவாறித் தூற்றுகிறார். அரசியல்வாதிகள் இரண்டுபட்டால், மக்களுக்குக் (இணையதள வாசகர்கள்) கொண்டாட்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஏலே நெல்லைதமிழா நான் பிறப்பில் நெல்லைதமிழன் மாவட்டம் வளர்ப்பில் மதுரைத்தமிழன் கெட்டதில் சென்னைத்தமிழன். இப்ப மனைவியிடம் பூரிக்கட்டை அடிவாங்குவதில் அமெரிக்க தமிழண்டா ஆக மொத்தம் நான் கடைந்து எடுத்த சுத்த தமிழண்டா. அதாவது நான் ஒரு வெண்ணெய்டா ஹீஹீஹீ

      Delete
  2. இப்டி யாராச்சும் மாத்தி மாத்தி லெட்டர் போட்டா நம்மக்கும் பதிவு போட்ட நல்லாத்தான் இருக்கு:)))))

    ReplyDelete
  3. அரசியல் குறித்து எழுத அதிக யோசனையாக உள்ளது. திரை மறைவு சமாச்சாரங்களை அதிக அளவு கேட்டுக் கொண்டே இருப்பதால் எல்லாருமே நாடக நடிகர்களாகவேத் தெரிகின்றார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.