பெண்ணின் மனதை
புரிந்து கொள்வது கடினமோ?
நேற்று என் மனைவி
குழந்தையை அழைத்து கொண்டு தெரிந்தவர்களின் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழாவிற்கு
சென்றிருந்தார். வீட்டில் இருந்த எனக்கு போரடித்ததால்
'பார்' க்கு சென்று வரலாம் என்று தோணியதால் அங்கு சென்றேன்..
பாருக்கு சென்று
வழக்கமாக அடிக்கும் சரக்கை ஆர்டர் பண்ணி மெதுவாக அடிக்க தொடங்கினேன். சில நிமிடம் கழித்து
ஒரு பெண் வந்து அருகில் அமர்ந்து அவளும் அவளுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி குடிக்க தொடங்கினாள்.
அதன் பின் அந்த பெண்ணும் ஹாய் சொல்லிவிட்டு பேச தொடங்கினாள். அவள் அவளை பற்றி சொல்லத்
தொடங்கினாள்.. அவள் சொன்னதில் இருந்து அவள் 2 முறை கல்யாணம் ஆகி டைவர்ஸ் பண்ணியவள்
என்று தெரிந்தது. இப்போது அவள் சிங்கிளாக இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்து.
வழக்கம் போல
நான் என்னைப் பற்றிய அதிக விபரங்களை சொல்லவில்லை...நான் சேல்ஸ்மேன் வேலை செய்வதை மட்டும்
சொன்னேன்.
அப்படி நான்
பேசிக் கொண்டிருக்கையில் அந்த பெண் அருகில் இருந்த பேப்பர் டிஷ்யூவில் ஒரு பெட் படம்
வரைந்து அதில் பெண் படுத்து யாருக்கோ காத்திருப்பது போல வரைந்து இருந்தாள் அதை பார்த்த
நான் மிக அழகாக இருக்கிறது என்று சொல்லி உங்களுக்கு பெட் ஏதும் வேண்டுமானால் சொல்லுங்கள் எனது கம்பெனியில்
இருந்து ஆர்டர் பண்ணலாம் நல்ல டிஸ்கவுண்டுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி என்
பிஸினஸ் கார்டை அவளுக்கு கொடுத்தேன். சேல்ஸ்மேன் புத்தி அல்லவா...
ஆனால் அதை வாங்கிய
அவள் அந்த கார்டை என் முகத்தில் தூக்கி ஏறிந்து நீ சரியான முட்டாள் என்று கத்திவிட்டு
இப்படி நீ முட்டாளாக இருப்பதனால்தான் நீ இன்னும் சிங்கிளாக இருக்கிறாய் என்று திட்டிவிட்டும்
சென்றாள். ஒரு வேளை நான் விரலில் மோதிரம் அணியதை பார்த்துவிட்டு நான் சிங்கிள் என்று
நினைத்துவிட்டாள் போல இருக்கிறது.
அவள் என்னை சிங்கிள்
என்று நினைக்க காரணம் இருக்கிறது ஆனால் என்னை முட்டாள் என்று சொல்லி சென்றாளே அதற்குதான்
எனக்கு காரணம் புரியவில்லை ஒரு வேளை என் தளத்தில் நான் எழுதுவதை படித்து விட்டு அவள்
அப்படி நினைப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்க சான்ஸ் உண்டு ஆனால் அவளோ அமெரிக்கன் லேடி
அவளுக்குகோ தமிழ்படிக்க தெரியாது அப்படி இருக்க அவள் ஏன் என்னை முட்டாள் என்று சொல்ல
வேண்டும்.
ஒரு வேளை அவள்
படம் வரைந்ததை பார்ர்த்து அவளுக்கு பெட் தேவைப்படுகிறது என்று நான் நினைத்தது தப்போ..
அப்ப்டி இல்லையென்றால் அவள் படம் மூலம் எனக்கு என்ன சொல்ல வந்து இருக்கிறாள். நான்
யோசித்து யோசித்து பார்க்கிறேன் எனக்கு புரியவில்லை... மக்கலே உங்களுக்கு ஏதும் புரிகிறதா..
புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஆமாம் நான் ஏன்
இப்படி மூளை இல்லாத அப்பாவியாக இருக்கிறேன்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
எங்களுங்க்குப் புரிந்துவிட்டது. ஆனால் சொல்லமாட்டோம்.
ReplyDelete
Deleteநீங்க புரிந்த விஷயத்தை சொல்லிட்டா இந்த தமிழன் புத்திசாலி ஆகிவிடுவான் அதனால இவனை தவிக்கவிடுமோம் என்று நினைக்கிறீர்களா? நல்லா இருங்கய்யா...
கொஞ்சம் சுருக்கினால், நிச்சயம் குமுதம் ஒரு பக்கக் கதையாகத் தேர்வுபெறும். முதலில், நீங்கள் சரக்கு அடித்ததனால், மனைவியை, யாரோ ஒரு பெண் என்று நினைத்துவிட்டீர்களோ என்று நினைத்தேன். நீங்க ரொம்ப அப்பாவிதான். இல்லாட்லா ஒன்றுக்கு மூன்று படமாப் போட்டிருப்பீர்களா?
ReplyDeleteபோதையில் இட்ட படமுங்க அதனாலதான் ஒன்றுக்கு மூன்றாக போட்டு இருக்கேன் போல... சரக்கு அடித்துவிட்டு மனைவியை பார்த்துவிட்டால் போதை எல்லாம் தெளிந்துடுமுங்க அப்படி தெளியவில்லை என்றால் அவங்களே தெளிய வைச்சுடுவாங்க
Deleteபடித்த போது புரிந்து விட்டது. புன்னகைத்துக் கொண்டேன்.
ReplyDeleteபடம் பார்த்து கதை சொல்லவும்!
ReplyDelete