Friday, May 15, 2015




 

எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்று சொல்லி தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து உலகை சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவருக்கு. சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலை காதல். என்று சொல்லிப்  எழுதி-பேசி-பாடி கொண்டே ஒரு அன்பான  அருமையான ஈழத்து பெண்ணை மனைவி ஸ்தானத்தில் தன் இருதயத்தில் பூட்டி வைத்துள்ள பத்தரை மாற்று தங்கம்தான் இந்த விசுawesome.“ இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பில் இவருக்கு இரண்டு ராசாத்திக்கள் .  தொழில் ரீதியாக பார்த்தால் ஹாலிவுட்டில் இவர் ஒரு தணிக்கையாளர்..


இவர் தனது நகைச்சுவைப்  http://www.visuawesome.com/ பதிவுகளால் பதிவர்கள் பலரையும் கவர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே! அதுமட்டுமல்ல கலிபோர்னியாவில் இருந்து ஒலிக்கும் மாசாலா எஃப் எம் ல் வச்சிக்கவா நீ என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் .Peraasiriyar Visu Awesome program Vechika nee on Air in Masala.fm. For more information logon to masala.fm.


இப்படி பட்ட ஹாலிவுட் பிரபலம் தனது பதிவுகளின் முதல் தொகுப்பாக விசுவாசமின் சகவாசம் " எனும் புத்தகத்தை 06-06-2015 அன்று, தான் படித்த வேலூர் வூரீஸ் ( Voorhees College)  கல்லூரி வளாகத்தில், அதன் முதல்வர் திரு.  டாக்டர் அருளப்பன் அவர்களின் தலைமையில் காலை 11 மணிக்கு வெளியிடுகின்றார். 

இந்த புத்தக வெளியிட்டுவிழாவில் கலந்து கொள்ள நம் பதிவர்கள் அனைவரையும் அன்போடு கலந்து கொள்ள அழைக்கிறார், அவரின் சார்பாக இந்த புத்தக விழாவில் கலந்து கொள்ள நானும் அழைக்கிறேன்.

இந்த புத்தக வெளியிட்டுவிழா முடிந்ததும் அங்கேயே அவர் ஒரு பதிவர் சந்திப்பை நடத்த விரும்புகிறார். அதனால் இந்த புத்தக விழாவிற்கும் பதிவர் சந்திப்பிற்கும் வருகை தர விரும்புபவர்கள் visuawesome @hotmail .com  என்ற விலாசத்திற்கு தெரியபடுத்துங்கள். அது அவருக்கு விழாவை மேலும் சிறப்பாக நடத்த ஏதுவாக இருக்கும்.





----------------------
அன்புடன்
மதுரைத்தமிழன்
15 May 2015

7 comments:

  1. புத்தகம் வெளியிடும் நண்பருக்கு என் வாழ்த்துக்களை தயவாக சொல்லி விடுங்கள்.

    நட்புடன்

    கோ

    ReplyDelete
  2. புத்தகம் வெளியிடும் நண்பருக்கு என் வாழ்த்துக்களை தயவாக சொல்லி விடுங்கள். அப்படியே வேலூருக்கு கொஞ்சம் வழி சொன்னால் பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

    நட்புடன்

    கோ

    ReplyDelete
  3. புத்தக வெளியீடும் , பதிவர் விழாவும் சிறக்கவும் தம்பி விசுவின் புகழ் இன்னும் மணக்கவும் பரதேசியின் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. வரவேற்க தயாராக இருக்கிறோம்...

    ReplyDelete
  5. புத்தகவெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நண்பரின் புத்தக வெளியீட்டுக்கு நீங்களும் வந்திருக்கலாமே நண்பரே?
    (ஆமா..நீங்க புத்தகம் வெளியிடவோ, சும்மா நண்பர்கள் உறவினரைப் பார்க்கவோ கூட தமிழ்நாட்டுக்கு வருவதில்லையோ? வந்தாலும் ரகசியப் பயணமாகவே இருக்கட்டும்.. இல்லன்னா நீங்க போடுற போட்டுக்கு இங்க நிறையப் பேரு உங்களைப் போட்டுப் பாக்க ரெடியா இருக்காங்களே?) ஆமா.. இப்பல்லாம் ஏன் மற்ற -அதாவது என்- வலைப்பக்கம் வர்ரதில்லை...? எழுதுங்கள் தமிழரே உங்கள் எழுத்தென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திட வந்த எங்களை ஏமாற்றாதீர்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.