நீதிபதி குன்ஹா மீது மானநஷ்ட
ஈடு வழக்கு தொடுக்கப்படுமா?
18 வருடகாலம் வழக்கை இழுத்து
அடித்து நான் தவறு செய்யவில்லை செய்யவில்லை என்று சொன்னதை கவனத்தில் கொள்ளாமல் மேலும்
தமிழகமக்களின் அம்மாவகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஒருவரை எந்தவித சாட்சியங்கள் இல்லாமல் இருந்த போதிலும்
இந்த குன்ஹா யாரோ ஒருவரின் சொல் பேச்சு கேட்டு
வேண்டுமென்றே பழிவாங்கும் உணர்ச்சியால் 5 ஆண்டுகால சிறைத்தண்டணையும் 100 கோடி அபராதமும்
போட்டதுமட்டுமல்லாமல் ஜாமின் தராமல் உடனடியாக
சிறையிலும் அடைக்க உத்தரவு போட்டு இருக்கிறார்.
இதனால் தமிழக முதல்வர் தனது
பதவியை இழந்து மிகவும் மன உழைச்சலுக்கு ஆளானர். அப்படிபட்ட அம்மா அவர்கள் இன்று குற்றமற்றவர்
என்று சொல்லி அனைத்து தண்டனைகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இப்போது மக்கள் மன்றம் முன்
எழுந்த கேள்வி இதுதான்
தவறு செய்யாத ஜெயலலிதா அவர்களை
தவறு செய்தார் என்று தப்பான தீர்ப்பு வழங்கிய குன்ஹா மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க
முடியுமா? ஹீஹீ நாமவும் ஏதாவது சொல்லி வைப்போம்..
டிஸ்கி : ஒரு நாளும்
இந்த நேர்மை, நீதி, நியாயவாதம் பேசுபவர்களால் இந்திய சூழலில் எதையும் புடுங்க முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
தங்களின் இந்தக்கேள்விகள் மிகவும் நியாயமானதே. நானும் இதேபோலத்தான் இன்று எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். மக்களின் அன்புக்குப் பாத்திரமாகியவர் + மிகப்பெரிய பொறுப்பிலும், பதவியிலும் இருந்தவரை, 7-8 மாதங்களுக்கு மேல் அனாவஸ்யமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது எந்தவிதத்தில் நியாயம்?
ReplyDeleteThar's a valid point which many of us overlooked because of lack of understanding, knowledge, maturity and spirituality, Sir!
Delete------------------------
BTW, I happened to read about "Who is at fault when sarcasm is lost?" It was interesting! :-)
நீதிபதி குன்ஹா மீது வழக்கு தொடர இந்திய சட்டம் அனுமதி அளிக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் அன்பழகன் மீதும், சு. சுவாமி மீதும் ஒரு வேளை தொடரலாம். ஆனால் ஜெ அதை செய்ய மாட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வேறு ஏதாவது ஆப்பு வந்து விட்டால். அதனால் இந்த விவகாரத்தில் அடக்கி வாசிப்பார் என்றே நம்புகிறேன்.
ReplyDeleteமதுரையார் ஏதோ கலாய்ச்சா அதுக்குப்போய் சீரியஸ்ஸா பதில் சொல்லுறீங்க! சுவாமியே ஜெவை எப்படி மறுபடியும் ஆப்பில் உட்கார வைப்பது என யோசனையில் இருக்கிறார். கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வதற்காக காத்திருப்பதாகவும், அவர்கள் செய்யாவிடின், புகார்தாரார் என்கிற முறையில் அந்த உரிமை தனக்கு வந்து சுப்ரீம் கோர்ட் செல்லுவேன் என்று பாலை வார்த்துள்ளார். 10 % கமிசன் அடிப்பது ஓகேதான் என்கும் குமாரசாமியின் தீர்ப்பை baseless & ridiculous என்று மரியாதை வேறு செய்துள்ளார். இந்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்க்கு போனால் கோர்ட் வாயால் சிரிக்காதாம்.
Deleteமேலும் "மோடி அம்மாவுக்கு வாழ்த்து சொல்கிறார், நீங்க கேசு போடுவங்கறீங்க" என்ற பர்க்கா தத்தின் கேள்விக்கு " அதெல்லாம் பாராளுமன்றத்தில் ஆதரவு பெறுவதற்காக. இதே போல் மாயாவதி முலாயம் கூடவெல்லாம் மோடி பேசுறார். அதெல்லாம் சும்மா லுல்லாயி. மற்றபடி பிஜபி அதிமுக- உடன் கூட்டு வைத்தால் நானே எக்ஸிகூட்டீவ் கூட்டத்தில் எதிர்ப்பேன், பிஜேபி தொண்டருக்கும் சங்பரிவாருக்கும் எந்த திராவிட கும்பலுடன் கூட்டு வைத்தாலும் புடிக்காது" என்று ஒரே போடாய் போட்டர்.
//
ReplyDeleteடிஸ்கி : ஒரு நாளும்
இந்த நேர்மை, நீதி, நியாயவாதம் பேசுபவர்களால் இந்திய சூழலில் எதையும் புடுங்க முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.
//
வேதனையான கருத்து. சென்ற வாரம் தீர்ப்பின் நகல் வெளிவரும் முன்பே சல்மானுக்கு இரண்டு மணி நேரத்தில் ஜாமீன், இரண்டே நாட்களில் இடைக்கால தடை, தீர்ப்பு ரத்து. இன்று இந்த வழக்கு. வேறு என்ன சொல்வது அண்ணா?
சரிசரி...
ReplyDeleteஇன்னும் அந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் நளினியெல்லாம் அங்கேயேதான் இருக்காங்க மய் லார்ட்!