Thursday, May 7, 2015



படிக்க ரசிக்க  சிந்திக்க சின்ன சின்ன ஸ்டேடஸ்

தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மீது போடும் வழக்குகளை சூப்ரீம் கோர்ட்டிலே நேரடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் அப்பதான் ஜாமின் கேட்டு வெளியே வந்து காலங்களை வீணாக்க முடியாது

நெட் கனெக்ஷனுக்காக பயன்படும் டேட்டா ப்ளான் அதிகரிக்கிறது என்று கவலைப்படும் தமிழன். தங்கள் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் கல்விக்கான கட்டணம் அதிகரிப்பதை பற்றி கவலைக் கொள்ளாமல் இருக்கிறான்



என்னதான் சட்டம் படித்து இருந்தாலும் அல்லது ஊருக்கே நீதி சொல்லுபவராக இருந்தாலும் அவர் வீட்டில் நீதி வழங்குவது என்பது அவரது சட்டம் படிக்காத மனைவியாகத்தான் இருக்க முடியும்

///திருமணம் என்பது மிகவும் புனிதமானது.. அதனால் மனைவியைப் பாலியல் வன்புணர்வு செய்வது தப்பில்லை என்று நம் அமைச்சர் பெருமக்கள் சொல்லியிருக்கிறார்கள்..//
இந்தியாவில் மிக மிக நல்ல நல்ல சட்ட போடுறாங்கய்யா பாலியில் பலாத்காரம் பண்ணப் போறவங்க இனிமே தாலி கயித்தோட போயி பலத்காரம் பண்ணுனா தப்பே இல்லை போலிருக்கும் நல்ல இருப்பிங்கடா

நேபாளுக்கு பாகிஸ்தான் மாட்டு கறி அனுப்பியதாம்.
ஒரு வேளை பாக்கிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நேபாளம் அவர்களுக்கு வெஜிடேரியன் உணவு அனுப்பி இருக்கும் அதுக்கு பழி வாங்கதான் பாக்கிஸ்தான் இப்படி பண்ணி இருக்குமோ

பொய் பேசினாத்தான் டாக்டர் படிப்புக்கு சீட்டு கிடைக்கும் என்று யாரோ தமிழக மாணவர்களுக்கு சொல்லி இருப்பாங்க போலிருக்கு. வேண்டுமானால் பளஸ் டூ ரிசல்ட் வரும் போது பாருங்களேன்  முதலிடம் வந்தவர்களும் அதிக மதிப் பெண் வாங்கியவர்களும் நான் டாக்டருக்கு படிச்சு நாட்டுக்கு சேவை பண்ணப் போறேன் என்று வாய் கூசாம பொய் சொல்லுவாங்க

இந்தியாவில் தப்பு செய்து தண்டனை பெற்றால் அவர்கள் வசதியாக இருந்தால் ஜாமின் பெற்று வெளி வந்திடலாமாம்... சட்டம் ரொம்ப நன்றாக இருக்கிறதே.. பேசாம இந்தியாவிற்கு போயிடலாமுனு இருக்கேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்
07 May 2015

2 comments:

  1. சிந்திக்க வைக்கும்
    சின்னச் சின்னச் சிதறல்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.