Thursday, May 7, 2015



அந்தகாலத்து ஆசிரியர்கள் ரொம்ப மோசமானவங்க? பரிட்சையில் பெயிலானவர்கள் படிக்க  

இந்த காலத்து ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க (கஸ்தூரி(மது),மைதிலி, முத்துநிலவன்,முரளிதரன்) அதனாலதான் இந்த காலத்தில் மாணவர்கள் ரொம்ப அதிக மார்க் எடுக்குறாங்க... ஆனா நான் படிச்ச காலத்தில் உள்ள ஆசிரியர்கள் மிக மோசமானவங்க மார்க்கே போடமாட்டாங்க 100 க்கு 35 மார்க்கு மட்டும் போடுவாங்க. என்னமோ அதிக மார்க் போட்டுட்டா அவங்க சொத்தே குறைஞ்சு போயிரும் என்று நினைப்பு போல இருக்கு

சரி அதைவிடுங்க அந்த காலத்திலேயே நான் ரொம்ப நல்ல படிப்பேனுங்க எந்த வகுப்பிலும் நான் பெயிலாகம படிச்சு வந்தேனுங்க.. அதுதாங்க 100 க்கு 35 மார்க் வாங்கி பாஸாகி வந்தேனுங்க.. இப்படி நான் பாஸாகி வந்ததை பார்த்து யாரு கண்ணுபட்டதோ தெரியலைங்க 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 க்கு 33 மார்க்கு வாங்கி பெயிலாகிட்டேனுங்க.


சரி நான் பெயிலாகிவிட்டதை பற்றி என் ஆசிரியரிடம் பேசி கொண்டு இருந்த போது நான் கேட்டேன் என்ன சார் நான் 1 ஆம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு பொது தேர்வு வரை 35 மார்க் வாங்கிதானே பாஸாகினேன் அப்படி இருக்கும் போது பொது தேர்வில் மட்டும் நான் எப்படி பெயிலாகி இருக்க முடியும். இதுக்கு ஒரு விசாரணை வைக்க முடியுமா என்று கேட்டேன்


அதற்கு அவர் சிரித்தவாறு சொன்னார் மதுரைத்தமிழா நீ 1 ஆம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு வரை 30 மார்க்குதான் எடுத்து வந்தாய் ஆனால் வகுப்பில் நீ எப்போது மிக அமைதியாக இருந்து நல்ல மாணவனாய் இருந்தால்தான்  வாத்தியாராகிய நாங்கள் எக்ஸ்ட்ரா 5 மார்க்கு போட்டு உன்னை பாஸாக்கி வந்தோம் என்று சொன்னார்.

அதை கேட்ட எனக்கு ஆத்திரம்தான் வந்தது. நான் பெயிலாக காரணமாக இருந்தவர்கள் இந்த மோசமான வாத்தியார்கள். இவர்கள்தான் நான் பெயிலாக சதி செய்தவர்கள். அவர்கள் எக்ஸ்ட்ரா மார்க் போடாமல் என்னை பெயிலாக்கி இருந்தால் அய்யோ நாம் பெயிலாகிவிட்டோமே இனிம நாம் பெயிலாக கூடாது என்று நினைத்து மேலும் நன்றாக படித்து இருப்போமே .ஆனால் அப்படி அவர்கள் செய்யாததால் நாம் ரொம்ப நன்றாக படித்து வருகிறோம் என்ற கர்வம் எனக்கு வந்து இருக்காது அல்லவா. என்ன நான் சொல்லுறது சரிதானே..

அல்லது வாத்தியார்கள் செய்தது சரிதான் என்று சொன்னால் அவர்கள் என்ன செய்து இருக்க வேண்டும் . நான் பொது தேர்வு எழுதிய தாளில் இந்த மாணவன் வகுப்பில் மிகவும் நல்லவன். அதனால் இவனுக்கு எக்ஸ்ட்ரா 5 மார்க்கு போடுங்கள் என்று பேப்பரின் மேல் எழுதி ரெகமண்ட் பண்ணி இருக்க வேண்டும் அல்லவா அப்படி செய்யாத வாத்தியார்களை நான் மோசமானவர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கமுடியும். இதைப் படிக்கும் டீச்சர்கள் இருந்தால் நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கவும்

அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் என்னமோ நான் மட்டும் பெயிலாகி விட்டேன் என்று நினைத்து சந்தோஷப்பட வேண்டாம் என் வகுப்பில் படித்த 45 பேரில் 5 மாணவர்கள் மட்டும் பாஸ் மீதி 40 பேரும் பெயிலுங்க.....மார்க் சீட் வாங்க வந்த போது பாஸான 5 பேரும் (பிராமின் பசங்க) மிக சோகமாக இருந்தாங்க ஆனால் பெயிலான நாங்க சந்தோஷமாக நீ எத்தனை பாடத்தில் பெயிலு நான் எத்தனை பாடத்தில் பெயிலு என்று கம்பேர் பண்ணி சந்தோஷப்பட்டோனுமுங்க.. அதுமட்டுமல்ல அடுத்த ஒரு வருஷதிற்கு தினமும் பள்ளி கூடம்  போவ வேண்டாமே என்ற சந்தோஷமுங்க பாவம் பாஸான பசங்க மட்டும் மீண்டும் தினமும் ஸ்கூலுக்கு போவனுமுங்க

சரி மதுரைத்தமிழா அப்படி நீ படிச்ச பள்ளியின் பெயர் எது என்றுதானே கேட்கிறீர்கள் அது வேற ஏதும் இல்லைங்க மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் மதுரைக் கல்லூரி மேல் நிலைப்பள்ளிதானுங்க அது.

என்னடா பிராமின் நடத்தும் பள்ளியில் நீ எப்படிடா என்று கேட்கலாம் அது பெரிய சோக கதைங்க எங்க அப்பாவுக்கு ஒரு  நண்பருங்க அந்த நண்பரும் எங்க அப்பாவும் மதுரையில் அந்தகாலத்தில் மிகப் பெரிய சீட்டாட க்ளப்பில் மெம்பருங்க அதில் பழக்கமான நண்பர்தான்  நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அதனால்தான் என்னவோ என் தகப்பனார் என்னை அங்கு சேர்த்தார் போலிருக்கிறது.

சரி இதை படிக்கும் உங்களுக்கு இது எல்லாம் வேடிக்கையாக இருக்கும் ஆனால் நடந்த இன்னொரு உண்மை சம்பவத்தையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும் அதுதானுங்க பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்ததும் எங்க அப்பா ரிசல்ட் பார்க்க பேப்பரை வாங்கி வரச் சொன்னார். அப்ப நான் சொன்னேன் ஏம்பா எதுக்கு காசு வேஸ்ட் பண்ணி பேப்பர் வாங்குறீங்க நான் கண்டிப்ப பெயிலுதான் ஆகி இருப்பேன் என்று அடித்து சொன்னேன். இருந்தாலும் என் அப்பா பேப்பர் வாங்கி பார்த்துவிட்டு நீ பெயிலுதானடா என்று சொன்னார். அதன் பின் என் அம்மாவும் அப்பாவும்  நான் மிகவும் கவலைப்படுவேனு நினைச்சு அவங்க மிகவும் கவலைப்பட்டார்கள் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை மிகவும்  கவலைப்படாமல் கவனித்து கொண்டார்கள் அதற்கு காரணம் நான் வீட்டிலும் மிகவும் நல்லவனாகவும் அப்பாவியாகவும் இருந்ததால்தான்.

அதுக்கு அப்பறம் எந்த வகுப்பிலும் பெயிலாகமல் கல்லூரியிலும் ஒரு  அரியர்ஸ் வைக்காம பாஸாகிவிட்டேன். ஆனால் மாஸ்டர் டிகிரிபடிக்கும் போது காதல் வயப்பட்டதால் அதை தொடர்ந்து படிக்காமல் பாதியிலே விட்டுவிட்டு சென்னை நோக்கி பயணித்து அங்கே கணணியில் டிப்ளோமா வாங்கி அங்கேயே வேலை பார்த்து வந்த போது மீண்டும் காதலில் விழுந்து அந்த காதல்களிலும் உருப்படியாக பாஸாகமல் அப்பாவியாக இருந்த சமயத்தில் ,இப்போது உள்ள என் மனைவி இந்த அப்பாவியை காதலித்து  கல்யாணம் பண்ணிக் கொண்டாள்.

ஆஹா இப்படி ஒரு நல்ல மனசுக்காரியா என்று நினைத்தேன் ஆனால் இப்போதுதான் புரிகிறது அப்பாவி கணவன் கிடைத்தால் தன் கைக்குள் போட்டு ஆட்டலாம் என்று அவள் நினைத்தது. என் மனைவியை  நா என்னம்மா என்றுதான் அழைப்பேன். அவளை நான் அப்படி அழைப்பதில் அவளுக்கு ஒரு சந்தோஷம் ஆனால் நண்பர்கள் என்னடா இப்படி என்று கேட்டால் டேய் அதற்காக அவளை முதல்வர் ஜெயலலிதா என்று அழைக்கவா முடியும் என்றேன். அதை கேட்ட அவர்கள் நீ ஏன் மனைவிகாலில் அடிக்கடி விழுகிறாய் என்று எங்களுக்கு புரிந்தது என்று சத்தமில்லாமல் சிரித்துவிட்டு நகர்ந்தார்கள்

சரி இப்ப எதுக்கு இந்த பதிவு என்கிறீர்களா? தமிழ்நாட்டி ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து இருக்காம் அதில் பெயிலானவர்கள் இருந்தால் எதற்கும் கவலைப்படாதிர்கள் உங்களின் வாழ்க்கை இதோட முடிந்துவிடப் போவதில்லை .அதனால் உங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ளாதீர்கள்...என்று சொல்வதற்காகதான் இது எழுதப்பட்டது. பெயிலானவர்களுக்கு நீங்கள் பரிட்சையில் வேண்டுமானாலும் பெயிலாகி இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்  வாழ்க்கையில் பல வகையில் வெற்றி பெற அநேக வாய்ப்புகள் உங்கள் முன்னால் நிற்கின்றன. அதை மட்டும் மறக்காகமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


10 comments:

  1. I also discontinued my masters and failed. But I had got good marks up to graduate level. Got a job, worked for 39 years and retired with a good pension.

    Jayakumar

    ReplyDelete
  2. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. 10ம் வகுப்பு கதை " என் கதைய " போலவே இருக்கு.. பரதேசி ஏதாவது போட்டு கொடுத்துட்டாரா ?

    ReplyDelete
  4. சுவாரஸ்யமாக அறிவுரை சொல்லி அசத்தி விட்டீர்கள்! வாத்தியார்கள் செஞ்சது தப்புத்தான்! ஹாஹாஹா! இன்னும் எந்த டீச்சரம்மாவும் ஆஜராகலையா? தன் தரப்பு நியாயத்தை சொல்ல?

    ReplyDelete
  5. ஆஹா! நல்ல ஆசிரியர் பட்டியலில் என் பேரும் இருக்கே!!! thanks சகா:)
    "என்னை ஏன் பெயில் ஆக்குனீங்க டீச்சர்?" அப்படினு ஒரு புத்தகம், அதை படிச்ச எந்த ஆசிரியரும் மாணவனை பெயில் பண்ண யோசிப்பாங்க. அதுகெடகட்டும் எந்த மாணவன் நாங்க சொல்லறதுக்கு எல்லாம் தலையாட்டி, நாங்க சொல்லரபடியே படிக்கிறானோ , அவன் ஒரு சிறந்த வேலைகாரனாய்(அது கவர்மென்ட் வேலைகாரனோ?, பாரின் வேலைகாரனோ) வெற்றி பெறுகிறான். பெரும்பாலும் எங்களிடம் முரண் படும், எங்கள் போதனைகளில் இருந்து தப்பிக்கும் மாணவன் சிறிய அல்லது பெரிய முதலாளி ஆகிறான்:))))))))) இங்கே நான் சொல்ல வருவது தேர்வில் வெல்வதற்கும் வாழ்கையில் வெல்வதற்கும் பெரிய சம்மந்தமெல்லாம் இல்லை, so ரைட் டைம் , ரைட் அட்வைஸ்:)

    ReplyDelete
  6. இந்தப் பதிவு பெயில் ஆனவர்களுக்கு தனம்பிக்கை வளர்க்கக் கூடிய விதத்தில் நகை சுவையோடு தந்த அறிவுரை அசத்தல். தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. நம்ம எல்லார் கதையும் இப்படித்தான்.

    ReplyDelete
  8. நீங்க 'முதல்வர் ஜெயலலிதா' என்று சொன்ன நேரம்... அவர்களுக்கு நல்ல தீர்ப்பு அமையட்டும். (தவறு செய்தார். நாங்கள்ளாம் மென்மையான மனசுக் காரங்க).

    இப்போல்லாம் வாத்தியார்கள் பலர் தாங்கள் தங்கள் தொழிலை ஒழுங்காகச் செய்ய முடியாததால் (மாணவனைக் கண்டித்துப் படிக்க வைக்க முடியாததால்), பேப்பர் திருத்தும்போது மிகவும் தாராளமாக நடந்துகொள்கிறார்கள். அரசும், பாஸ் % ஜாஸ்தி காண்பிக்க மதிப்பெண்களை அள்ளி விடுவதை ஊக்குகிறது.

    பாஸு, பெயிலு, அர்ரியர்ஸ், கோல்ட் மெடல் இவைகளையெல்லாம் தாண்டி ஒவ்வொருவருக்கும் நல்ல வாழ்க்கை இருக்கிறது. தன்னம்பிக்கை அளிக்கும் கட்டுரை.

    ReplyDelete
  9. ஐந்து முறை பதவியில் இருந்தவர் பத்தாம் வகுப்பு தாண்டாதற்கு காரணம் குடுமி வாய்த்த பி.டி ஆசிரியர்கள் என்றதால் நீண்ட காலம் பி.டி படித்த ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருந்தது நீங்கள் அறிந்ததே..
    நல்ல நினைவோடை..
    நன்றி
    தம +

    ReplyDelete
  10. இவ்வளவு ரகளை ஆகாது ..
    இருப்பினும் நல்ல அறிவுரை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.