Thursday, August 7, 2014




மோடியின் வேஷத்தை கலைத்த பேஸ்புக் ஸ்டேடஸ்






செய்தி : சில நாட்களுக்கு முன்னாள் டிவிட்டரில் மோடி , " தான் நீண்ட காலங்களுக்கு முன் , தன் ஊர் , மொழி தெரியாத , யாரும் உதவ முன்வராத பையன் ஒருவனை சந்தித்ததாகவும் , அவன் மீது தான் அக்கறை கொண்டு அவனது எதிர்காலம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார் . அந்த பையனும் படிப்பிலும் ஆர்வம் அடைந்தான் . விரைவில் குஜராத்தி மொழியையும் கற்றுக் கொண்டான் " என்று பதிவிட்டு இருந்தார் .சிறிது நாட்களுக்கு முன் அவனுடைய பெற்றோர்கள் நேபாளில் வாழ்ந்து வருவதை கண்டு பிடித்தனர் . எனவே அந்த பையனை அவர் குடும்பத்துடன் இன்று நேபாளம் செல்லும் போது சேர்த்து வைப்பார் என்று அறிவித்துள்ளார்.



தான் வளர்த்த ஒரு இளைஞரை 16 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்தில் அவரது குடும்பத் தாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.. அடடே நல்ல விஷயம்தான்





மோடி இப்போது ஒப்படைத்த இளைஞரின் வயது 26. அதாவது 16 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பார்த்த அந்த இளைஞனுக்கு பத்து வயதுதான் இருக்கும். அப்படி பத்து வயசு மைனர் சிறுவனை கண்டெடுத்தால் காவல் துறை மற்றும் சமூக நலத்துறை என பலருக்கும் முறைப்படி தகவல் தெரிவித்திருக்கவேண்டுமல்லவா?? அதை ஏன் அவர் செய்யவில்லை?.



உண்மையில் மோடி விரும்பி இருந்தால் அந்த சிறுவனின் பெற்றோர்களை கண்டு பிடிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகி இருக்காது . ஆனால் அவர் அதை விரும்பவில்லை என்றுதான் அறியமுடிகிறது. அப்படி விரும்பாத அவர் தீடீரென்று அந்த சிறுவனின் பெற்றோர்களை கண்டு பிடித்து ஒப்படைத்தன் மர்மம் என்ன?



இந்த வளர்ப்பு மகனை பற்றிய செய்திகளை இது வரை மோடி மறைத்து வைத்தன் ரகசியம் நோக்கம் என்ன? இப்படிதான் தனக்கு திருமணமே ஆக வில்லை என்று முடி மறைத்தார். கடந்த தேர்தலின் போதுதான் தனக்கு தனது சிறுவயதில் திருமணம் ஆகியது அதன் பின் மனைவியை விட்டு ஒடி வந்துவிட்டேன் என்றார்.



ஏன் மோடி வெளிப்படையாக இல்லாமல் எல்லா விஷயங்களையும் மூடி மறைக்கிறார்.










அந்த சிறுவனின் பேஸ்புக் அக்கவுண்டை பார்க்கும் போது அந்த சிறுவன் 2012ல் லேயே தன் பெற்றோர்களை பார்க்க போகிறேன் சென்று சொல்லி பார்க்க சென்று இருக்கிறான். இந்த தகவல்கள் அவனது பேஸ்புக் தளத்திலேயே இன்னும் அழிக்கப்பட்டாமல் இருக்கிறது.





இப்படி தன் பெற்றோர்களை பார்க்க சென்ற இளைஞனை இப்போதுதான் தன் முயற்சியால் அவந்து பெற்றோர்களை கண்டு பிடித்து ஒப்படைக்க போவதான் ஏன் இந்த பெரிய பில்டப்.



மோடியை பொறுத்தவரை அவர் ஏதோ ஒரு நல்ல காரியமோ அல்லது கெட்ட காரியமோ செய்திருக்கிறார் என்றுதான் ஊகிக்க முடிகிறது. ஆனால் அதற்கு இப்போ கொடுக்கப்படும் பில்டப்தான் ரொம்ப ரொம்ப அதிகமாக தெரிகிறது..



இனிமேல் மோடி அரசாங்கம் பில்டப் செய்திகளை வழங்குவதற்கு முன்பு அதை சார்ந்த தகவல்கள் பேஸ்புக்கில் எங்காவது வந்திருக்கிறதா என்று முதலில் அறிந்து கொண்டு செய்திகள் வழங்குவது நல்லது.



என்னவோ போங்க ஒரே நாளில் நேபாள மக்களின் மனதில் ஹீரோவான மோடி நம் இந்திய மக்களின் மனதில் காமெடியனாக மாறி தோற்றம் அளிக்கிறார்.



மோடி சாப் நாட்டுக்கு தேவையான ஆக்கபூர்மான விஷயங்களில் கவனம் செலுத்துவதுதான் உங்களுக்கும் உங்களை நம்பி ஒட்டு போட்ட மக்களுக்கும் மரியாதையை சேர்க்கும்..




இது பற்றி பல செய்தி தளங்கள் 4 நாட்களுக்கு முன்னால் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.




அதன் பின் இந்த் இளைஞனின் பேஸ்புக் ஸ்டேடஸ் விவகாரம் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்த மோடியை சமுகதளங்களில் கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்தவுடன் மோடியின் ஆதரவு ஊடகங்கள் முழித்து கொண்டு அதை சமாளிக்கும் வண்ணம் செய்தியை திரித்து கடந்த 2 நாட்களாக வெளியிட ஆரம்பித்து இருக்கின்றன. அதற்கு உதாரணமாக இந்தியன் எக்ஸ்பிர்ஸை இங்கு எடுத்து காட்டலாம். அவர்கள் திரித்து வழங்கும் செய்தியை படிக்க இங்கே செல்லவும் Godson ‘reunites’ with family second time in 2 years, now with Modi in tow






அன்புடன்

மதுரைத்தமிழன்

டிஸ்கி : பல சமுக தளங்களையும் செய்தி ஊடகங்களில் வந்த செய்தியைகளை வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது.
#narendra modi #modi nepal visit #nepal #jeet bahadur #india

4 comments:

  1. bjp photosghop techniqies helped them to win elections ..i think the same photoshop will destroy them in 5years....

    ReplyDelete

  2. சிறந்த கருத்துப் பிகிர்வு
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
  3. ஹாஹாஹா...மதுரைத் தமிழரே....மோடி ஹீரோ ஆகணும்னா வேஷம் போட்டுத்தானே ஆகணும்...!!!

    ReplyDelete
  4. மோடியின் முகமூடி கிழிந்தது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.