உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 25, 2014

2016 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி இப்படிதான் அமையுமோ?


2016 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி இப்படிதான் அமையுமோ?

மோடியும் ஜெயாவும் சட்டசபை தேர்தலை மனதில் நிறுத்தி அதற்கான காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்டோமெடிக்காக ஆட்சிக்கு வந்துவிடும். ஆனால் இந்த முறை திமுக அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் பாம்பு போல கிடக்கிறது,
அதனால் அது மீண்டும் எழுந்துவிடாமல் இருப்பதுதான் அதிமுகவிற்கும் பாஜவினருக்கும் நல்லது. அதற்கு ஏதாவது செய்தால்தான் பாஜக தன் கால்களை இங்கு வேறுண்ற முடியும் அதன் காரணமாக ஜெயாவின் தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து கூட்டணி ஆட்சிக்கு முயற்சித்தால் அது இரண்டு கட்சிக்கும் மிக சாதகமே என்பதை உணர்ந்து இருக்கிறது. இப்படி நடந்தால் நிச்சயம் பாஜ கூட்டணியில் இருந்து விஜயகாந்த ராமதாஸ் வெளியேறவது உறுதி. ஆனால் வைகோ ஜெயலலிதாவை அட்ஜெஸ்ட் செய்து அந்த கூட்டணியிலே தொடர்வார்.இப்படி வெளியேறும் விஜயகாந்த ராமதாஸ் திமுக பக்க போக சிறிது யோசிக்கலாம் காரணம் அவர்கள் ஸ்டாலின் தலைமையில் உள்ள கூட்டணிக்கு போகமாட்டார்கள். ஒரு வேளை கலைஞர் தலைமையில் என்றால் யோசிக்காமல் சேருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.இதனை உணர்ந்த கலைஞர் இப்போது ஸ்டாலினை சற்று ஒதுங்கி இருக்க செய்ய முயற்சிக்கிறார் அதன் விளைவே மீண்டும் கலைஞர் தன் கையில் சாட்டையை எடுத்து வீச ஆரம்பித்து இருக்கிறார் மேலும் அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்பதன் மூலம் கட்சி இன்னும் தன் கையில்தான் இருக்கிறது என்று மற்ற கட்சிகளுக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் இப்படி செய்வதன் மூலம் தன் கைப்பிடியில் இருந்து வழுக்கி கொண்டிருக்கும் திருமாவளவனை இருத்தி கொள்ளவும் ராமதாஸ் விஜயகாந்த அவர்களுக்கு தயக்கம் இல்லாமல் தன் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ள வாய்ப்பை உருவாக்க முயற்சிகிறார்.மேலும் மற்றொரு பக்கம் கலைஞர் லோக்சபா தேர்தலுக்கு அப்புறம் பாஜவுடன் ஒட்ட பலவிகிதங்களில் முயற்சி செய்து வருகிறார். பாஜவும் இதனை கண்டும் காணாதது மாதிரி இருக்கிறது ஒரு வேளை கடைசி நேரத்தில் அதிமுக காலை வாரிவிட்டால் அப்போது தன்னுடன் அது சேர்த்து கொள்ளும்.
ஆனால் திருமாவளவனோ ஸ்டாலினால் பட்ட அவமனாத்தால் கலைஞரின் பிடியில் இருந்து தப்பி அதிமுக பாஜ கூட்டணியில் சேர்ந்துவிடுவார்.பாஜ திமுகவுடன் சேரவில்லையென்றால் வழக்கம் போல காங்கிரஸ் கழுதை கெட்டா குட்டிச் சுவரு என்பது போல திமுகவுடன் சேர்ந்து விடும்.இதுதாங்க இப்போது உள்ள நிலவரம்...டிஸ்கி:
ஆனா கத்தி படம் வெளிவந்து மக்கள் மனதில் மிகப் பெரிய மாற்றம் வந்து விஜய் முதலமைச்சர் ஆனாலும் ஆகலாம்..அதனால அனைத்து கட்சிகளும் விஜயை அனுசரித்து போங்கப்பா....அதுமட்டுமல்லாமல் ரஜினி கமல் அஜித் எல்லாம் வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு திரைப்படத்துறை சார்பாக எடுக்கும் விழாவில் கலந்து கொள்ள இப்போதே நாட்களை ரிசர்வ் செய்து வைத்து கொள்ளுங்கள் அப்படி இல்லைன்னா உங்க படங்கள் வெளியிடுவதில் எதிர்காலத்தில் படு சிக்கலாக இருக்கும்...அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. படம் சூப்பர்! டிஸ்கி சூப்பரோ சூப்பர்!!:))
  தம 1!!

  ReplyDelete
  Replies
  1. என்னங்க நீங்க அரசியல் கரைச்சு குடிச்ச பொண்ணு இப்படியெல்லாம் கருத்து போடலாமா நறுக்கென நாலுவார்த்தை சொல்லலாம்ல...அப்புறம் தம வோட்டு எல்லாம் போட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

   Delete
  2. எனக்கு தனிப்பட்ட நூறு நியாமான கருத்து இருந்தாலும் ஆ.தி.மு.க என் அப்பா உயிரோடு இருந்தவரை உயிராக நினைத்த விஷயம். பிரகலாதன் தாயின் வயிற்றிலேயே கிருஷ்ணன் கதை கேட்டு வளர்ந்தான் என்பார்கள், நான் பிறந்ததது முதல் கேட்டு வளர்ந்தது தலைவர் பொன்மனசெம்மலின் பெயரை தான் :) அமைச்சர் தம்பிதுரை அவர்களை பெரியப்பா என்றே அழைப்போம், இப்படி பல விஷயங்கள் இருப்பதால் நான் பொதுவெளியில் A.D.M.Kவை பற்றிய என் கருத்துகள் பகிர்வதில்லை. ஆனால் உங்கள் அரசியல் கருத்துக்களோடு என் கருத்துக்களும் ஒன்றியே போகின்றன:)) இதை சொன்னேன் என்பதற்காக என்னை கட்சிகாரியா நினைத்து

   Delete
  3. ஒதுக்கி வைத்துவிடாதீர்கள் சகா இன்னு சொல்லவந்தேன் பாதியிலேயே காணாம போச்சே கம்மென்ட்:((

   Delete
 2. என்ன சார் இப்டி வெளாட்ட நெனச்சுட்டீங்க, நாளைக்கே முதலமைச்சராகப் போறவர் அவருக்கு பாராட்டு விழாவில் இந்த ரஜினி கமல் போதுமா ? இந்த ஒபாமா, மோடி, ஜெயலலிதா இவுங்கள்ளாம் வரவேணாமா???

  ReplyDelete
  Replies
  1. அவங்க எல்லாம் எதிர் கட்சியை சேர்ந்தவங்க அதனால அவங்க எல்லாம் வர மாட்டாங்க

   Delete
 3. உங்க அரசியல் அலசல் நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு .திடீர்னு விஜய் பேச்சை எடுத்து கவுத்துட்டீங்களே பாஸ் .

  ReplyDelete
  Replies
  1. அது காமெடிக்கா சேர்த்த விஷயம்.... அதுனாலதான் அதை டிஸ்கியில் போட்டுள்ளேன்

   Delete
 4. மதில் மேல் புானை தானே இக்கட்சிகள்.....

  நேரம் வரும் வரையில் எந்தப் பக்கம் தாவும் என்பது புதிர் தான்...

  ReplyDelete
  Replies

  1. இதில் புதிர் ஒன்றும் இல்லைங்க யாரால் யாருக்கு அதிக லாபம் வரும் என்று கருதிதான் இந்த கூட்டணிகளே அமைகின்றன. கொள்கை எல்லாம் கிடையாதுங்க இவங்களுக்குள்

   Delete
 5. ஆறுநாள் லீவ் எடுத்தபுரம் காமெடி அதிகமாயிருச்சு போல

  ReplyDelete
  Replies
  1. லீவு எடுத்தது 15 நாள் ஆனால் 6 நாளிலே வெகேஷனை பாதியிலே முடித்து வந்துவிட்டோம் காரணம் எங்கள் அனைவரின் செல்லக்குட்டியான சன்னி என்ற எங்களது நாய்க் குட்டியை பிரிந்து இருக்க முடியாததால்

   Delete
 6. ரெண்டு விரல்ல ஒண்ண தொடுன்னு சொல்லி வானிலை அறிவிப்பாளர் கூட மழை வருமா வராதான்னு ஈசியா சொல்லிடுவாரு. . இந்த அரசியல் கூட்டணி எப்படி அமையுமோன்னு சொல்லி என்னை கொழப்பிட்டீன்களே சார்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog