உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 4, 2014

அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்புஅம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு

மலிவு விலையில் அடுத்து அடுத்து பல பொருட்களை கொடுத்து மக்கள்மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் அம்மா வரும் சட்ட சபை தேர்தலை மனதில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை செயல்படுத்தி லோலக்சபாவில் பிடித்த மாதிரி எதிர்கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்க கூடாது என்று நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுட்த்துகிறார். அதன் படி அவரின் அடுத்த திட்டம்தான் கிழ்கண்டவை1. மகளிர் மட்டும் என்ற ஸ்பெஷல் பஸ்ஸுக்கள் ஒடுவது மாதிரி குடிகாரர்களுக்கு மட்டும் என்ற ஸ்பெஷல் பஸ் தமிழகம் முழுவதும் விடப்படும்

2. பஸ்ஸில் முதியோர் மற்றும் கர்பிணி பெண்களுக்காக சீட்டை குடிகாரர்களுக்கு மட்டும் என்று சொல்லி சீட் ஒதுக்கப்படும்.

3. குடிகாரகளுக்கான குடியிருப்புக்கள் கட்டப்பட்டு அதில் மயானம் ஹாஸ்பிடல் முழு ஏசி வசதியுடன் கூடிய பார் கள் கட்டப்பட்டும்.


4. குடிகாரர்களின் வசதிக்காக தொலை தூர பஸ்களில் பாருடன் கூடிய பஸ் வசதி செய்யபபடும் இதனால் தொலை தூர பஸ்ஸுக்களில் பயணம் செய்பவர்கள் அவசர அவசரமாக குடித்துவிட்டு வருவதை தவிர்க்லாம் அது மட்டுமல்லாமல் பஸ்ஸுக்களை தவர விடுவதும் தவிர்க்கப்படலாம்.


5. குடிகாரர்கள் இருந்தால் அவர்களின் மனைவிக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ அரசாங்க வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்

6. பிரபல நடிகர்களின் படங்கள் வெளியிடும் போது குடிகாரர்களுக்கு பார்க்க முதலில் வாய்ப்பு தரப்பட வேண்டும் இல்லையெனில் அம்மா மீண்டும் விஸ்பரூபம் எடுத்துவிடுவார்கள்


இப்படிபட்ட திட்டங்களை வழங்குவதால் திமுக பாமக, தேமுதிக கட்சியில் உள்ள குடிகாரார்களின் மொத்த வாக்குகளையும் அப்படியே அள்ளிவிடலாம் என்பது அம்மையாரின் கணக்குஅன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments :

 1. உண்மைதான் ,தமிழக ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் மெஜாரிட்டி சக்தியாக குடிகாரர்கள் உருவாக்கி விட்டார்கள் ,அவர்களை கவனித்தாலே ஆட்சி பீடத்தை பிடித்து விடலாம் !
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாட்டில் குடிகாரர் செல்வாக்கு ஓங்குதா?

   Delete
  2. பகவான் ஜீ மிக மிக உண்மை

   Delete
 2. பாண்டிச்சேரிலதான் தடுக்கி விழும் இடத்திலெல்லாம் "தண்ணிக்" கடைன்னா.. தமிழ் நாட்டிலயும் பெருகிப் போச்சு.....4 வதுடன் அந்த பஸ்ஸிலேயே உச்சா போறதுக்கும், 'உவ்வே' செய்யறதுக்கும் கழிவறை போடச் சொல்லுங்க......இல்லேனா ஒருத்தன் மேல ஒருத்தன் இதெல்லாம் செய்வாங்க.....எங்கியாவது நிறுத்தினா கூட இறங்க முடியாத நிலைமைல இருந்தா.....சரி.. பாட்டில்ல கூட அம்மா படம் உண்டா....!!?

  ReplyDelete
  Replies
  1. அம்மா படம் இல்லமலா?

   Delete
 3. இதுகூட.... நல்லாகீதுபா.....

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜீ இப்படி வசதி செய்து கொடுத்தால் நால்லாதாம்பா இருக்கும்

   Delete
 4. என்னடா மதுரைத்தமிழன் அம்மா கட்சியை இப்படி போட்டு தாக்குகிறாரே, இதென்ன மதுரை தமிழனுக்கு வந்த சோதனை என்று பார்த்தேன். கடைசி இரண்டு வரிகளை படித்ததும் தான் புரிந்தது யாரை போட்டு தாக்கியிருக்கின்றார் என்று.

  ReplyDelete
  Replies
  1. பாபா நான் யாரையும் தாக்கவில்லை நடப்பதைதான் சொல்லுகிறேன் நடக்கப் போவதையும் சொல்லுகிறேன் அவ்வளவுதான்

   Delete
 5. இப்படியெல்லாம் செய்தாலும் செய்வார்கள்! டாஸ்மாக்கில் தானே தமிழக அரசு நிமிர்ந்து நிற்கிறது!

  ReplyDelete
  Replies
  1. இப்படி செய்வதுதானே நியாம்...சுரேஷ்

   Delete
 6. திட்டங்களுக்கான படங்கள் அட்டகாசம்.

  ReplyDelete
  Replies
  1. படிக்க நேரம் இல்லாதவர்கள் படத்தை பார்த்தாவது நாட்டு நடப்பை புரிந்து கொள்ளட்டுமே என்று என்னால் முடிந்த ஒரு சின்ன முயற்சி முரளி

   Delete
 7. இதையெல்லாம் படித்து அப்படியே செய்தாலும் செய்துவிடுவார்கள் மதுரைத் தமிழா......

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் ஜீ அப்படி செய்தால் நல்லதுதானே அப்பதான் குடிக்காதவர்கள் மற்ற இடங்களிளாவது தைரியமாக செல்லாம்

   Delete
 8. சும்மா போய்யா வெறுப்பேத்தாம ஈழத்துக் கனவு என் நெஞ்சைத் தைக்கிறது
  நீ சொல்லும் நகைச்சுவையோ முள்ளாகக் குத்துறது //இப்ப என்ன வேணும்
  அம்பாளடியாளுக்குப் பாட்டைப் பார்த்து பதில் சொல்லணும் அவ்வளவு தானே ?..
  சொல்லினாப் போச்சு நான் வேண்டும் பூரிக்கட்டை அடிய விடவா கொடுமையாக
  இருக்கப் (மதுரைத் தமிழனின் புலம்பல் இது )போகிறது உங்கள் பாட்டு :))))

  ReplyDelete
  Replies
  1. என்ன பாட்டியம்மா சரக்கு உள்ளே போயிடுச்சா கருத்தை பார்த்தா ரொம்ப காக்டெயில் மாதிரி கலக்கலா இருக்கே

   Delete
 9. //5.குடிகாரர்கள் இருந்தால்//
  அம்புட்டு வேலை வாய்ப்பா உருவாக்க போறாங்க.

  ReplyDelete
  Replies
  1. சேக்காளி ஜீ குடிக்காதவங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழக வளர்ச்சிக்காக உயிரை கொடுத்தவரின் குடும்பத்திற்கு உதவுவதுதானே நல்லது

   Delete
 10. அப்பப்பா, நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று இப்போது தான் தெரிகிறது. இதையெல்லாம் அனுபவிக்கணும்னா, நீங்க தமிழ்நாட்டுக்கு இல்ல போகணும்!!!!

  ReplyDelete
  Replies
  1. சொக்கன் தமிழகத்தில் நான் பட்ட இந்த மாதிரி கஷ்டங்களினால்தான் நான் அமெரிக்காவிற்கு ஒடிப் போயிட்டேன்

   Delete
 11. இன்றைய நிலையில் இவர்களே மிக முக்கியமானவர்கள்....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் குமார் தமிழகத்தை வாழ வைப்பவர்கள் இந்த குடிகாரர்களே.. அதிக அளவு சம்பாதிக்கும் வியாபரிகள் பிஸினஸ்மேன் கள் ஒழுங்காக நியாமாக வருமான வரி செலுத்தினால் பொது சொத்தை கொள்ளையடிக்கும் அரசு ஊழியர்கள் அரசியல் தலைவர்கள் அதை செய்யாமல் இருந்தால் இப்படி டாஸ்மாக்கை திறந்துவிட்டு வருமானம் சம்பாதிக்கும் நிலைமை ஏற்ப்பட்டு இருக்காதே

   குடிக்காதாவன் குடிப்பவனை குறை சொல்லுகிறான் ஆனால் நான் இந்த கருத்தில் சொல்லியவைகளை எல்லாம் அவன் குறை சொல்லுவதில்லையே அது ஏன்? அதை சிந்திக்கும் அறித்திறன் கூட இல்லாமல் குடிப்பவனுக்கு சிந்திக்கும் திறன் குறைந்து போகிறது என்று சொல்லுகிறான் என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது..

   Delete
 12. வணக்கம்

  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி


  பார்வையிட முகவரி இதோ- வலைச்சரம்


  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog