உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 8, 2011

அமெரிக்கா நியூஜெர்ஸியில் அட்டாக் தொடங்கியது


அமெரிக்கா நியூஜெர்ஸியில் அட்டாக் தொடங்கியது


அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து மக்களை அட்டாக் செய்து வந்த கரடிகளை சுட்டு கொல்லும் பணி இந்தவாரம் தொடங்கியது. (டிசம்பர் 5 2011 திங்கள்கிழமை) முதல் நாளிலே 200 கரடிகள் சுட்டுக் கொல்லப்பட்டன..இதற்கு எதிராக சில குழுக்கள் போராடி வந்தாலும் அரசாங்க அனுமதியுடன் இந்த ஆண்டும் இந்த அட்டாக் தொடங்கியது. அமெரிக்காவிலே மிக அதிக அளவு கரடிகள் உள்ள மாநிலம் நியூஜெர்ஸி ஆகும். இதன் வளர்ச்சியை கட்டுபடுத்த தவறியதால்தான் இந்த நடவடிக்கை இப்போது.(200 Bears Killed on First Day of New Jersey Black Bear Hunt)  இந்த அட்டாக்கை நடத்துவதற்கு வேட்டையாடுபவர்களுக்கு இந்த வருடம் 6400 பெர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்டிப்பாக அனுமதியும் அடையாள அட்டையும் பெற்று இருக்க வேண்டும். என்ன வெப்பன்ஸ் எடுத்து செல்ல வேண்டும் என்ற ரூல்ஸ் ஏற்படுததப்பட்டுள்ளது. சுட்டு கொன்ற கரடிகளை அதற்கென ஏற்படுத்துபட்டுள்ள  நான்கு ஸ்டேஷன்களில் எதாவது ஒன்றிற்கு கொண்டு வந்து காண்பித்து அங்குள்ள அதிகாரிகளால் அந்த கரடிகளில் எடை பார்க்கப்பட்டு அதன் பல்லை எடுத்துவிட்டு ரத்த சாம்பிளையும் எடுத்துவிட்ட பின்பு அந்த கரடியை வேட்டையாடியவர்களிடம் கொடுக்கப்படும்.
இந்த செய்தியை நீங்கள் வீடியோவாக Foxnews சேனலில் வந்ததை கிழே காணலாம். 


Robert Melber, a welder இவர்தான் இந்த வேட்டையில் முதலில் கரடியை வேட்டையாடியவர். இவர் கொன்றது 166.5 பவுண்ட் எடையுள்ள பெண் கரடியாகும். He says it only took 30 minutes before "she walked right into me, ran right into me."

இந்த வேட்டையாடுதல் இந்த வார இறுதிவரை நடக்கும். இந்த வேட்டையில் குறைந்தது 600 கரடிகளையாவது கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
The anti-hunting groups இதற்கு எதிராக போராடினாலும் அவர்கள் வாதம் எடுபடவில்லை. அவர்கள் நினைப்பதுமாதிரி இந்த கரடிகள் ஸ்ர்க்கஸில் வரும் பழக்கப்பட்ட கரடிகள் அல்ல. இவைகள் பயங்கரமான காட்டுவிலங்குகள்.
"New Jersey's Department of Environmental Protection குறிப்பின்படி கரடிகள் 3000 தடவைகள் மனிதவாழ்க்கையில் குறிக்கிட்டதுமல்லாமல் 46 தடவைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து வீட்டிற்குள்ளும் வந்துள்ளன. நீங்கள் கிச்சனுக்கு சமைக்க வரும் போது அங்கு ஒரு கரடி இருந்தால் எப்படி இருக்கும். அந்த மாதிரி நிகழ்ச்சிகள் ஏற்படாவண்ணம் தடுக்கதான் இந்த வேட்டையாடுதல் என்று அந்த டிபார்ட்மெண்ட் அறிவித்துள்ளது(என்னங்க எங்கவீட்டு கிச்சனில் எப்போது கரடி இருக்கிறது அல்லது வீட்டில் இருக்கிறது நாங்கள் அதைகண்டா பயப்படுகிறோம் என்று நீங்கள் உங்கள் மனைவியை நினைத்து சொல்ல வருவது எனக்கு புரிகிறது. அதற்க்காக நான் இங்கு இருந்து வேட்டையாட ஆள் அனுப்பமுடியாதுங்க மக்காஸ்)


இந்த கரடிகள் நீயூஜெர்ஸியில் நான் வசிக்கும் பகுதிக்குள் இன்று வரை வரவில்லை. ஒருவேளை இங்கு தமிழர்கள்  அதிகம் வசிப்பதாலோவோ என்னவோ கரடிகள் நம்ம நிறத்தினை பார்த்து நாமும் அவர்கள் இனம்தான் என்று கருதி வராமல் இருந்துவிட்டது போலும். எங்கள் பகுதிகளில் மான்களின் நடமாட்டம் உண்டு. கடந்த மாதம் இரவில் வெகு வேகமாக வேனை ஒட்டி செல்லும் போது எனக்கு முன் உள்ள கார் சடனென்று விலகி அடுத்த லயனுக்கு செல்ல எனக்கு சைடில் இன்னும் ஒரு கார் வர என்னால அடுத்த லயனுக்கு போக முடியாமல் அடிப்பட்டு கிடந்த மானுக்கு மேலே சென்றேன். காரில் தூங்கி வந்த என் மனைவியோ என்ன என்னாச்சு என்று பதறினாள் . நான் நடந்ததை சொன்னேன் அவள் கேட்டாள் மான் மேலேதான் ஏறினிங்களா இல்லை மனுசனை அடிச்சுபோட்ட்டிங்களா என்று கேட்டாள். அதற்கு நான் மனுசனை அடித்து போட்டு இருந்தாலும் இப்போது என்னால் ஒன்னும் செய்ய முடியாது அவன் போக வேண்டிய இடத்துக்கு இப்போ போய் சேர்ந்து இருப்பான் என்று சிரித்தவாறே வேனை ஒட்டி சென்றேன்.

நான் வேன் ஓட்டிச் செல்லும் போது மான் வழியில் வந்து மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். நல்ல வேளை கடவுள் செய்த புண்ணியம் எனக்கு அந்த மாதிரி விபத்து ஏற்பட்டது இல்லை

3 comments :

 1. ஐயோ பாவம் கரடிகள்...!!!

  ReplyDelete
 2. செத்த கரடிகளின் தோல்களை உபயோகப் படுத்திக் கொள்வார்களோ?

  LIKE FUR BAGS,

  ReplyDelete
 3. அங்குள்ளவர்கள் கரடியை வேட்டையாடுகிறார்கள்,இங்குள்ளவர்கள்
  மனிதரை வேட்டையாடுகிறார்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog