உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 11, 2011

முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழ் திரை உலகம் மெளனமாகி போனது ஏன்?

முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழ் திரை உலகம் மெளனமாகி போனது ஏன்?

தமிழக பிரச்சனைகளுக்கு எப்போதும் குரல் கொடுத்து ஆர்பாட்டங்களும், ஊர்வலங்களும், உண்ணாவிரதங்களும் நடத்தி  வந்த தமிழக திரை உலகம் ,முல்லை பெரியாறு விசயத்தில் மட்டும் வாய்மூடி மெளனமாகி போன மர்மம் யாருக்கும் தெரியுமோ? திரை உலகில் தான் எத்தனை சங்கங்கள் தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம்,தாயாரிப்பாளர் சங்கம், டைரக்டர்கள் சங்கம் சின்ன திரை நடகர்கள் சங்கம் இதனை போல பல சங்கங்கள் அறிக்கைகள்கூட விடாமல் மறைமுகமாக கேரளா மாநிலத்தை ஆதரிக்கின்றனவோ? விஷயம் தெரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தருவார்களா?

சென்னை, ஆக.23 2011: ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரை உலகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது ஆனால் தமிழனுக்கு எதிராக நடை பெறும் இந்த சூழ்ச்சியை கண்டிக்க முயலாதது ஏன்?மற்ற விஷயங்களில் போராட, கருத்து தெரிவிக்க முதலில் ஓடி வரும் தமிழ் சினிமாக்காரர்கள், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில கேரளாவைக் கண்டிக்க முன்வராததற்கு தமிழ் பதிவாளர்கள் சார்பில் கடும் கண்டனத்தை நான் இங்கு தெரிவிக்கிறேன்.எழுடா தமிழா எழுடா
இந்த தமிழ் பூமி உனதடா
எழுடா தமிழா எழுடா

தமிழா யானையின் பலமும்,
சிறுத்தையின் குணமும்
உன்னிடம் இருந்தாலும்
அதை சமயம் வரும் போது
உபயோகிக்கவில்லை எனில்
நீயும் ஒரு மனிதனாடா(தமிழனா)


தமிழா பொறுத்தது போதும்
பொங்கி எழு தமிழா 

அணை உடைந்தால் ஏற்படும் சேதத்தைவிட
நமது மனம் உடைந்தால் ஏற்படும் சேதத்தை
அந்த கேரளா மக்களுக்கு காண்பித்துவிடுடா

ஒற்றுமையுடன் போராடுவோம் அதுமட்டுமல்லாமல் நம் தமிழக மண்ணில் காலம் காலமாக வசித்து வரும் கேரளா மக்களுக்கு நடப்பதை தெளிவாக உணர்த்தி அவர்களையும் நம் போராட்டத்தில் கலந்து கொள்ள செய்வோம்.

 இந்த போராட்டம் தமிழர்களுக்கும் கேரளா மக்களுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல இது மக்களிடம் பிரிவாதம் ஏற்பட நினைப்பவர்களுடன் நாம் நடத்தும் போராட்டம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு  நடத்துங்கள்.


வெற்றி நிச்சயம்
------------------------------------------------


டீன் ஏஜ் வயதில் குழந்தைகள் செய்யும் மனம் பதைக்க வைக்கும் செயல் (குழந்தைகள் உள்ள பெற்றோரின் கவனத்திற்கு) இதுவரை வெளிவாராத உண்மைகள் விரைவில் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்தில் வெளிவரும். படிக்கதவறாதீர்கள்.

3 comments :

 1. சினிமாகாரனுகளுக்கு பணம்தான் முக்கியம் தண்ணியும் மக்க்களுமில்லை...!!!

  ReplyDelete
 2. தமிழ்ச் சினிமா உலகில் மலையாளிகளும் இருப்பதால் ( கிடையாது)
  கம்முன்னு கெடக்குறாங்க போல, மொதல்ல இந்தியாவில் இருக்குற
  எல்லா மொழியையையும் எடுத்து விட்டு 'நவி' போன்ற ஒரே ஒரு புது மொழியைக் கொண்டு வந்தால் ஒரு வேளை ஒற்றுமை ஏற்படலாம்.:)

  ReplyDelete
 3. எழுந்து வாடா தமிழான்னு சொன்னா இவன்களுக்கு புரியாது. ஏனென்றால் இவன்கலெல்லாம் யூஸ் பண்கிற பொண்ணுங்களெல்லாம் மலையாளிதானே. எதிற்த்து எதாவது ஆயிட்டுன்னா. அப்புரம் ரூம்ல ஸ்காட்ஸ் அடிச்சிட்டு தொட்டுக்க பொண்ணுங்க கிடைக்காதே.
  AZIFAIR-SIRKALI.BLOG

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog