உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 22, 2011

கலைஞரின் அதிரடி ஆரம்பம்....

கலைஞரின் அதிரடி ஆரம்பம்.

பொறுத்தது போதும் பொங்கி எழுடா தமிழா என்று எப்போதும் வசனம் எழுதி தமிழனை மட்டும் எழுப்பி, தான் மட்டும் தூங்கி கொண்டிருந்த கலைஞர் இறுதியாக தன் தூக்கம் கலைந்து எழுந்தார். அவர் தூக்கம் கலைந்ததர்க்கு அவரது துக்கமும் காரணம் ஆகும்.

தன்னை நம்பிய தமிழர்களை தான் மட்டும் கைவிடுவதும் ஆனால் தான் நம்பியவர்கள் தன்னை கைவிடும் போது கண்ணிர் விடுகிறார் இந்த தலைவர். அவரின் சிந்திய கண்ணிர் துளியின் விளைவால் எழுந்த இந்த அறிவிப்புதான் பிரதமர் மன்மோகன் சிங்கையும், லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற திமுகவின் குரல்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நேற்று தில்லியில் நடந்தது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். தில்லியிலேயே இருந்தும் திமுக தலைவர் கருணாநிதி அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கலைஞரின் குரலாக இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில் திமுகவின் இந்தக் கோரிக்கையை அரசியல் நோக்கர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார்கள்.

பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூட்டணியில் உள்ள திமுக வை தவிர பெரும்பாலான கட்சிகள்   இந்த விவகாரத்தில் அரசை ஆதரிக்கின்றன.

பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும், பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் அரசு கருதுகிறது.

இப்போது என்னவோ பிரதமரின் தலைமையில் இந்திய நிர்வாகம் நல்ல நிலைமையில் இருப்பதாக ஒரு நினைப்பு. நன்றாக படித்தவன்  எல்லாரும் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்த முடியாது என்பதற்கு நமது பிரதமர் ஒரு முன்மாதிரி உதாரணம் ஆவார்.

அமெரிக்க ஜனாதிபதி கூட அமெரிக்காவில் அவர் பிழை செய்ததாக கருதும் பொழுது அவரை அழைத்து விசாரிக்கப்படும் போது ஏன் இந்தியாவின் பிரதமர் விசாரிக்கப்பகூடது ? இந்தியாவில் எவர் பிழை செய்தலும் விசாரணை வேண்டும் இது  ஒரு  ஜனநாயக நாடு எல்லா இந்திய குடிமக்களும் சமம் .பிரதமர் இந்தியாவின் ஒரு சேகவர் தான் அவர் கடவுள் அல்ல.

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கடைநிலை அரசாங்க ஊழியன் தவறு செய்யும் போது அவனை அழைத்து விசாரிக்கும் போது அவரைப் போல இந்திய அரசாங்க ஊழியன் தான் பிரதமர். அவர் தவறு செய்தால் அவரையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் நடந்தற்கு நிர்வாகத்தில்  ஓழுங்காக கவனம் செலுத்தாத பிரதமர்தான் முக்கிய காரணம் ஆவார்.

ஒரு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அந்த மாவட்டத்தின் தலைமை போலிஸ் அதிகாரியை மாநில முதல்வர் கூப்பிட்டு விசாரித்து தேவையென்றால் வேறு அதிகாரியை மாற்றுவது போல நமது பிரதமரும் தவறு செய்தால் அவரையும் மாற்றுவதற்கு சட்டத்தில் மாற்றம் தேவை
இந்த சமயத்தில் தி .மு . .வின் இந்த குரல் .வரவேற்கப்படவேண்டியதே .கட்சி ஊழல் கட்சியாக இருந்தாலும் .இந்த விஷயத்தில் தன கருத்தை தைரியமாக சொல்லியதற்கு பாராட்டுக்கள் .பிரதமர் மனிதசக்திக்கு அப்பாற்பட்டவரில்லையே !.அவரையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்3 comments :

 1. மகிழ்ச்சியான செய்தி

  ReplyDelete
 2. பிரதமர் இந்தியாவின் ஒரு சேகவர் தான் அவர் கடவுள் அல்ல.

  இப்போது என்னவோ பிரதமரின் தலைமையில் இந்திய நிர்வாகம் நல்ல நிலைமையில் இருப்பதாக ஒரு நினைப்பு. நன்றாக படித்தவன் எல்லாரும் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்த முடியாது என்பதற்கு நமது பிரதமர் ஒரு முன்மாதிரி உதாரணம் ஆவார்.

  மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கடைநிலை அரசாங்க ஊழியன் தவறு செய்யும் போது அவனை அழைத்து விசாரிக்கும் போது அவரைப் போல இந்திய அரசாங்க ஊழியன் தான் பிரதமர். அவர் தவறு செய்தால் அவரையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.


  100% correct statements.

  Dummi@Rubber stamp Manmohan singh is the Pinami of Sonia and US.

  ReplyDelete
 3. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை, கனிமொழியை உள்ளே தள்ளி விட்டார்கள் என்று இவர்கள் ஓலமிடுவது எதற்கு? ஊழல் ஒழிப்புக்கும், தி.மு.க. காரனுக்கும் என்ன சம்பந்தம்? இவனுங்க அளவுக்கு ஊழல் பண்ணிய அயோக்கியர்கள் இந்தியாவில் வேறு யார் இருக்கிறார்கள்? 1.76 கோடி கொள்ளையடிக்க அனுமதித்த கமிஷனுக்கு பிறந்த இந்த நாய்கள் ஊழலைப் பற்றி பேசுவது விந்தையிலும் விந்தை.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog