உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 15, 2011

துணிச்சலான தமிழச்சியின் துடுக்கான பேச்சு.

துணிச்சலான தமிழச்சியின் துடுக்கான பேச்சு.

முன் பின் அறியாத ஒரு ஆணும் பெண்ணும் சந்தர்ப்பவசமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரே கூபேயில் தனியாக பயணம் செய்ய நேர்ந்தது. இருவரும் மணமானவர்கள். அவர்களுக்குள் என்ன பேசுவது என்று தெரியாமல் மெளனமாக பயணம் செய்தனர், ரயில் திண்டுக்கல் நிலையம் தாண்டியதும் களைப்பால் அந்த பெண் தூங்குவதற்கு ரெடி ஆனாள் அதை புரிந்து கொண்ட அந்த ஆணும் அப்பர் பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டான் அந்த பெண்ணோ லோயர் பெர்த்தில் படுத்துக் கொண்டார். ரயில் திருச்சியை தாண்டி இருக்கும், தூக்கம் வராமல் அந்த பெண்ணையே பார்த்து கொண்டிருந்த அந்த ஆண் ,கிழேபடுத்திருந்த அந்த பெண்ணை எழுப்பி மேடம் உங்களை தொந்தரவு பண்ணுவதற்கு மன்னிக்கவும். எனக்கு ரொம்பவும் குளிராக இருக்கிறது.. சீட்டுக்கு கிழேயுள்ள அந்த கம்பளியை எடுத்து தாருங்கள் என்று கேட்டான்..

அந்த ஆணின் செயல் பிடிக்காத அந்த பெண் பதில் சொன்னாள் எனக்கு ஒரு நல்ல ஐடியா தோன்றுகிறது. இந்த இரவு மட்டும் நாம் இருவரும் மணமான தம்பதி போல நடிப்போம் என்றாள்.

அவனுக்குள் ஒரு ஆயிரம் வாட்ஸ்பல்ப் எரிந்தது போல ஒரு உணர்வு வாவ்வ்வ்வ்வ் என்று சொன்னவாரே அந்த ஐடியாவுக்கு ஒத்து கொண்டான்.

அவளும் அதற்கு நல்லது என்று சொன்னபடியே அவனை நோக்கி சொன்னாள் '''அப்ப நீயே உனக்கு தேவையான ப்ளடி(Bloody) கம்பளியை எடுத்து மூலையில் போர்த்தி படுத்து தூங்குடா என்று கத்தியவாறு படுத்து அமைதியாக உறங்கினாள்.Click this picture to see Large size

வழக்கம் போல நான் படித்து ரசித்த ஜோக்கை எனது வழியில் மாற்றிதந்துள்ளேன்.

இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...
அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...

6 comments :

  1. எல்லா பொண்டாட்டியும் இப்பிடி தானா
    ஹி ஹி

    ReplyDelete
  2. இத..இத...இத.....இதத்தான் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog