உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 9, 2011

கணவன் மனைவிக்குள் சண்டை வருவது எதனால்?( உஷார் மக்கா உஷார்)


கணவன் மனைவிக்குள் சண்டை வருவது  எதனால்?( உஷார் மக்கா உஷார்)
இந்த பதிவு நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் மட்டுமே. அப்படிப்பட்ட உணர்வு இல்லாதவர்கள் மேலே படிக்க வேண்டாம்.
இந்த பதிவு பெண்களையோ அல்லது ஆண்களையோ மட்டம் தட்டி எழுதப்பட்டது அல்ல. இதில் வரும் நகைச்சுவை சம்பவங்கள் பெரும்பாலும் அமெரிக்க குடும்பங்களை வைத்து எழுதப்பட்டதாகும்.
 வெள்ளிக்கிழமை மாலை வேலையில் இருந்து வந்த கணவனிடம் மனைவி சொன்னாள் என்னை விலை உயர்ந்த  இடத்திற்கு( someplace expensive )  கூட்டி சென்று காண்பியுங்கள் என்று சொன்னாள். சிறிது யோசனைக்கு பிறகு ஒகே  நான் ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துகிறேன் அதற்குள் நீ ரெடியாகிவிடு நான் உன்னை கூட்டி சென்று காண்பிக்கிறேன் என்றான்.அவள் ரெடியானதும் அவளை காரில் அழைத்து.......................................... அருகில் உள்ள பெட்ரோல் ஃப்ங்க்குக்கு கூட்டி சென்று காண்பித்தான்.. அதனால் ஆரம்பித்தது அவர்களுக்குள் சண்டை...( மக்கா மனைவி சொன்னதை கேட்டாலும் சண்டைதான்)

 கணவன் மனைவியிடம்  நம்முடைய திருமண நாள் ஆண்டுவிழாவுக்கு எங்கே செல்லலாம் என்று கேட்டான் அதற்கு மனைவி  சொன்னாள் ரொம்ப நாளாக  நான் போகாத இடத்திற்கு கூட்டி சென்று காண்பியுங்கள் என்று சொன்னாள். அதற்கு அவனும் சரி  என்று சொல்லி டிரெஸ் செய்து ரெடியா இரு நான் உன்னை கூட்டி செல்கிறேன் என்று சொன்னான். அவளும் ஒரு மணி நேரம் எடுத்து நன்றாக டிரெஸ் செய்து வந்தவுடன் அவளை அவன் கிச்சனுக்கு அழைத்து சென்று காண்பித்தான் அதனால் ஆரம்பித்தது அவர்களுக்குள் சண்டை ( மக்கா கேட்பதை தெளிவாக கேக்காமா அப்புறமா  நம்பளை குறை கூறுவதை இந்த பெண்களுக்கு வழக்கம்).

ஷாப்பிங் சென்ற என் மனைவியிடம் எனக்கு பீர் வாங்கிவா $ 14,99 தான் என்று சொன்னானேன் ஆனால் அவளோ அதற்கு பதிலாக அவள் உடம்பிற்கு போடுவதற்ககு கோல்டு க்ரிம் $ 7.99 க்கு வாங்கி வந்தாள் அதை பார்த்த நான் நீ அந்த கோல்டு க்ரிமை போட்டு என் கண்ணிற்கு அழகாக தெரிவதைவிட நான் பீர் குடித்து  இரவில் உன்னை நான் பார்த்தால் நீ மிகவும் அழகாக இருப்பாய் என்றுதான் உண்மையை சொன்னேன்.அதனால் ஆரம்பித்தது எங்களுக்குள் சண்டை( மக்கா உண்மையை சொன்னால் கூட சண்டை போடுறாங்கப்பா?
 
 
 
 என் மனைவியும் நானும் படுக்கையில் படுத்தப்படி "Who Wants To Be A Millionaire" எனற டிவி புரோகராமை பார்த்து கொண்டிருந்தோம். அப்போது கணவனுக்கு மூடு வந்ததால்  என்ன நாம செக்ஸ் வைத்து கொள்ளலாமா(Do you want to have sex?) என்று கேட்டேன் அதற்கு அவள் 'நோ" என்று சொன்னாள். அதற்கு நான் அதுதான் பைனல் பதிலா (Final Answer) என்று கேட்டடேன் அதற்கு அவள் ஆமாம் என்று சொன்னாள். நானோ Who Wants To Be A Millionaire" பார்த்த பாதிப்பால் உடனே என் தோழியை போன்முலம் உதவிக்கு கூப்பிட   (I said, "Then I’d like to phone a friend)."போறேன்  என்று சொன்னேன். அவ்வளவுதான் அதனால் ஆரம்பித்தது எங்களுக்குள் சண்டை( என்னப்பா துக்குதான் டிவி அதிகம் பார்க்க கூடாது என்பது.)

 நள்ளிரவில் கணவனும் மனைவியும் ரொம்ப அப்பிராணியாக ஒருவரை ஒருவர் அனைத்தவாறு தூங்கி கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே ஏதோ ஒரு பயங்கர சத்தம் கேட்டது. உடனே அந்த பெண் பயத்தில் ஒ....மைகாட் என்று சத்தம் போட்டபடி என்னங்க என் வீட்டுகாரர்தான் வந்து விட்டார் போல என்று சத்தம் போட்டு சொன்னாள். உடனே அவள் பக்கத்தில் படுத்து இருந்தவன் உடனே வேகமாக பேண்டை கூட மாட்டாமல் கார் கீயை மட்டும் எடுத்து ஜன்னல் வழியாக குதித்து காரை எடுத்து வேகமாக  ஒட்டினான் அதன் பிறகுதான் அவன் உணர்ந்தான் அவன் அவனுடைய வீட்டில் இருந்துதான் ஒடி வந்ததை. உடனே அவன் காரை வீட்டிற்கு ஒட்டி சென்று ,அதன் பின் அவன் படுக்கை அறைக்கு சென்று மனைவியிடம் கத்தினான் நான் தான் உன் கணவன் என்று. அதற்கு அவள் அவனை பார்த்து திரும்பி கத்தினாள் அப்பறம் எதுக்கு நீங்க பேண்ட் கூட மாட்டாம ஜன்னல் வழியாக குதித்து ஒடினிங்க என்று. அவ்வளவுதான் அதனால் ஆரம்பித்தது எங்களுக்குள் சண்டை(மக்கா அர்த்த ராத்திரியில் எந்திடிச்சாலும் உஷாரக இருக்கனும்மக்கா ....அர்த்த ராத்திரியில் எழுப்பி கூட நம்பளை சோதித்து பார்ப்பார்கள் உஷார் மக்கா உஷார்)

 
 
ஒரு தம்பதியினர் ஹோட்டலுக்கு சென்றனர். சர்வர் கணவரை முதலில் பார்த்து என்ன ஆர்டர் செய்கிறிர்கள் என்று கேட்டான் அதற்கு அவன்  ஒரு மீடியம் "strip steak "( மாட்டு இறைச்சி) என்று ஆர்டர் செய்தான். உடனே சர்வர்  mad cow ( ஒருவித நோய்) பற்றி நீங்கள் கவலைப்படாமல் ஆர்டர் செய்கீறிர்களே என்று ஆச்சிரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த கணவன் மனைவியை பார்த்து அவளுக்கு வேண்டியதை அவளே ஆர்டர் செய்து கொள்வாள் என்று கூறினான் அங்கு ஆரம்பித்தது வினை
 இது போல உள்ள நகைச்சுவை சம்பவங்களை இந்தியா சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களிடம் இருந்தால் அதை பின்னுட்டம் மூலம் இங்கே அறிமுகப்படுத்தலாம். நன்றி

இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...
அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...

5 comments :

 1. mad cow ( ஒருவித நோய்) பற்றி நீங்கள் கவலைப்படாமல் ஆர்டர் செய்கீறிர்களே என்று ஆச்சிரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த கணவன் மனைவியை பார்த்து அவளுக்கு வேண்டியதை அவளே ஆர்டர் செய்து கொள்வாள்//

  :)))
  VIVISI

  ReplyDelete
 2. ஒரு மணி நேரம் எடுத்து நன்றாக டிரெஸ் செய்து வந்தவுடன் அவளை அவன் கிச்சனுக்கு அழைத்து சென்று காண்பித்தான்//


  பெருந்தன்மையா ஒத்துக்கறீங்க..:)

  ReplyDelete
 3. ஒன்னு கூட சிரிக்கிற மாதிரியே இல்ல.

  ReplyDelete
 4. நல்ல நகைச்சுவை .நன்று

  ReplyDelete
 5. 1) "அவள் அவனை பார்த்து திரும்பி கத்தினாள் அப்பறம் எதுக்கு நீங்க பேண்ட் கூட மாட்டாம ஜன்னல் வழியாக குதித்து ஒடினிங்க"

  2)"ஒரு மணி நேரம் எடுத்து நன்றாக டிரெஸ் செய்து வந்தவுடன் அவளை அவன் கிச்சனுக்கு அழைத்து சென்று காண்பித்தான்"

  அந்த இரண்டுக்கும் நான் சிரித்தேன்! தேங்க்ஸ் சிரிக்கவைத்ததுக்கு ...!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog