உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 25, 2011

இன்றைய இளைய தமிழர்கள் நினைப்பதும்... நடப்பதும்


இன்றைய இளைய தமிழர்கள் நினைப்பதும்... நடப்பதும்

படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று கஷ்டப்பட்டு படித்துபட்டம் பெற்று இறுதியில் வேலையின்றி அலைகின்றனர்.
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் என்பதற்காக இராப்பகலாக கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு வாங்கி நிம்மதி இன்றி இருக்கின்றனர்.
நல்ல உறக்கம் வருமென்று பட்டுமெத்தையை தேடி வாங்கி அந்த பட்டுமெத்தையில் படுத்து உறக்கத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்

அழகாக இருக்க  வாங்கிய ஆபரணங்களை  வங்கி லாக்கரில் வைத்து விட்டு அலங்கோலமாக அலைந்து திரிகின்றனர்
அவசர தேவைக்கு என  வாங்கிய வாகனத்தில் அவசியமற்ற தேவைக்கு பயணம் செய்கின்றனர்.
முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும் முடியவிடாமல் செய்ய செய்கின்றனர்.

இவர்கள் தான் இன்றைய இளைய தமிழர்கள்..இதில் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர்கள்

எனது நண்பர் அனுப்பிய மெயிலை படித்து  அதை என் வழியில் மாற்றம் செய்து நீங்கள் படித்து ரசித்து சிந்திக்க இங்கே தந்துள்ளேன்.

3 comments :

  1. இன்றய காலத்தில் மனிதரடகள் இயந்திரமாகிவிட்டனர்... அதிகம் வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிலை இது வெ..

    ReplyDelete
  2. நீங்கள் எழுதியது உண்மைதான்.. இன்றைய இளைஞர்கள் ஒரு மாதிரியான உப்புசப்பற்ற ‘சவசவ’ வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்.

    ReplyDelete
  3. தோழி பிரஷா & Ellen வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் இருவரின் கருத்துக்களையும் நான் முழுமையாக் ஒத்து கொள்கிறேன்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog