Wednesday, August 3, 2022

 தேசப்பற்றைக் காண்பிக்க பாஜகவால் நடத்தப்படும் நாடகத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
 

@avargalunmaigal



ஒரு கொடியின் விலை 25 ரூபாய் என்றால் பாஜக  அரசு தமிழகத்தில்  50 லட்சம் கொடிகளை விநோகிக்க  போகிறதாம் இதை நான் சொல்லவில்லை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். ஒரு கொடியின் விலை 25 ரூபாய் என்றால் 50 லட்சம் கொடிக்கான செலவு எவ்வளவு? கொஞ்சம் கணக்குப் போட்டுத்தான் பாருங்களேன்


50,00,000 X 25 =  125,000,000  ( நூற்று இருபத்தைந்து மில்லியன்)  அதாவது 12.5 கோடி அவ்வளவுதாங்க நமக்குத்தான் இந்த தொகை அதிகம் ஆனால் பாஜககாரர்களுக்கு இது எல்லாம் ஒரு தொகையே அல்ல


இதை அரசுப்பணம் என்று நினைக்காதீர்கள் இது உங்கள் பணம். அதாவது வரி விதிப்பின் மூலம் வசூலிக்கப்பட்ட பணம்... அதாவது நீங்கள் வேர்வை சிந்தி உழைத்து சம்பாரிக்கும் பணத்திலிருந்து ஜிஎஸ்டி வரி மூலம் உங்கள் உழைப்பைச் சுரண்டிய பணம்.. இப்படி வசூலிக்கும் வரிகள் மூலம் மக்கள் நன்மைக்காகச் செலவழிக்கப்பட வேண்டும் ஆனால் இங்கு யாரோ ஒருவர் சம்பாதிக்க மத்திய அரசு போட்ட திட்டம்தான் இது.


உங்களிடம் தேசப்பற்றை ஊக்குவிக்க யாரிடமோ ஒரு கொடியை 25 ரூபாய்க்கு வாங்கி இலவசமாக தருகிறது மத்திய அரசு.. தமிழகத்திற்கு மட்டும் 50 லட்சம் கொடியை மத்திய அரசு தருகிறது இது போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கப் போகிறது.. இதற்கு எத்தனை கோடிகள் செலவழியப் போகிறது யோசித்துப் பாருங்கள்..

இதனால் பலனடையப் போகும் அந்த நபர் யாராக இருப்பார் என்று????


மோடி அரசு பரிசுத்தமான அரசு ஊழல் இல்லாத அரசு


இப்படி கொடியை ஒவ்வொரு வீட்டிலும் தொங்க விடுவதற்குப் பதிலாகச் சுதந்திர தினத்தன்று அரசு கொடி ஏற்றும் விழாவில் மக்கள் கலந்து கொண்டு அவரவர் வசிக்கும் பகுதியை அந்த பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அன்று சுத்தம் செய்யலாம்...  அரசு அதற்கு உதவியாக இருந்து  அங்குச் சேரும் குப்பைகளை எல்லாம் அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வாகனங்களை ஏற்பாடு செய்து தரலாம்.. இப்படிச் செய்வதன் மூலம் இந்தியாவே அன்று மிகச் சுத்தமாக மாறும்.  மேலை நாடுகளுக்கு இணையாக மாறும்.. இதுதான் தேச நலனுக்கான செயல் என்று சொல்லாம் இப்படிச் செய்வதன் மூலம் தங்கள் தேசப்பற்றைப் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் காட்டலாமே..


2 comments:

  1. கேனப்பயல் ஊருல கிறுக்குப்பய நாட்டாமை கதைதான்.

    ReplyDelete
  2. இப்போது வாங்குபவர்கள் மனித குல விரோதிகள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.