Saturday, August 13, 2022

 தேசியக் கொடியை வலுக்கட்டாயமாக வாங்க சொல்லி வற்புறுத்துவது என்பது?

 

@avargalunmaigal


வலுக்கட்டாயமாக
ஒரு பெண்ணை இழுத்து
தாலி கட்டுவது போல
இப்போது தேசியக் கொடியை
வலுக்கட்டாயமாக விற்று வருகிறார்கள்.



குடிகாரனின் உடம்பில்
அரைகுறையாக
ஒட்டிக் கொண்டிருக்கும்
வேட்டியைப் போல
பாஜககாரனின் கையில்
இந்தியத் தேசியக் கொடி
ஒட்டிக் கொண்டு இருக்கிறது


அன்று பாஞ்சாலியின்
மானத்தைக்
காக்க கிருஷ்ண பகவான் உதவியது போல
மோடியின்
மானத்தைக் காக்க
இந்தியத் தேசியக் கொடி
உதவிக்  கொண்டு இருக்கிறது


 
@avargal unmaigal


வாங்கிய தேசியக் கொடியை
என்ன செய்வது என்ற
கவலை உங்களுக்கு வேண்டாம்
இந்திய மக்களே
அது மோடியின்
பொருளாதாரக் கொள்கையால்
வாழ்விழந்து வசதியிழந்து
தற்கொலை செய்து
கொள்பவர்களின்
உடலைப் போர்த்தி அடக்கம்
செய்ய உதவும்



சீறிவரும் பாம்பை நம்பினாலும் நம்பலாம்
ஆனால் தேசியக் கொடியை
ஏந்தி வரும் சங்கிகளை மட்டும் நம்பாதே



சுதந்திர தினத்தன்று சரக்கு விற்பனைக்கும்
இறைச்சி விற்பனைக்கும்
இன்னும் மோடி அரசு தடை போடாதது
எனக்கு வியப்பை அளிக்கிறது
(ஹீஹீ கொளுத்தி போட்டாச்சு.. இதை மோடியின் காதிற்கு யாராவது எடுத்துச் செல்கிறார்களா என்று    என்று பார்ப்போம் )




எத்தனை புடம் போட்டாலும்
 இரும்பு பசும்பொன் ஆகுமா?
அது போலத்தான்
எத்தனை தேசியக் கொடியை
வாங்கினாலும்
சாவர்க்கர் பரம்பரையினர்
தேசபக்தர்களாக ஆக முடியாது


அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.