Saturday, August 27, 2022

நாளையே இந்தியா ஒரு இந்து ராஷ்டிராவாக மாறினால் என்ன மாறும்??
 

@avargal unmaigal





RSS இயக்க தலைவர்கள் கண்ட கனவு படி நாளையே இந்தியா ஒரு இந்து ராஷ்டிராவாக மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதன் பின் இந்தியா ஊழலற்ற நாடாக மாறிவிடுமா என்ன?

வேலையில்லா திண்டாட்டம் குறைந்துவிடுமா?

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப்பணம் எல்லாம் இந்தியாவிற்குள் வந்து விடுமா?

கங்கை நதி சுத்தமாகிவிடுமா?

அண்டை நாடுகள் எல்லாம் நட்பு நாடுகளாகிவிடுமா?

நார்த் இண்டியன்ஸ் ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் வாங்கி பயணம் செய்வார்களா?

பீடா வாயன்கள் கண்ட இடங்களில் துப்புவதை நிறுத்திவிடுவார்களா?

மும்பையில் உள்ள சேரிகள் எல்லாம் மாட கோபரங்களாகிவிடுமா?

டில்லியில் காற்று மாசுபடுவது நின்று போய்விடுமா?

வட நாட்டவர்கள் வேலை தேடி தமிழகம் வருவது நின்று போய்விடுமா?

மொழி வாரி மாநிலங்கள் இல்லாமல் ஆகிவிடுமா?

காவிரி நீர் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?

முல்லை பெரியார் அணை பிரச்சனை தீர்ந்துவிடுமா?

 சாதிகள் ஒழிந்துவிடுமா?

ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டருக்கு மேல் வாங்குவதை நிறுத்துவிடுவார்களா?

அரசாங்க ஊழியர்கள் பொறுப்பாக வேலை செய்வார்களா?

பாலியல் கற்பழிப்புகள் நின்றுவிடுமா என்ன?

ரஜினி தன் ரசிகர்களுக்குப் பிரியாணிதான் போட்டுவிடுவாரா என்ன?

பெண்கள் உப்புமா பண்ணுவதை நிறுத்திவிடுவார்களா?

மோடி பிஎம் கேர் ரகசியத்தைச் சொல்லிவிடுவாரா?

அம்பானி அதானி  வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பி கொடுத்துவிடுவார்களா?

இந்திய ஜனாதிபதி முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி  இந்தியாவை வழி நடத்துவாரா?


 சீனா இந்தியாவில் ஆக்கிரமித்த பகுதிகளை இந்திய ராணுவம்தான் மீட்டுவிடுமா?

 நமது நாட்டின்  ஜிடிபி உயருமா?


தயவுசெய்து யாராவது தெளிவுபடுத்துங்களேன்..


மேலே நான் கேட்டிருப்பதில் பாதியாவது நடக்குமென்றால் இந்தியா இந்து ராஷ்டிராவாக மாறுவதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இருக்காது அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினரும் கூட இந்துவாக கூட தானாகவே முன் வந்து மதம் கூட மாறாலாம்

ஒரு நாடு ஒரு  மதத்தைச் சார்ந்த நாடாக மாறுவதால்  அந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக ஆகிவிட முடியாது  அப்படி ஆக முடியும் என்றால் பாகிஸ்தான் வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் ஏன் பல அரபுநாடுகள் வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் அப்படி ஒன்றும் இது வரை நடக்கவில்லை. சில அரபு நாடுகள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்றால் அது மதம் சார்ந்த நாடாக இருப்பதால் வளர்ச்சி அடையவில்லை அந்த நாட்டில் மக்களுக்கு இன்றைய தேவைக்கான ஆயில் இருப்பதால் அது சற்று வளர்ச்சி அடைந்து இருக்கிறது.. அவர்களிடம் அந்த ஆயில் இல்லாமல் போனாளோ அல்லது எண்ணெய்க்கான தேவை உலக அளவில் மாற்றுச் சக்தியைப் பயன்படுத்துவதால் குறையும் என்றால் அந்த  இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியும் தடைபட்டுவிடும் இதுதான் உண்மை..

மதங்கள் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில்லை நாட்டில் உள்ள இயற்கை வளங்களும் அதைப் பயன்படுத்தத் தெரிந்த திறமையான சமுகமும் அறிவார்ந்த மக்களாலும்தான் அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும்.. இப்படிப்பட்ட இயற்கை வளங்களும் மக்களின் அறிவும் குவிந்து கிடக்கும் இந்தியா அவைகளைச்  சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் வல்லரசு நாடாக மாறிவிடும் அதில் எந்த சந்தேகமும் இல்லை..


ஆனால் இதையெல்லாம்  விட்டுவிட்டு இந்தியாவை  ஒரு இந்து ராஷ்டிராவாக மாற்றினால் நாம் பெறப் போகும் பலன் என்னவென்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன?

சிந்தியுங்கள் பொறுப்பாகச் செயல்படுங்கள் அதன் பின் இந்தியா  எப்போது முன்ன்ன்ற்ற பாதையில் செல்லும்



அன்புடன்
ம்துரைத்தமிழன்

2 comments:

  1. சரியான கோணத்தில் அலசல் இருக்கிறது.

    ReplyDelete
  2. சீரழியும் - மேலும் மேலும் சீரழியும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.