பிஜேபிகாரர்களை விட நாங்க ஒன்றும் இளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்து சொல்லும் திமுக அரசு
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இறைச்சிக்கடைகளையும் பிரியாணிக் கடைகளையும் மூட காஞ்சிபுர காவல் துறை உத்தரவு.. இந்த மாவட்ட காவல் துறை RSS வசம் வந்துவிட்டதா அல்லது தமிழ அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்பது இன்றைய அறிக்கையைப் பார்த்ததும் வருகிறது.
இன்னும் அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றால் பிஜேபிகாரர்களை விட நாங்கள் ஒன்றும் இளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துச் சொல்லும் திமுக அரசு இதை ஒரு முன் மாதிரியாகத் தமிழக மக்களிடம் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சியாக உள்ளதா என்று நம் மனதில் சந்தேகம் எழுகிறது
இதற்கு ஆதரவு அதிகமானால் வருங்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழும் போது மாற்று சமூகத்தினர் அதாவது கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்கள் அந்த நிகழ்வின் போது தங்களது வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று தடையும் விதிக்கப்படலாம் அப்படி நிகிழந்தால் நாம் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை தான்
இறைச்சிக் கடையையும் பிரியாணிக்கடையையும் அடைக்கச் சொல்லும் காவல் துறை டாஸ்மாக்கிற்கு அப்படி ஒரு தடையைப் போடாதது ஏன்? சதுர்த்தி கொண்டாடச் சரக்கு அவசியம் என்பதாலா?
ஆமாம் இத்தனை வருடங்கள் மூடாமல் விழா நடந்ததுதானே... இப்ப மட்டும் ஏன்? ஒருவேளை விநாயகர் கனவில் வந்து இப்படி செய்ய சொல்லிவிட்டரா என்ன?
பகுத்தறிவு ஆட்சியா இல்லை பகுத்தட்சா பகுத்தறிவு ஆட்சியா?
சிந்திக்க ..... படிக்க தவறவிடாக் கூடாத ஒரு பதிவு.
நாளையே, இந்தியா ஒரு இந்து ராஷ்டிராவாக மாறினால் இப்படியெல்லாம் மாறிவிடுமா என்ன ?
அன்புடன்
மதுரைத்தமிழன்
அதானே டாஸ்மாக்கை மூடச் சொல்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை போலும்...
ReplyDeleteஎடுக்க வேண்டிய களை...
ReplyDelete