சின்ன சின்ன கருத்துக்கள்
எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்திற்குக் கமல் ரசிகராம் அதனால் என்னவோ கமல் பேசுவது பல சமயங்களில் யாருக்கும் புரியாமலே இருக்கிறது
ரிமோட்டில் பேட்டரி காலியானால் அதை ஆட்டினால் , தட்டினால் அதற்கு மீண்டும் பவர் வரும் என்று எந்த இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்தார். அவருக்கு இன்னும் மோடி அரசு விருது வழங்கவில்லையா என்ன?
திமுக ஆட்சி மிகவும் நன்றாகச் செயல்படுவது போலத்தான் இருக்கிறது அதனால்தான் #எஸ்வி சேகர் வாங்கும் ஆவின் பாலிலும் #ஜெயமோகன் வாங்கும் தோசை மாவிலும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது.
அந்த
காலத்தில் தமிழ் புத்தங்களை வாசிப்பவர் எல்லா எழுத்தாளர்களின்
புத்தகங்களையும் வாசித்து மகிழ்வார்கள் ஆனால் இன்றைய எழுத்தாளர்களின்
எழுத்துகள் எல்லாம் அவர்களின் வாசகர்களைத் தவிர வேறு யாரும் படிப்பதில்லை .
அவர்களின் வாசகர்களைத் தவிர வேறு யாருக்கும் இவர்கள் ஒரு எழுத்தாளர்
என்றே தெரியாது. ஆனாலும் இந்த எழுத்தாளர்கள் தங்களைத் தமிழில் மிகச்
சிறந்த எல்லோரும் அறிந்த எழுத்தாளர்கள் என்று அவர்களே தம்பட்டம்
அடித்துச் சொல்லிக் கொள்கிறார்கள்
மீன் பிடிப்பதை கற்றுக் கொடுக்க விரும்பாத சமுகம் இது கற்றுக்கொடுத்தால் கற்றுக் கொடுத்தவனுக்குச் சமமாக வந்துவிடுவார்கள் என்று கற்றுக் கொடுப்பதைத் தவிர்க்கும் சமுகம் இன்றைய சமுகம் இதுதான் கசக்கும் உண்மை
தமிழகத்தில்
அதிகம் வாங்கப்படும் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிப்பதற்காக
வாங்கப்படுவதில்லை வாசகர்களின் அலமாரியை அலங்கரிக்கவே வாங்கப்படுகின்றன
எழுத்து
என்பது விபச்சாரத்தைப் போன்றது. முதலில் உங்களின் ஆசைக்காகவும் , பின்னர்
சில நெருங்கிய நண்பர்களுக்காகவும், பின்னர் பணத்திற்காகவும் எழுதப்படுகிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
சரி தான்...
ReplyDelete