Thursday, August 4, 2022

  பாஜக அலுவலகத்தில் மிகவும் மோசமாகத் தைக்கப்பட்ட மூவர்ணக் கொடி விற்கப்படுகிறது
 

@avargalunmaigal


 பாஜகவின்  கேவலமான தேசப்பற்று  பல் இழிக்கிறது,

 தேசியக் கொடி எந்த அளவில் இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதைப் பின்பற்றாமல் கொடிகள் தயாரித்தால் அது குற்றமாகும்.. அது தேசியக் கொடியை அவமதிப்பு செய்தற்கு இணையாகும்.. இது அனைவருக்கும் பொருந்தும்.. ஆனால் தேசியப்பற்று என்று வாய் நிறையப் பேசும் பாஜகவினர் கர்நாடக  பாஜக அலுவலகத்தில் மிகவும் மோசமாகத் தைக்கப்பட்ட மூவர்ணக் கொடியை விற்பனை செய்து வருகிறது...

இந்தியச் சுதந்திரத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப் பொதுமக்களுக்கு மூவர்ணக் கொடிகளை விற்பனை செய்வதற்காகக் கர்நாடக மாநிலத்தில் மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி விற்பனையைக் கடந்த ஜூலை 31ஆம் தேதி அமைச்சர் எஸ்.டி.சோமசேகர திறந்து வைத்தார்

 75 லட்சம் கொடிகளை விற்க நிர்ணயம் செய்துள்ளனர் கொடியின் படி, மூவர்ணக் கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இது "எந்த அளவிலும் இருக்கலாம், ஆனால் நீளத்திற்கும் உயரத்திற்கும் (அகலம்) விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்". இரண்டாவதாக, அசோக் சக்ராவை மையத்தில் வைக்க வேண்டும். மூன்றாவதாக, மூன்று நிறமும் சதவிகித அளவில் இருக்க வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் பின்பற்றாமல் அவர்களின் இஷ்டத்திற்குக் கொடிக்கான வழிமுறைகளைப் பின்பற்றாமல் தயாரித்து  விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்

இங்கு விற்கப்படும் கொடிகளைப் பணம் மட்டும்தான் செலுத்தி வாங்க முடியும் வேறு எந்த விதத்திலும் பணம் செலுத்தி வாங்க முடியாது. இது மிகப்பெரிய  ஊழலுக்கு வித்திடும் என்பது யாவரும் அறிந்ததே..


மோசமாகத் தைக்கப்பட்டாலும் விற்பனை என்னவோ மிக அமோகமாக இருக்கிறதாம்..

இந்த செய்தி டெக்கான் ஹெரால்ட்  https://www.deccanherald.com/state/top-karnataka-stories/karnataka-bjp-office-sells-poorly-stitched-tricolour-1132884.html என்ற தினசரி நாளிதழில் படத்துடன் செய்தியாக வந்து சந்தி சிரிக்கிறது.. ஆனால் சங்கிகள் இதை எல்லாம் மோடியைப் போலவே கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு எல்லாம் தேசப்பற்று என்று சொல்லி மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டுவதன்  மிக முக்கியமாக இருக்கிறது

 
@avargalபாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதுபோன்ற சிதைக்கப்பட்ட கொடிகளை விற்றால் இப்போது என்ன நடந்திருக்கும் ?
கடவுள் பயமுள்ள, திடீர்  தேசபக்தியுள்ள இந்திய குடிமகனாகிய நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்?
நமது அனைத்து  மோடி மீடியா ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களும் எப்படி செயல்படும்?
பாஜக எப்படி நடந்துகொள்ளும்? அண்ணாமலை , ஹெச் ராஜா, பாண்டே, சுமந்த ராமன்,  போன்ற மற்றவர்களும் எப்படி நடந்து இருப்பார்கள்

ஆனால் இப்படி செய்வர்கு  பிஜேபி என்பதால்,  ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக செல்லுகிறாகள்


இப்ப சொல்லுங்க தேசத்தை அசிங்கப்படுத்து  யாரு என்று?

அன்புடன்
மதுரைத்தமிழன்


2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.