Saturday, August 6, 2022

 மனிதர்களும் அவர்களது விசித்திரமான குணங்களும்
 

@avargal unamigal


நமக்குப் பழக்கமில்லாத அந்நியர்
நம்மை அவமானப்படுத்தினால்,
அவர்களின் கருத்துகள்
அர்த்தமற்றவை என்று
நாம் புறக்கணிப்போம்,

ஆனால் அதே சமயத்தில்
நமக்குப் பழக்கமில்லாத அந்நியர்
நம்மைப் பாராட்டினால்
அது உண்மையான கருத்து
என்று கருதி பொக்கிஷம் போல
 நினைத்து  நினைத்து
நாலு பேரிடம் சொல்லி மகிழ்வோம்




இன்றைய கால பெரியவர்கள்
அன்றைய காலங்களில்
பெர்ஷனல் டைரி எழுதும்
 பழக்கம் உள்ளவர்கள்
அதை யாரவது எடுத்துப் படித்தால் கோபப்படுவார்கள்.
 ஆனால்
அவர்கள் இன்றையக் காலங்களில்
 அன்றைக்கு பெரிஷன்ல் டைரியில் எழுதியது போல்
சமுக இணையதளங்களில்
 தங்கள் எண்ணங்களை
எழுதிப் பதிவிடுகிறார்கள்..
அதை நாம்  படித்து லைக் செய்யவில்லை என்றால் கோபப்படுவார்கள்
அதை நாம் பெர்ஷனல் விஷயம் என்று ஒதுக்கிவிட முடியாது




பெண்கள்
ஒரு ஆண் தன்னை பார்க்கும் பார்வை
பழகும் விதத்திலிருந்து
அவனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும்
சக்தி படைத்தவர்கள் என்று
பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும்
இறுதியில் என்னவோ
அப்படிப்பட்ட ஆண்களிடம்
ஏமாந்து  தங்களது வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள்தான் அதிகம்



அரசு ஏழைகளுக்குக் கொடுக்கும்
இலவசங்களை எதிர்த்து பலமாகக்
குரல் கொடுப்பவர்கள் யார் என்று  பார்த்தால்
மேலை நாட்டுத் தொழில் நிறுவனங்கள்
இலவசமாகத் தந்த சமுக இணைய தளங்களையும்  
இமெயில் கணக்குகளையும் பயன்படுத்தி
 தங்களை வளர்த்துக் கொள்பவர்கள்தான்



அன்புடன்
மதுரைத்தமிழன்

06 Aug 2022

3 comments:

  1. இலவசங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக எல்லோருக்கும் வழங்குவதை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கானபேருந்து இலவச பயணம் அன்றாட கூலி வேலை செய்வோர், கட்டிடப் பணி செய்வோர், சிறு கடை வைத்திருப்போர் போன்றோருக்கு மட்டும் வழங்கலாம்,ஆண்களுக்கும் வழங்கலாம். ஆனால் இத்திட்டம் வசதி படைத்த பெண்களுக்கும் வழங்கப் படுவதால் தகுதி உள்ள ஏழைகள் பாதிக்கப் படுகிறார்கள்

    ReplyDelete
  2. எல்லாமே அருமை, உண்மைதான்

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.