Thursday, August 25, 2022

 நட்புக்களுக்கு கடன் அத்தியாவசிய தேவைகளுக்கு அல்ல!!!!!!

 

@avargal unmaigal



இந்திய நண்பர்களுக்குக் கடன்
அவசர அத்தியாவசிய
தேவைகளுக்கு அல்ல
அவர்களின்
ஆடம்பர தேவைகளுக்காக
மட்டுமே
தேவைப்படுகிறது



இந்திய நண்பர்களுக்குக்
கொடுக்கும் கடன் என்பது
இந்திய வங்கிகள்
மோடியின் நண்பர்களுக்குக்
கொடுக்கும் கடன் மாதிரிதான்
அதை வராக்கணக்கில்
மட்டும்தான் சேர்க்க வேண்டும்


கஷ்டம் என்று சொன்னால்
உதவுவதற்கு ஒருத்தர் கூட
முன்வராத நிலையில்
அட்வைஸ் சொல்ல மட்டும்
க்யூவில் காத்திருப்பார்கள்



நண்பர்களிடம்
நட்பை அடகு வைத்துத்தான்
கடன் வாங்குவார்கள்
ஆனால் என்ன
முடிவில்
சேட்டுக் கடையில்
அடகு வைத்துத்
திருப்ப முடியாத
தாலி போலத்தான்
நட்பும்  திருப்ப முடியாமல் போகும்



நண்பர்களுக்குக் கடன் கொடுத்தால்
அது திரும்ப வராது
ஆனால் அவர்களுக்கு
உதவி செய்தால்
அது எப்படியும்
எந்த வகையிலாவது
ஒரு நாள் திரும்பக் கிடைக்கும்
நமக்கு




கடன்
சமுக இணைய தள
உறவை முறிக்கும்



உன் கருத்துக்கு எல்லாம்
ஆதரவு கருத்து இட்டேனே
அப்படிப்பட்ட எனக்குக்
கடன் தரவில்லை என்றால்
உனக்கு  எதிர்க் கருத்துதான் போடுவேன்
ஆக மொத்தம் கருத்துக்கள்
இங்குக் கடனுக்காகப் போடப்படுகின்றனவே
தவிர நல்ல கருத்துகளுக்காகப் போடப்படுவதில்லை





கஷ்டப்படும் போது  நட்புகளிடம்  கஷ்டங்களைச் சொல்லி கடன் கேட்காதீர்கள் உங்கள் கஷ்டங்களை அவர்களிடம்  பகிருங்கள் . அவர் உங்களின் சிறந்த நட்பாக இருந்தால் ,அவருக்கு உதவி செய்யும் சூழ்நிலை இருந்தால் அவரே தானாகவே முன் வந்து உங்களுக்கு உதவிகள் பல செய்வார்கள். நண்பன் பணக் கஷ்டத்தில் இருக்கும் போது அதனை உணர்ந்து கேட்காமலே உதவி செய்யும் நட்புதான் மிகச் சிறந்த நட்பு.

"உடுக்கை இழந்தவன் கை போல, அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"

என்ற வள்ளுவன் வாக்கின் படி அப்படி ஒரு நண்பன் உங்களுக்குக் கிடைத்தால், உலகத்தில் நீங்கள் மிக அதிருஷ்டசாலி. அப்படிப்பட்ட  நட்பை எந்த காரணம் கொண்டும் இழக்காதீர்கள்.

கொசுறு

இணைய தளப் பதிவுகளுக்கு இடப்படும் கருத்துக்கள்
பல வகைப்படும்.
நண்பர்கள் என்றால் ஒரு வகையும்
தோழிகள் என்றால்  ஒரு வகையாகவும்
நண்பர்கள் அல்லாதவர்கள் என்றால் இன்னொரு வகையும்
நமக்குப் பிடிக்காதவர்கள் என்றால் ஒரு வகையுமாக இருக்கிறது


பொய்யாகப் பேசி பதிவிடுங்கள்
உங்களுக்கு நட்புகள் அதிகமாக இருக்கும்
ஆனால் உண்மையாகப் பேசி பதிவிட்டால்
ஒருத்தராவது இருப்பார்கள்
என்றால் அது மிக அதிசயமே
பேஸ்புக் உறவுகள்



அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. பானையிலே சோறிருந்தா - பூனைகளும் சொந்தமடா...

    சோதனையை பங்கு வச்சா - சொந்தமில்லே பந்தமில்லே...

    ReplyDelete
  2. கேட்காமல் கிடைக்கும் உதவியும் அந்த நட்பும்தான் சிறந்த நட்பு. அதை அப்படியே டிட்டோ செய்கிறேன்.
    என் குடும்பத்தில் என் சகோதரி சகோதரிகள், என் நட்புகள், வலையின் மூலம் கிடைத்த என் நட்புகள் அப்படியானவர்கள் என்பதைச் சொல்லி இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன், மதுரை.

    கீதா

    ReplyDelete
  3. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆடம்பரச் செலவுகளுக்காகக் கடன் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மற்றவர்கள் முன் ஸ்டேட்டஸ் என்பதற்காகக் கல்யாணச் செலவுகளை அதீதமாக ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் திருமணங்கள் கூடி இருக்கின்றன

    கீதா

    ReplyDelete

  4. நீங்கள் சொல்வது சரிதான்.
    நீங்கள் சொல்லும் உண்மையான நட்பு வாழ்க!
    உண்மையான நட்பு கிடைக்க பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.