பெண்கள் தங்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தத் தொடங்காமலே தங்களுக்கு ஆண்களுக்குச் சமமான உரிமைகள் வேண்டுமென்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினாலே அவர்கள் ஆண்களை விட அதிகமான உரிமைகளைப் பெற்று இருப்பது புரியும்
ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னால் அவனது கடின உழைப்பும் விடா முயற்சியும் நிச்சயம் இருக்கும். ஆனால் மிக எளிதாக வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னால் ஒரு பெண் அவர் தாயாகவோ அல்லது மனைவியாகவோ இருப்பார்கள் என்று குருட்டாம்போக்கில் சொல்லி விட்டுச் செல்வதைக் கேள்விப் பட்டு இருப்போம் ஆனால் நீங்கள் கேள்விப்படாதது தோல்வி அடைந்தவன் பின்னால் எந்த பெண்ணும் இருப்பதில்லை. வெற்றிக்கு தங்களை முன்னிருத்தி பேசும் பெண்கள் தோல்வி அடையும் போது அந்த ஆணின் முட்டாள்தனமான செயல்பாடு என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்
அந்த பெண்ணிடம் நீ என் வீட்டிற்கு வந்துட்டு போனதில் மிகவும் சந்தோஷம் என்றேன், அதற்கு அந்த பெண் தாங்க்யூ சோ மச் என்று சொல்கிறாள்.. நான் பேசிய தமிழ் புரியவில்லை போல நான் சொன்னது அவள் என் வீட்டிற்கு வந்துட்டு 'போனதில்" சந்தோஷம் என்றேன்
அழகான பெண் நல்ல மனைவியாக இருப்பாள் என்பதற்கும் ,லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கும் ஆண் நல்ல கணவனாக இருப்பான் என்பதற்கும் எந்தவிதமான உறுதியும் இல்லை
நல்ல எண்ணங்களால் மட்டுமல்ல நல்ல கேமிரா , போட்டோ பில்டர் ஆஃப்களினாலும் பெண்கள் அழகாக இருப்பார்கள்,
என் மனைவியிடம் ஐ மிஸ் யூ சோ மச் என்று சொல்ல ஆசைதான் ஆனால் அவ எப்பவுமே என் கூடவே இருக்கிறாள் இப்ப நான் என்ன செய்வது
பணப்பரிமாற்றம் வங்கிகளில் மட்டுமல்ல கல்யாண வீடுகளிலும் இன்பாக்ஸ் வழிதலிலும் நடை பெறுகிறது
பெண்கள் ஒரு நல்ல ஆண்மகன் கணவனாக வர வேண்டும் என்று நினைப்பார்கள்.. அவர்களின் அகராதியில் நல்ல கணவன் என்பது நல்ல பணம் படைத்தவன்
அழகான பெண்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் நல்லவர்களாக இருக்கும் பெண்கள் எல்லோரும் மிக அழகாக இருப்பார்கள் என்பது நிச்சயம்
குண்டாக இருக்கும் பெண்களே நீங்க மெலிவதற்கு எடுக்கும் முயற்சியை விட உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களைக் குண்டாக்க முயன்றால் அது மிகவும் எளிது
ஒரு ஆண் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வதற்குக் காரணம் அந்த பெண் தவறானவள் என்பதால் அல்ல அவன் செய்த திருமணம் தவறு என்பதால்
பெண்கள் தங்களை விட வசதி குறைவான ஆணை கல்யாணாம் செய்து கொள்வார்கள் ஆனால் ஒரு போதும் ஏழ்மையில் இருக்கும் ஆணை கட்டிக் கொள்ளமாட்டார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

பூரிக்கட்டை பறந்ததா...?
ReplyDeleteஹாஹாஹா அதனாலதான் இந்தப் பதிவா இருக்குமோ!!!
Deleteகீதா
மதுரை, இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது என்றாலும் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ள முடியும். கடைசி கருத்திற்கு சமீபகாலத்தில் ..குறிப்பாக ஆண் மகன் நல்ல வேலையில் இருந்தாலும் நல்ல பையனாக இருந்தாலும், சம்பளம் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் இல்லை என்றால் ரிஜெக்டட்! பெண்களிடம் இருந்தும் பெண் வீட்டாரிடம் இருந்தும் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. என் உறவினரின் பையனுக்கு நிச்சயம் ஆகப் போகிறது என்ற சமயத்தில் பெண் வீட்டார் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். பையனுக்கு 35 வயது ஆகிறது. மிக மிக நல்ல பையன். டீசண்டாகக் குடும்பம் நடத்தும் சம்பளம் நல்ல வேலை. அம்மா மட்டுமே. வேறு உடன்பிறப்புகள் பொறுப்புகள் என்று கிடையாது. ஆனாலும் பெண்கள், குடும்பத்தினர் என்னென்னவோ எதிர்பார்க்கிறார்கள்!
ReplyDeleteகீதா
சம உரிமை, முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு பல பெண்களின் இன்றைய எதிர்பார்ப்புகள் வருத்தம் தருவதாக இருக்கின்றன என்பது வேதனை. கீதா சொல்லியிருப்பது போல எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. அனைத்து ஆண்களையும் குறை கூறுவது பொருந்தாதைப்போல.
ReplyDeleteநல்லவர்கள் எல்லாரும் அழகானவர்கள் என்ற உங்கள் கருத்து மிகப் பிடித்தது. மனத்தின் அழகே முக்கியம்.