Saturday, July 23, 2022

 

@avargal unmaigal

தேசியக் கொடியின்  பெயரில்  மோசடி  Fraud in the name of national flag

மோடிஜியின் கார்ப்பரேட் "நண்பர்களுக்கு" உதவ மற்றொரு சாத்தியமான இந்திய    மூவர்ணக்கொடி  ஊழல்  ஹர் கர் திரங்கா'  Har Ghar Tiranga program Scam



மூவர்ணக் கொடி(ஹர் கர் திரங்கா ) ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் சின்னம். இது தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளைக் குறிக்கிறது.


இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு 'ஆகஸ்ட் 13 முதல் 14 வரை தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியோ அல்லது காட்டுவதன் மூலமாகவோ 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி)இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்காக மோடி அரசு ஹர் கர் திரங்கா திட்டத்தைத்  (Har Ghar Tiranga program )தொடங்கியுள்ளது, இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு இந்தியக் கொடி அரசாங்கத்தால் வழங்கப்படும்

இதை மேலோட்டமாகப் பார்த்தால் தேசப்பற்றை வலுப்படுத்த மோடி அரசு தீட்டிய திட்டமாகவே தோன்றும் ஆனால் அது உண்மையல்ல...
மோடி தீட்டும் எந்த திட்டமும் தேசத்திற்கு மற்றும் மக்களுக்குப்  பயன் அளிக்கிறதோ இல்லையோ நிச்சயம் அம்பானி அதானி போன்றவர்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்குப் பயன் அளிக்கும்.

இந்த திட்டமும் அதற்கு விதிவிலக்கு அல்ல இது அம்பானிக்குப் பயன் அளிக்கும் திட்டமாகவே இருக்கிறது என்பது வெளியில் சொல்லப்படாத உண்மை

இதுவரை  பாரம்பரியமாக, பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி ஆகியவற்றால் செய்யப்பட்ட கையால் நெய்யப்பட்ட இந்தியக் கொடிகள் மட்டுமே அதிகாரப்பூர்வ கொடிகளாக அனுமதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு  இருக்கின்றன இதுதான் இதுவரை இருந்து வந்த நடை முறை    இதில்  , மோடி அரசு விதிகளை மாற்றி, பாலியஸ்டரால் செய்யப்பட்ட கொடிகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது.

 
@avargalunmaigal




புதிய ஹர் கர் திரங்கா திட்டத்திற்காக, ஆயிரம் அல்ல லட்சமும் அல்ல  கோடிக் கணக்கான  கொடிகளை அரசாங்க வாங்கப் போகிறது. இவைகள் அனைத்தும் பாலியஸ்டர் கொடிகளாக இருக்கும், ஏனெனில் அவை மிக மலிவானவை என்ற ஒரு காரணம் சொல்லப்படும்

இதுவரை எல்லாம் சரி ஆனால்  இதற்கான ஆர்டரை பெறப் போவது  யார் என்ற ஒரு  கேள்வி உங்களுக்கு எழலாம் அப்படி எழும் போது  இந்தியாவின் மிகப்பெரிய பாலியஸ்டர் உற்பத்தியாளர் யார்  என்ற இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள் அல்லது கூகுளில் சர்ச் செய்து பாருங்கள்.

அதற்கான விடை ஆம் - திரு. அம்பானியின் ரிலையன்ஸ் என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.

இப்போது புரிந்ததா இந்த திட்டம் தேசப்பற்றை மக்களிடையே எழுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டதா அல்லது  தனது நண்பரான அம்பானியின் செல்வத்தை மேலும் பெருக்குவதற்காக  ஏற்படுத்தப்பட்டதா என்பது உங்களுக்குப் புரியும்

நம்மை மோடிஜி  மீண்டும்  marketing mode சந்தைப்படுத்தல் பயன்முறைக்கு அழைத்துச் சென்று ஏமாற்றுகிறார் . ஒவ்வொரு  இந்த திட்டத்தின் மூலம் குறைந்தது 20 கோடி மக்களுக்கு இந்த கொடியை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள் ஒரு கொடிக்கு 1குறைந்தபட்ச விலை 5ஒ ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 20 கோடி கொடிக்கு எவ்வளவு ஆகும் என்பதை உங்களின் கணக்கிற்கே விட்டுவிடுகிறேன் . இதற்கு பணம் எங்கிருந்தும் வரவில்லை பொது மக்களிடம் இருந்து  GST  வரியாக வசூலிக்கப்பட்ட  பணம்தான் இது. இது மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் கார்பரேட் நண்பர்களின் கணக்கிற்குத் தேசப்பற்று என்று சொல்லி சேர்க்கப்படுகிறது  . நிச்சயம் இது  சங்கிகளால்  இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று வாட்ஸ்சப் யூனிவர்சிட்டி முலம் பரப்பப்டும்.

 
@avargalunmaigal


எப்பொழுதும் போல, பாஜகவும் மோடியும் வெட்கமின்றி தங்கள் கார்ப்பரேட் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு வணிகத்தை வழங்குவதற்காகத் தேசியவாதத்தின் வேஷத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பாலியஸ்டர் கொடிகளை அனுமதிக்கும் வகையில் விதிகளை மாற்றவும். பின்னர் பலநூறு கோடி பொதுமக்களின் வரிப்  பணத்தை பாலியஸ்டர் கொடிகளுக்காகச் செலவிடுகின்றனர்.


இதுதான் பாகஜவின் தேசப்பற்று


அறுதிப் பெரும்பான்மை உள்ள அரசு, பொது மக்களுக்கு எந்த நலனும் செய்யாமல், இப்படி சில திட்டங்களை மட்டும் செய்து வருவது வெட்கக்கேடானது.  மக்களே மோடி அரசு  இந்தியப் பொருளாதாரத்தை மறைக்க   இந்தியக் கொடி கொண்டு முக்காடிட்டு 75வது சுதந்திர தினத்தை  கொண்டாடச் சொல்லுகிறது நம்மால் வேறு என்ன செய்ய முடியும் அதனால் நாமும் சங்கிகளாக மாறி இந்த நிகழ்வைச்   சந்தோஷமாகக் கொண்டாடுவோம் அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை

டிஸ்கி :  இந்த திட்டம் தேசப்பற்றைக் காண்பிப்பதற்கோ அல்லது  கார்ப்பரேட் "நண்பர்களுக்கு" உதவுவதற்கோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் இந்த திட்டத்தில் மூலம் தங்களின் வீட்டில் கொடி ஏற்றும் போது அப்பாவியான பொது மக்கள் செய்யக் கூடியவை எது என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நீங்கள் செய்வது தேசக் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனைகள் கிடைக்கும்  அதிலும் முக்கியமாக இஸ்லாமியச் சமுகத்தைச் சார்ந்தவர்கள் இதைக் கவனமாகக் கையாள வேண்டும் இல்லையெனில் அது சங்கிகளால் பெரிதாகப்பட்டு பிரச்சனைகள் பூதமாகக் கிளம்பும்.


கவனிக்க வேண்டியவை : நீங்கள் ஏற்றும் கொடி கிழிந்து இருக்கக் கூடாது அதை வீடுகள் மற்றும் அலுவலகம்  போன்ற இடங்களில் ஏற்றலாம் . எந்த விதமான வாகனங்களிலும் ஏற்றவே கூடாது கொடி இறக்கையது அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி அதை டிஸ்போஸ் பண்ண வேண்டும் அதற்கு இழிவு ஏற்படுத்தும் முறையில் குப்பைத் தொட்டிகளிலோ அல்லது சாலை ஓரங்களிலோ தூக்கிப் போடக் கூடாது


நிகழ்விற்கு அடுத்த நாள் அந்த கோடி கொடிகளை என்ன செய்யப் போகிறார்கள் என்பது பற்றி இதுவரை  விளக்கங்கள் ஏதும் அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை  அதனால் என்ன நடக்கும் என்பது  இங்கு மிகப் பெரும் கேள்வி? குப்பைகளை நகர்த்தும்போது கொடியை அவமரியாதை செய்ததற்காக எத்தனை ஏழை நகராட்சி ஊழியர்கள் வேலையை இழப்பார்களோ?


அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

  1. கொண்டாடப் போகும் அறிவிலிகளும் உள...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.