Friday, July 8, 2022


@avargal unmaigal

இளையராஜா ஒன்று புனிதர் அல்ல  இந்த நியமன எம்பி பதவி அவரின் திறமைக்கு கிடைத்த பரிசும் அல்ல


ராஜாவிற்கு நியமன எம்பி பதவி கிடைத்த அறிவிப்பு வந்ததும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அதைக் கிண்டலடித்துப் பதிவிட்டும் மற்ற கட்சியினர் அது அவருக்குக் கிடைத்த கெளரவம் என்று பாராட்டுகின்றனர் அவரை கிண்டலடிக்கும் கட்சியைச் சார்ந்தவர்களில் பெரும்பாலோனோர் திமுக கட்சியினராக இருக்கின்றனர் மற்றும் பாஜக அரசியை வெறுக்கும் பொது மக்களும் இருக்கிறார்கள். அது போலப் பாராட்டுபவர் யார் என்று பார்த்தால் பெரும்பாலோனோர் பாஜக மற்றும் பாஜக ஆதரவு கட்சியினராக இருக்கின்றனர் இதில் வியப்பு ஏதும் இருக்க முடியாது


இதே போல இளையராஜாவிற்கு பாஜக ஒரு பதவியைக் கொடுக்கும் முன்னால் திமுக அவருக்குத் தமிழகத்தில் ஒரு உயர்ந்த பதவியைக் கொடுத்து இருந்தால் இப்போது இளையராஜாவைப் பாராட்டும் இதே பாஜக ஆதரவாளர்கள் எப்படி எல்லாம் பேசி இருப்பார்கள் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறியும்.

இதுதான்  இன்றைய தமிழகத்துச் சூழ்நிலை . நிலைமை அப்படி இருக்கும் போது இந்த பூமர் அங்கிள்கள் 'இளையராஜா மிகவும் ஒரு அப்பாவி. அவருக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது . அவர் மேல ஏன் இவ்வளவு வன்மத்தை கக்கிறார்கள் என்பது போலப் பதிவு எழுதி தங்களை மிக அறிவாளிகளாகக் காட்டிக்  கொண்டு இருக்கிறார்.


அட அறிவாளிகளே உங்களுக்கு ஒரு தமிழ் பழமொழி/சொல் வழக்கு தெரிந்து இருக்கலாம் ஒரு வேளை அது மறந்து போயிருந்தால் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். பனை மரத்துக்கு அடியில் நின்று  யார் பால் குடித்தாலும் கள்ளு அருந்துவதாகத்தான் மக்கள் கருதுவார்கள் அது போல  மோடி பற்றிய  புக்கிறகு  முன்னுரை எழுதிக் கொடுத்துவிட்டு அதன் பின்னால் ஒரு பதவி கிடைத்தால் அது தன் திறமைக்காகக் கிடைத்த பதவி என்று சொன்னாலும் மக்கள் அப்படி எளிதாக நம்புவதில்லை


ஒருவேளை இந்த நியமன பதவி இளையராஜா மோடி பற்றிய புத்தகத்திற்கு முன்பே கொடுத்து இருந்தால் இந்த அளவிற்குக்  கிண்டல் பதிவுகளோ அல்லது வன்ம பதிவுகளோ  வந்து இருக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவாகத்தானே இருக்கும்.


உண்மையிலே இளையராஜாவின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று இந்தியாவை ஆளும் பாஜக அரசு நினைத்து இருந்தால் அவர் பெயரிலே ஒரு மியுசிக்கல் யுனிவர் சிட்டியை நிறுவி  இருக்கவேண்டும் அல்லது அவர் பெயரிலே சங்கீதத்திற்கு என்று உயர்ந்த ஒரு விருதுவை அறிவித்து  இசையில் சாதனை புரிபவர்களுக்கு அதைக் கொடுத்து கௌரவிக்கலாமே

 அதைவிட்டு விட்டு விட்டு பதவியை  அது சம்பந்தமாக . எந்த வித ஒரு தொடர்பு இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் அதில் என்ன பெருமை கிடைக்கும்,  விலை உயர்ந்த வைரங்களைப்  பன்றிக்குப் பரிசாக அளித்தால்  அதன் மதிப்பு பன்றிக்குத் தெரியவா போகிறது. அது போலத்தான்  அதற்குரிய தகுதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளும்

நாடாளும் மன்ற எம்பி பதவி மக்களின் பிரச்சனைகளைப் பேசுபவர்களுக்கும் அல்லது மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதற்காகச்  செயல்பட்டவர்களுக்குக் கொடுத்தால் அது மிகச் சிறப்பு .அதைவிட்டுவிட்டு இசையின் மேதைக்குக் கொடுத்தால் மக்களின் பிரச்சனையைப் பேச வேண்டியவர் அங்கு மௌனமாகத்தான் இருப்பார். இளையராஜா இதுவரை மக்களுக்கான பிரச்சனைகளில் இறங்கி அதற்காக எப்போதாவது குரல் கொடுத்து இருக்கிறார் என்ன?


இந்த நாடாளுமன்ற நியமனப் பதவியை மோடி யாருக்குக் கொடுத்துக் கௌரவித்து இருக்க வேண்டும் தெரியுமா? இந்த கொரோனா காலத்தில்   மக்களின் உயிரைப் பாதுகாக்க அதற்காக மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்குக் கொடுத்து இருக்க வேண்டும் அல்லது மக்கள் உயிரைக் காக்கக் களம் இறங்கிப் போராடிய மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்துக் கௌரவித்து இருக்க வேண்டும். அப்படிச் செய்து இருந்தால் யாரும் இப்படிக் கிண்டலாகவோ அல்லது வன்மமாகவோ  சமுக இணையதளங்களில் கொட்டி இருக்கமாட்டார்கள்.

அதற்குப் பதிலாக மோடியைப் பாராட்டி இருப்பார்கள் அல்லது நியமன எம்பியானவர்களை பாராட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படி இல்லாமல் இசை திறமையை மட்டும் கொண்டவருக்கு  இப்படிப்பட்ட பதவிகள் கொடுத்தால் பாமர பொது மக்கள் இப்படிக் கிண்டல்கள் அடித்துக் கொண்டுதா இருப்பார்கள் அதுதான் நிதர்சன உண்மை


இளைய ராஜா என்ன செய்து இருக்கலாம் எனக்கு இந்த பதவியைக் கொடுத்த மோடிஜிக்கு நன்றி என்று சொல்லி அந்த பதவியை நாகரிகமாகப் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கலாம் அப்படிச் செய்து இருந்தால் அவர் இன்னும் இமையாக உயர்த்து இருப்பார் அல்லவா?


இதே இளையராஜா மோடியின் ஆட்சிக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லட்டும் இப்போது அவரை போற்றுகின்ற வாய்கள் எல்லாம் அப்பொது தூற்றிக்  கொண்டு இருக்கும்.


டாட்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ஜந்துக்கள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.