கமல்ஹாசன் குரல் வாயிலாக உலகுக்குத் தமிழ் தமிழ்நாடு, தொன்மை பெருமை வீரம் கலை பற்றியெல்லாம் பறைசாற்றும் நிகழ்ச்சி அருமை. ஆனால் என்ன கமல்ஹாசன் தனது இயற்கையான குரலிலேயே பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .
இந்த தமிழர் நாகரிகத்தின் 5000 ஆண்டுக் கால வரலாற்றைச் சித்தரிக்கும் செயல் நிகழ்வை
எழுதியவர்: முகுந்தன் ராமன்
இயக்குநர்: விக்னேஷ் சிவன்
இசை: நவநீத சுந்தர்
நடன இயக்குநர்: ஷியாமக்
வாய்ஸ் ஓவர்: கமல்ஹாசன்
திரைக்கதை: வர்தினி சங்கர்நாராயண்
அவர்களுக்கு பாராட்டுக்கள்
மிகச் சிறப்பாக நடை பெற்ற இந்த விழாவில் தமிழர்களின் இசையான பறை ஒலி முழக்கம் இல்லாமல் போது பெரும் குறைதான் எஞ்சாமி பாடலுக்குப் பதிலாக பறைக்குழுவினரை மேடை ஏற்றிப் பறை அடித்துப் பாட வைத்து இருந்தால் அது வந்தவர் எல்லோரையும் ஆட வைத்து இருக்கும், பறை இசையை ஒதுக்கி தமிழர் சிறப்பை சொல்ல முடியாது....
https://www.youtube.com/watch?v=8Kyla6dlLik
இந்த நிகழ்வை நான்கே மாதத்தில் சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறோம் என்று முதல்வர் சொல்வது பெருமையாக இருக்கலாம்... ஆனால் அந்த பெருமையைப் பேசும் பேசும் போது அதற்குள் ஒழிந்து இருக்கும் ஒரு உண்மையை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும் இந்த நிகழ்வினால் எத்துணை எத்துணை வழக்கமான அரசுப் பணிகள் மக்கள் பணிகள் முடங்கிக் கிடந்தன என்பதுதான் .. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்.. ஆனால் என்ன ஒரு விழா அதுவும் முதல்வரின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு விழா நடை பெறும் போது இந்த மாதிரியான பாதிப்புக்கள் சகஜம்தானே அதையெல்லாம் நாம் பழகித்தான் சென்று இருக்கிறோம்..
--------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் செஸ் போட்டி நடத்துவதால் என்ன பயன்?
---------------------------------------------------------------------------------------
மற்றபடி மிகச்சிறந்த ஏற்பாடுகள்தான்.. அதில் குறை சொல்ல ஏதுமில்லை தமிழர்களின் பெருமையை மோடிக்கு மற்றும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு நிகழ்வுதான் இன்றைய ஆரம்ப நிகழ்வு அதில் சந்தேகமே இல்லை.. ஆனால் நமது பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல இந்த நேரத்தில் இவ்வளவு செலவினம் தேவையா/ அதை வளர்ச்சிக்குச்செலவிட்டு அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகரித்து இந்த உலகிற்குக் காட்டலாமே என்பதுதான் எனது ஆதங்கம்
திமுகவினரால் நடத்தப்படும் எந்த மாநாடுகளுமாக இருந்தாலும் அது கட்சி மாநாடாக இருக்கட்டும் ஆட்சியின் மாநாடாக இருக்கட்டும் அதற்கு ஒரு சிறப்பு உண்டு. அதுதான் துல்லியமான திட்டமிடல் அதன் காரணமாகத்தான் இந்த விழா சிறப்புற்று இருக்கிறது . இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுப் பெருமையைக் கலை நிகழ்வின் மூலம் உலகிற்கு மட்டுமல்லாது இந்தியப் பிரதமருக்கும் சொல்ல முயற்சி செய்த ஸ்டாலின் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் நன்றி#ChessChennai2022
இந்த ஒலிம்பியாட் நிகழ்வு மூலம் உலகையே நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டோம் என்பது மாதிரியான பல பதிவுகள் வருகின்றன. உண்மையைச் சொல்லப்போனால் உலகில் உள்ள எல்லா தமிழர்களையும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு நிகழ்வுதான் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை... இவர்கள் சொல்வதைப் போல உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு என்றால் அதை உலக ஊடகங்கள் அனைத்து பெரிய செய்தியாக்கி இருக்க வேண்டும்... ஆனால் அப்படி எந்தவொரு செய்தியும் உலகில் உள்ள எந்தவொரு முன்னணி செய்தி ஊடகங்களில் பேசப்படவில்லை என்பதுதான் உண்மை. வேண்டுமென்றால் கூகுள் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளவும்.அதுமட்டுமல்ல மோடி மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த நிகழ்வு தென் இந்தியாவை தாண்டி வெளியில் பேசப்பட்டு இருக்காது என்பதுதான் உண்மை. காரணம் வட இந்திய ஊடகங்கள் தென் பகுதியில் நடப்பதை அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசமாட்டர்கள்,
அன்று இந்த சதுரங்க சூதாட்டப் போட்டிதான் பஞ்ச பாண்டவர்களைக் காட்டிற்குள் துரத்தியடித்தது. இப்போது நடக்கும் போட்டிக்கு மோடியை அழைத்து அரசியல் சதுரங்கத்தில் காய்களை ஸ்டாலின் அவர்கள் நகர்த்தி இருக்கிறார். இதன் மூலம் மோடியுடனான உறவு பலப்படுமா அல்லது பலவீனமாகுமா? ஒரு வேளை மோடியுடனான உறவுப் பலப்படும் போது தமிழக மக்களிடம் உள்ள உறவு பலவீனம் ஆகும் வாய்ப்புகள் அதிகமாகத்தான் செய்யும்...
இதையெல்லாம் கலைஞரின் மகன் முக ஸ்டாலின் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
என்னதான் மிகப் பெரிய ஒரு நிகழ்வை ஸ்டாலின் நடத்தி இருந்தாலும் அதில் ரஜினி மகள் ஐஸ்வர்யா (ஐநாவின் நடன புயல் ) & ஒய்ஜி மதுவந்தியின் பரத நாட்டிய டான்ஸ் இல்லாமல் இருந்தது எனக்கு மிகப் பெரிய குறையாகவே இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதுவல்லவோ பெரிய குறை... ஹா... ஹா...
ReplyDeleteஆயிரம் பெருமை பேசுவது இருக்கட்டும். அடித்தட்டு மக்களின் அரிசி விலையை குறைப்பது யார் ? எப்போது ?
ReplyDelete