Saturday, July 30, 2022

 செஸ் விளையாட்டு மூலம் உலக நாடுகளின் கவனம் ஸ்டாலின் மீது விழுவதை மோடியின் மீது திரும்பச் செய்வது மிக எளிது
 

@avargalunmaigal



செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழா தொடர்பாக திமுக கட்சியினரும் பாஜக கட்சியினரும் என்னால்தான் இந்த போட்டி நடை பெறுகிறது .அதனால் அதற்கான பெருமைகள் எங்கள் கட்சிக்கே சாரும் என்று இரண்டு கட்சியினரும் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

பாஜக கட்சியினர், மத்திய அரசு அனுமதி கொடுத்தானால்தான் இந்த போட்டியே நடை பெறுகிறது என்றும் , அதே நேரத்தில் மத்திய அரசு அனுமதித்தாலும் நாங்கள்தான் 100 கோடி செலவழித்தும் போட்டியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்று திமுகவினரும் சொல்லுகின்றனர். இதன் காரணமாகவே மோடியின் படம் அதிக அளவு விளம்பரங்களில் வராமல் பார்த்துக் கொண்டனர்..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரும் மல்லுக்கட்டி நீதிமன்றத்துக்கு சென்று குட்டுப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.


இப்படி பாஜக செய்வதற்குப் பதில் கொஞ்சம் மாற்று வழியில் யோசித்து இருந்தால் ஸ்டாலின் மீது விழும் ஒட்டு மொத்த கவனமும் அப்படியே மோடி மீது விழச்  செய்யலாம்.. ஆனால் அப்படிச் செய்வதற்கு வழி தெரியாமல் இருப்பதால்தான் அவர்களை சங்கிகள் என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.

சரி என்ன செய்தால் மோடியின் மீது உலக மக்களின் கவனத்தை விழச் செய்யலாம்.. அது மிகவும் எளிதுங்க.


அந்த வழி இதுதான், செஸ் போட்டில் வெற்றி பெற்றவருக்கு , மகேந்திர நிருவனத்தினரிடம் இருந்து ஒரு சிறப்பான வாகனத்தை இலவசமாக வாங்கி அதை முதல் பரிசாக டெல்லியில் வைத்துக் கொடுக்கலாம் .அது போல இரண்டாவது மூன்றாவது வந்தவர்களுக்கு சிறப்பு பரிசை மத்திய அரசு சார்பில் கொடுக்கலாம்.

அதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்து மோடியின் படம் பொறித்த பாராட்டு சான்றிதழ்களையும்  பரிசுப் பொருட்களையும் கொடுத்து தனது மாளிகையில் விருந்து கொடுக்கலாம்.  .மேலும் இந்த நிகழ்வை மோடிமீடியா உதவியுடன் பெரிய அளவில் பேச வைத்தால் போது உலக மக்களின் கவனம் எல்லாம் மோடி மீது குவியும்

மேட்டர் இவ்வளவு சிம்பிள்தான் அதைவிட்டு விட்டு சங்கிகள் மோடி படத்தைப் போடு என்று கூக்குரல் இட்டு அசிங்கப்பட்டு இருக்க வேண்டாம்.

நேரம் இன்னும் கடந்துவிடவில்லை  நான் சொன்னதைச் செய்ய தேவையான நேரம் இருக்கவே இருக்கிறது..


இதை பாஜகவினர் செய்வார்களா?



செஸ் ஒலிம்பியாட் உபியில் நடந்து இருந்தால்??   



அன்புடன்
மதுரைத்தமிழன்

30 Jul 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.