ஜிஎஸ்டி வரி இல்லாத எதாவது பாக்கி இருக்கிறதா?
டாக்டர் மோடிஜி: இந்த நோயாளியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் பிழைக்க வேண்டுமென்றால் , நாம் அவருடைய ஜிஎஸ்டி அளவை அதிகரிக்க வேண்டும்- அதை தவிர வேறு வழிகள் இல்லை.
நர்ஸ் நிர்மலா: டாக்டர். ஜிஎஸ்டியை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் 28% அல்லது 50% ?
மோடிஜீ : ஜிஎஸ்டி இல்லாத எதாவது பாக்கி இருக்கிறதா?
நிர்மலாஜீ : பிறப்பு மீதான வரி ஜீ, அதாவது பிறக்கும் குழந்தைகளுக்கு வரி.
மோடிஜீ : அது சரியாக இருக்குமா?
நிர்ம்லாஜீ : இறப்புக்கு வரி விதிக்கலாம் என்றால், பிறப்புக்கும் வரி விதிக்கலாம்தானே ஜீ;
மோடிஜீ; அப்ப சரி அதற்கும் வரி விதிப்போம்... வேற ஏதாவது ஐடியா இருக்கா?
நிர்மலாஜீ : பிறக்கும் பெண்களுக்கு 28% மற்றும் ஆண்களுக்கு 10%! என்று விதிக்கலாம்
மோடிஜீ : சூப்பர் சூப்பர் இன்னும் ஏதாவது ஐடியா இருக்கா?
நிர்மலாஜீ : பிறப்புக்கும் இறப்புக்கும் வரி விதிக்கும் நம்மால் அதற்கு காரணமாக இருக்கும் கல்யாணதிற்கும் வரி விதிக்கலாம் ஜீ
மோடிஜீ. வாவ் குட் உன் யோசனையை கேட்ட பின் எனக்கொரு யோசனை வருகிறது. கல்யாணத்திற்கு வரி விதிக்கலாம் என்றால் டைவோர்ஸுக்கும் வரி விதிக்கலாமே?
நீர்மலாஜீ : சூப்பர் ஜீ.. ஜீ அதோட இந்த மக்களை விட்டுவிடாமல் பள்ளிகூட கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி போட்டுடலாம்ஜீ
மோடிஜீ. சரியா சொன்னே...ம்ம்ம் எனக்கும் ஒரு ஐடியா தோன்றுகிறது.. நாம் ஏன் ஜிஎஸ்டிக்கு ஒரு ஜிஎஸ்டி போடக் கூடாது
நீர்மலாஜீ ஜீ நீங்க நல்லா கலக்குறீங்க ஜீ
திரைப்படங்களில், ரஜினி, அஜித், விஜய் போன்ற ஹீரோக்கள் திருடனாக இருந்தால், அவர்கள் பிடிபடுவதை பார்வையாளர்கள் ரசிகர்கள் விரும்புவதில்லை, அவர்கள் அடிக்கும் கொள்ளையையும் அவர்கள் ஒரு நல்ல செயலாகவே உணர்கிறார்கள், அதுதான் நம் நாட்டில் இப்போது நடந்து வருகிறது. மோடி கொள்ளை அடிப்பதையும் ரசிக்கவே செய்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்
#ஜிஎஸ்டி #GST
அன்புடன்
மதுரைத்தமிழன்
இந்த "கீழ்"கும்பல் ஒருநாள் அழியும்...
ReplyDeleteமுடிவில் சொன்னது சூப்பர் உண்மை தமிழரே...
ReplyDelete