இந்த காளி படம் தவறு என்றால்?
லீனா மணிமேகலை தன் புதிய ஆவணப் படமான"காளி"டீஸரில் காளிபோல் வேடமணிந்த ஒரு பெண் தன் வாயில் சிகரெட்டோடு இருப்பதாகக் காட்டி இருக்கிறார்; இது இந்துக்களின் மனதைப் புண் படுத்துவதாகவும் உடனே லீனாவைக் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது இந்துக்களின் மனத்தை வருந்தச் செய்கிறது ,அது தவறு என்று சொல்லும் சமுகம். ராமர் கையில் துப்பாக்கி ஏந்தி இருப்பது போலத் தமிழக பாஜக அண்ணாமலை போஸ் கொடுக்கும் இந்த படமும் தவறு என்று ஏன் அதே சமுகம் சொல்வதில்லை என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
என்னைப் பொருத்த வரையில் இந்த இருபடமும் தவறு, அது மட்டுமல்ல பல காலமாக நான் சொல்லி வருவது தீபாவளி பட்டாசுகளில் லஷ்மி படம் போட்டு இருப்பது ,அம்பிகா மற்றும் கணேஷ் அப்பளத்தில் அம்பிகா மற்றும் கணேஷ் படத்தைப் போட்டு இருப்பதும் தவறுதான் .இதை வாங்கும் நாம் என்ன செய்கிறோம் .அதைப் பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணுவதில்லையே.... அதைக் குப்பைத் தொட்டியில்தானே போடுகிறோம்,
மாற்று மதத்தை சார்ந்த எனக்கே ஒவ்வொரு தடவையும் இந்த அப்பளங்களை வாங்கும் போது அப்பளத்தை உபயோகித்த பின் அதன் கவரை தூக்கி ஏறியும் போது மன வருத்தத்தைத் தருகிறது .ஆனால் இது பற்றி எனக்குத் தெரிந்து இந்துக்கள் யாரும் இது பற்றி வாய் திறந்து ஆட்சேபம் தெரிவித்ததில்லை.
இது போலத் தலையணை உறையிலும் சாமி படங்கள் அது தவறு இல்லையா ?சில சமயங்களில் அந்த சாமிபடம் போட்ட தலையணை காலடியில் இருக்கும் போது அது தப்பாகத் தோன்றுவதில்லையா உங்களுக்கு..
இதை எல்லாம் விட சாமி படம் போட்ட பாத்ரும் மேட் விற்கிறார்களே அது எல்லாம் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா என்ன? அதற்கு ஏன் எதிர்ப்பு இல்லை இன்ரு வரை விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி எல்லோரும் தவறுக்கு மேல் தவறு செய்யும் போது இந்த லீனா மணிமேகலைக்கு எதிராக மட்டும் பொங்குவது ஏன்?
அவருக்கு எதிராகப் பொங்குவதற்குக் காரணம் அவர் மதத்தை இழிவு படுத்துகிறார் என்பதாலா? அல்லது அவர் மோடியை எதிர்க்கிறார் என்பதாலா?
அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களில் சாமி படங்கள் வருவதை இனிமேலாவது தவிர்க்கலாமே அல்லது தடை செய்யலாமே
அன்புடன்
மதுரைத்தமிழன்
வாங்க... விற்க...!
ReplyDeleteசாமிப் படங்கள், மத இலச்சினைகள் அது எந்த மதத்தை சேர்ந்ததாக இருந்தாலும் பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும் என்பது எனது கருத்தும்.
ReplyDeleteமதப் படங்கள், குறியீடுகள் எதிலும் இல்லாமல் இருத்தல் நலம்.
ReplyDeleteதுளசிதரன்
கடைசியில் சிவப்பு வரிகளை வழிமொழிகிறேன்
ReplyDeleteகீதா
லாமே... மனிதர்களை கடவுளர்களின் வேடங்களில் வரைவதையும் தவிர்க்கலாம்.
ReplyDelete