Saturday, July 16, 2022

 
திமுக எம்பி  செந்தில் குமார் செய்தது சரியா?

 

ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்.

Trying to Keep my cool. At times they make me to lose my patience.





அரசு விழாக்களில் பூமி பூஜை போடுவது என்பது காலம் காலமாக நாட்டில் நடந்து வருகிறது, அப்படி ஒரு நிகழ்வுதான் செந்தில் குமார் அவர்கள் பங்கேற்ற நிகழ்விலும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அரசு விழாவில் இப்படிச் செய்வது சரியா என்றால் அது தவறு என்றுதான் சொல்ல வேண்டும்..   இந்த நிகழ்வில் செந்தில் குமார் என்ன செய்து இருக்க வேண்டும் ? பூஜைக்கு ஏற்பாடு செய்த அதிகாரியிடம் அதை மென்மையாகச் சொல்லி இருக்க வேண்டும். அவரிடம் இப்படித்தான் கத்த வேண்டும் என்று  எந்த  சட்டம் இவருக்குச்  சொல்லிக் கொடுத்து இருக்கிறது. அந்த அரசு அதிகாரி கிரிமினல் குற்றம் ஏதும் செய்துவிடவில்லைதானே... மற்ற அதிகாரிகள் அலுவலர் முன்னால் அவமதிக்க எந்த சட்டம் சொல்லிக் கொடுத்து இருக்கிறது.


மேலும் அந்த மத குருவிடம்  சார் மன்னித்துக் கொள்ளுங்கள் இது மதச் சார்பற்ற அரசு நடத்தும் விழா இதற்கு உங்களைத் தவறுதலாக அழைத்து வந்து விட்டார்கள் அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அந்த குருக்களிடமும்  அமைதியாக எடுத்துச் சொல்லி அவரை சந்தோசமாக அவ்ழி அனுப்பி வைத்திருக்கலாம் அல்லது மற்ற மத குருக்களையும் உடனே அழைத்து வரச் சொல்லி சிறிது வெயிட் பண்ணி அந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்திச் சென்று இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு படத்தில் வரும் வில்லனைப் போல எடுத்து எறிந்து பேசுவது  ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல.. இவர் பல நல்ல காரியங்களைச் செய்து இருக்கலாம் அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை... ஆனால் அடி சருக்கும் போது சொல்லிக் காட்டுவதுதான் பொதுமக்களுக்கு மட்டுமல்ல அவர் கட்சியார்களுக்கும் அழகு.

இப்படி இந்த அதிகாரி கேள்வி கேட்கும் இவர் பாராளுமன்ற கட்டிடத்திற்காக மோடி பூஜைகள் செய்த போது  கண்டன குரல் எழுப்பி இருக்கிறாரா? அல்லது அது சட்டத்தில் இருக்கிறதா என்று மோடியை நோக்கி கேள்விகள் எழுப்பி இருக்கிறாரா அல்லது மோடி செய்வது தவறு இது போல மீண்டும் நடக்கக் கூடாது என்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறாரா என்ன?


சரி அதை விடுங்கள் அது  பெரிய இட சமாச்சாரம் தமிழக அரசு அலுவலங்களில் எத்தனை இடங்களில் சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன எத்தனை அலுவங்களில்  ஒரு மதத்தைச் சார்ந்த கடவுள்களின் படங்கள் இருக்கின்றன. அதை அகற்ற இந்த திராவிட மாடல் அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது அதற்காக நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறீர்கள். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்றாவது இது பற்றி தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி அதை உடனடியாக தடை செய்ய வழி செய்வாரா?


வேலூர் மத்தியச் சிறையில் இந்து மதத்தவர்களுக்கு மட்டும் கோவில் திறந்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறதாம். கிறித்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இறை வழிபாடு செய்ய அனுமதியில்லையாம். சிறுபான்மையினருக்கு எதிராக இயங்குகிறதா சிறைத்துறை? சிறுபான்மையினருக்கு எதிராக இயங்குகிறதா தமிழக அரசு?


வடகொரியாவாக மாறி வரும் இந்தியா...


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. அந்த அதிகாரி பதவியில் இருப்பார். ஐந்து வருடங்களுக்கு பிறகு எம்.பி இருப்பாரா ?

    ரொம்ப எம்புறாரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.